ரயிலில் ஏன் நல்லா தூக்கம் வருது தெரியுமா? இதுக்கு பின்னால இப்படி ஒரு விஷயம் இருக்கா! இவ்ளோ நாளா தெரியாம போச்சே
கார் பஸ்ஸைவிட நாம் ரயிலில் பயணிக்கும் போது நன்றாக தூங்கி விடுவோம். இதற்கு பின்னால் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் போது ஒரு அறிவியல் விஷயத்தை உட்பகுத்தியுள்ளனர். இதைப்பற்றி தான் இங்கே காணப் போகிறோம்.
பயணம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? கார், பஸ், ரயில் விமானம் என ஏராளமான பயண வாகனங்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் பயணத்திட்டத்திற்கு ஏற்றார் போல அந்தந்த வாகனங்களில் பயணம் செய்வார்கள். பெரும்பாலும் நீண்ட தூர பயணம் மற்றும் குறைவான செலவு பயணம் என்றால் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்வார்கள்.

ரயிலில் தான் நாம் படுத்து உறங்கிக் கொண்டே பயணிக்க முடியும். இதற்கு ஏற்றார் போல் ரயில்களில் பயண நேரமும் பெரும்பாலும் இரவு நேரத்தில் இருக்கும்படி தான் திட்டமிடப்பட்டிருக்கும். இப்படியாக ரயிலில் பயணம் செய்யும் பெரும்பாலான பயணிகள் இரவு நேரம் மட்டுமல்லாமல் பகல் நேரத்திலும் எளிதாக தூங்கி விடுவார்கள். ஆனால் நாம் கார், பஸ் போன்ற சாலையில் செல்லும் வாகனங்களில் இப்படியாக எளிதாக தூங்கி விட முடியாது.
இதற்கு காரணம் கேட்டால் எல்லாரும் எளிதாக சொல்லிவிடுவார்கள் ரயில்களில் அவ்வளவு அதிர்வுகள் இருக்காது. மேடு பள்ளங்கள் இல்லாமல் தொடர்ந்து ஸ்மூத்தாக பயணித்துக் கொண்டே இருப்பதால் மனிதர்களால் எளிதாக தூங்கி விட முடிகிறது என சொல்லி விடுவார்கள். சொல்லப்போனால் கிட்டத்தட்ட அதுவும் உண்மைதான்.

ஆனால் ரயில் பெட்டிகள் என்னதான் 100 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் சென்றாலும் ரயிலுக்குள் பெரிய அளவில் அதிர்வுகளை கொண்டு வருவதில்லை. இது எப்படி சாத்தியமாகிறது? இதற்காக என்ன செய்கிறார்கள் ரயில்வே நிர்வாகம் என்ன அறிவியல் தொழில்நுட்பத்தை இதற்காக பயன்படுத்துகிறது என்று என்று யோசித்து உள்ளீர்களா?
ஆம் இதற்காகவே ரயில் பெட்டிகள் கட்டமைக்கப்படும்போது ஒரு முக்கியமான அறிவியல் விஷயம் பின்பற்றப்படுகிறது. அதன்படி ஒரு மனித உடம்பால் 1.2 ஹெட்ஸ் அல்லது 72 பிபிஎம் அளவிலான அதிர்வுகளை மட்டுமே தாங்கிக் கொள்ள முடியும். இது அறிவியல் ரீதியிலான நிரூபிக்கப்பட்ட விஷயமாகும்.

அதற்கு மேல் அதிர்வுகள் இருந்தால் அந்த அதிர்வை ஏற்றுக் கொள்ள முடியாமல் எப்பொழுதும் உடல் ரெஸ்ட் லெஸ்ஸாக இருக்கும். இதனால் ரயில் பெட்டிகளுக்கான சஸ்பென்ஷன் செட்டப்பை தயார் செய்யும் போது இது அதிகபட்சமாக 1.72ஹெட்ஸ் அளவிலான அதிர்வுகளை மட்டுமே ரயில் பெட்டிக்குள் செலுத்தும் படி கட்டமைத்து இருப்பார்கள்.
மேலும் ரயில் தண்டவாளம் போல சமதளமான இடத்தில் செல்வதால் மேடு பள்ளங்கள் இருக்காது. இதனால் ரயில் தொடர்ந்து ஒரே அளவிலான அதிர்வுகளை ரயில் உள்ளே இருக்கும் பயணிகளுக்கு கொடுக்க முடியும். 72 ஹிட்ஸ் அளவுக்கு குறைவாக இருக்கும்படி சஸ்பென்ஷன் செட்டப்பை உருவாக்குவார்கள். இந்த சஸ்பென்ஷன் செட்டப் இருப்பதால் ரயில் பயணிகளுக்கு சொகுசான பயணம் கிடைக்கும்.

ரயில் என்னதான் 100 கிலோமீட்டர் வேகத்திற்கும் அதிகமாக சென்றாலும் உள்ளே அதிர்வுகள் 1.72 ஹிட்ஸ்க்கு அதிகமாகாமல் இருக்கும் சொல்லப்போனால் வேகம் அதிகமாக உள்ளே அதிர்வுகள் குறைவாக தான் இருக்கும். இதனால் தான் கார், பஸ் போன்ற வாகனங்களை விட ரயிலில் பயணிக்கும் போது பயணிகளால் எளிதாக தூங்கி விட முடிகிறது.
இதே நேரம் இன்னொரு விஷயத்தை நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா? நீங்கள் ரயிலில் என்ன தான் நன்றாக தூங்கினாலும் ரயில் குறிப்பிட்ட ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது அல்லது நிற்கும் போது உங்களுக்கு லேசாக முழிப்பு தட்டி விடும். பலர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாலும் ரயில் ஏதாவது ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது முழித்துக் கொள்வார்கள். இதற்கு காரணமும் இந்த அதிர்வுகள் தான்.
அதாவது ரயில் வேகமாக பயணிக்கும் போது ரயிலுக்குள்ளே இருக்கும் அதிர்வு குறைவாக இருக்கும். அதே நேரம் ரயில் குறிப்பிட இடத்தில் நிற்கும்போது அதன் வேகத்தை குறைத்துக் கொள்ளும். அப்பொழுது அதிர்வுகள் முன்பை விட சற்று அதிகமாக இருக்கும். இதை உடல் உணர்ந்து கொண்டு மாற்றம் ஏற்படுவதை உணர்த்தும் இதனால் அவர்கள் விழித்துக் கொள்வார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலருக்கும் ரயிலில் இப்படியாக ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள் என்ற விஷயமே தெரியாது. ரயிலின் கட்டமைப்பே அதிர்வுகள் இல்லாமல் தான் இருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த அதிர்வுகளை குறைப்பதற்காக ரயில்வே நிர்வாகம் மெனக்கெட்டு தனது ரயில் பெட்டிகளை தயாரிக்கும் போது அது உள்ளே கடத்தக்கூடிய அதிர்வு அளவை கண்காணித்து சஸ்பென்ஷன் செட்டப்பை பொருத்துகிறார்கள்.


Click it and Unblock the Notifications









