ஒரே இடத்திற்கு செல்ல வேண்டிய விமானங்கள் ஏன் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கின்றன தெரியுமா?

ஒரே இடத்திற்கு செல்ல வேண்டிய விமானங்கள் ஏன் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கின்றன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரே இடத்திற்கு செல்ல வேண்டிய விமானங்கள் ஏன் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கின்றன தெரியுமா?

ஒரே இடத்திற்கு செல்ல வேண்டிய விமானங்கள் சில சமயங்களில் வெவ்வேறு வழித்தடங்களில் பயணிக்கும். ஏன் விமானங்கள் இப்படி வெவ்வேறு வழித்தடங்களில் பயணம் செய்கின்றன? என நீங்கள் என்றாவது யோசித்திருக்க கூடும். இதற்கு பின்னால் உள்ள காரணங்களை எல்லாம் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஒரே இடத்திற்கு செல்ல வேண்டிய விமானங்கள் ஏன் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கின்றன தெரியுமா?

பொதுவாக இரண்டு இடங்களுக்கு இடையேயான பயணத்தை திட்டமிடும்போது, குறைவான நேரத்தில் சென்று விடக்கூடிய வழித்தடங்களைதான் விமான நிறுவனங்கள் தேர்வு செய்யும். இதற்கான காரணம் மிகவும் எளிமையானது. குறைவான தொலைவு என்றால், குறைவான எரிபொருள் மட்டுமே பயன்படுத்தப்படும்.

ஒரே இடத்திற்கு செல்ல வேண்டிய விமானங்கள் ஏன் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கின்றன தெரியுமா?

இதன்மூலம் விமான நிறுவனங்களால் ஓரளவிற்கு பணத்தை சேமிக்க முடியும். ஆனால் விமானங்கள் பயணம் செய்யும் பாதையை சில காரணிகள் பாதிக்கின்றன. இதனால்தான் ஒரே இடத்திற்கு செல்ல வேண்டிய விமானங்கள் வெவ்வேறு பாதைகளில் பயணம் செய்கின்றன. சில சமயங்களில் ஒரு சில வான் வழித்தடங்கள் மிகவும் பிஸியாக இருக்கும்.

ஒரே இடத்திற்கு செல்ல வேண்டிய விமானங்கள் ஏன் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கின்றன தெரியுமா?

அத்தகைய சமயங்களில் ஒரே வழித்தடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக விமானங்கள் பறந்து கொண்டிருக்கும். ஆனால் ஒரு விமானத்திற்கும், மற்றொரு விமானத்திற்கும் குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர்கள் இடைவெளி இருக்கும் வகையில்தான் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள், விமானங்களை அனுப்புவார்கள்.

ஒரே இடத்திற்கு செல்ல வேண்டிய விமானங்கள் ஏன் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கின்றன தெரியுமா?

இந்த இடைவெளியை உறுதி செய்ய முடியாத வகையில், வான் வழித்தடங்கள் பிஸியாக இருக்கும்பட்சத்தில், ஒரே இடத்திற்கு செல்ல வேண்டிய விமானங்கள் வெவ்வேறு வழித்தடங்களில் பயணிக்கும். சில சமயங்களில் வானிலை காரணமாகவும் விமானங்களின் வழித்தடம் மாறுபடும். உதாரணத்திற்கு காற்றடிக்கும் திசை விமானங்களை பாதித்தால், வழித்தடம் மாறுபடலாம்.

ஒரே இடத்திற்கு செல்ல வேண்டிய விமானங்கள் ஏன் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கின்றன தெரியுமா?

திட்டமிடப்பட்ட பாதையில், வானிலை மிகவும் மோசமாக இருப்பது, விமானங்களின் வழித்தடத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம். இதுபோன்ற காரணங்களால்தான் ஒரே இடத்திற்கு செல்ல வேண்டிய விமானங்கள் சில சமயங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணம் செய்கின்றன. இதுதவிர செல்ல வேண்டிய இடத்திற்கு முன்னதாகவே சில சமயங்களில் விமானங்கள் தரையிறக்கப்படும்.

ஒரே இடத்திற்கு செல்ல வேண்டிய விமானங்கள் ஏன் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கின்றன தெரியுமா?

அதாவது ஏதேனும் அவசர சூழல் சென்றால், செல்ல வேண்டிய இடத்திற்கு முன்னதாக அருகில் உள்ள வேறு ஏதேனும் ஒரு விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்படலாம். இன்ஜின் செயலிழப்பு இதற்கு ஒரு உதாரணம். இதுபோன்ற அவசர சூழல்களில் பாதுகாப்பை மனதில் வைத்து விமானங்களின் பைலட்கள் செயல்படுவார்கள்.

ஒரே இடத்திற்கு செல்ல வேண்டிய விமானங்கள் ஏன் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கின்றன தெரியுமா?

இப்படி அவசரமாக தரையிறங்க வேண்டிய விமானங்களை கையாள வேண்டிய பொறுப்பும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளுக்கு உள்ளது. இதுபோன்ற அவசர சூழல்களாலும், விமானங்களின் பாதை மாறுபடுகிறது. எவ்வாறாயினும் விமான நிறுவனங்கள் குறைவான செலவில் செல்லக்கூடிய குறைந்த தொலைவு கொண்ட பாதையைதான் விரும்புகின்றன.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 31, 2021, 20:29 [IST]
English summary
Why Do Same Airplanes Take Different Routes? Important Reasons. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+