விமான பணிப்பெண்களின் கையில் இந்த விஷயத்தை கவனிச்சிருக்கீங்களா? எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்காங்க!

விமான பணிப்பெண்கள் 2 வாட்ச்களை கட்டியிருப்பார்கள். அது ஏன்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமான பணிப்பெண்களின் கையில் இந்த விஷயத்தை கவனிச்சிருக்கீங்களா? எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்காங்க!

விமானங்களில் வேலை செய்யும்போது, ஒரு சில விமான பணிப்பெண்கள் தங்கள் கைகளில் 2 வாட்ச்களை கட்டியிருப்பார்கள். நீங்கள் விமானங்களில் பயணம் செய்திருந்தால், அதனை பார்த்திருக்கலாம். நேரம் பார்ப்பதற்கு ஒரு வாட்ச் மட்டும் இருந்தாலே போதுமானது என்னும் நிலையில், விமான பணிப்பெண்கள் எதற்காக 2 வாட்ச்களை கட்டி கொள்கின்றனர்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமான பணிப்பெண்களின் கையில் இந்த விஷயத்தை கவனிச்சிருக்கீங்களா? எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்காங்க!

விமான பணிப்பெண் வேலை என்பது பார்ப்பதற்கு வேண்டுமானால் எளிதான ஒன்றாக இருக்கலாம். ஆனால் உண்மையில் மிகவும் கடினமானது. ஒவ்வொரு பயணியும் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வார்கள் என்னும் நிலையில், அனைத்து பயணிகளிடமும் சிரித்த முகத்துடன் நடந்து கொள்ள வேண்டிய கடமை விமான பணிப்பெண்களுக்கு இருக்கிறது.

விமான பணிப்பெண்களின் கையில் இந்த விஷயத்தை கவனிச்சிருக்கீங்களா? எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்காங்க!

குறிப்பாக ஒரு சில பயணிகள் குடிபோதையில் அட்டகாசம் செய்வார்கள். அவர்களையும் கவனமாக கையாள வேண்டியது விமான பணிப்பெண்களின் கடமைகளில் ஒன்றாகும். இதற்காக அனைத்து சூழல்களிலும் மிகவும் பொறுமையாகவும், சாமர்த்தியமாகவும் நடந்து கொள்வதற்கான பயிற்சிகளை விமான பணிப்பெண்கள் பெற்றிருப்பார்கள்.

விமான பணிப்பெண்களின் கையில் இந்த விஷயத்தை கவனிச்சிருக்கீங்களா? எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்காங்க!

ஆனால் விமானம் தரையிறங்கியதும் தவறாக நடந்து கொள்ளும் பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது நேரம் குறித்த தெளிவான விளக்கத்துடன் விமான பணிப்பெண்கள் முறையான பதிலை வழங்க வேண்டும். இதற்கு விமான பணிப்பெண்கள் கைகளில் கட்டியிருக்கும் 2 வாட்ச்கள் உதவி செய்கின்றன.

விமான பணிப்பெண்களின் கையில் இந்த விஷயத்தை கவனிச்சிருக்கீங்களா? எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்காங்க!

அதாவது விமானம் வானில் பறந்து கொண்டிருக்கும் சமயத்தில் எதிர்பாராத சம்பவங்கள் ஏதாவது நடந்தால், விமானம் தரையிறங்கிய பின்னர் அதிகாரிகளிடம் துல்லியமான நேரத்துடன் அறிக்கை அளிக்க விமான பணிப்பெண்களை இந்த வாட்ச்கள் அனுமதிக்கின்றன. ஏனெனில் இவற்றில் விமானம் புறப்படும் நாடு, தரையிறங்கும் நாடு ஆகியவற்றின் நேரங்கள் இருக்கும்.

விமான பணிப்பெண்களின் கையில் இந்த விஷயத்தை கவனிச்சிருக்கீங்களா? எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்காங்க!

பல்வேறு நேர மண்டலங்களுக்கு (Time Zones) இடையே பயணம் செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். எனவே விமானம் புறப்படும் நாடு மற்றும் விமானம் சென்று சேரும் நாடு என 2 நாடுகளின் நேரமும் இருப்பது விமான பணிப்பெண்களுக்கு உதவி செய்யும். குறிப்பாக ஜெட்-லேக் (Jet-lag) போன்ற பிரச்னைகளுக்கு மத்தியில், தொலைதூர பயணங்களை மேற்கொள்ளும் விமான பணிப்பெண்களுக்கு இது நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.

விமான பணிப்பெண்களின் கையில் இந்த விஷயத்தை கவனிச்சிருக்கீங்களா? எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்காங்க!

இங்கே ஜெட்-லேக் என்பது தற்காலிகமான தூக்க பிரச்னையாகும். பல்வேறு நேர மண்டலங்களுக்கு இடையே விரைவாக பயணம் செய்யும் யார் வேண்டுமானாலும், இந்த ஜெட்-லேக் பிரச்னையால் பாதிக்கப்படலாம். இதுபோன்ற பிரச்னைகள் இருக்கும்போது, நடுவானில் என்ன நடந்தது? என்பதை கண்டறிவதற்கு, துல்லியமான நேரத்துடன் தயாராக இருப்பது மிகவும் முக்கியமானது.

விமான பணிப்பெண்களின் கையில் இந்த விஷயத்தை கவனிச்சிருக்கீங்களா? எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்காங்க!

எனவேதான் ஒரு சில விமான பணிப்பெண்கள் தங்களுடைய கைகளில் 2 வாட்ச்களை கட்டி கொள்கின்றனர். குடிபோதையில் தகராறு செய்யும் பயணிகள் பற்றிய புகார்களை அளிப்பதற்கு மட்டுமல்லாது, எந்தவொரு பிரச்னை என்றாலும் அதனை சரி செய்வதற்கு, இந்த 2 வாட்ச்களை கைகளில் கட்டும் முறை, விமான பணிப்பெண்களுக்கு உதவி செய்கிறது.

விமான பணிப்பெண்களின் கையில் இந்த விஷயத்தை கவனிச்சிருக்கீங்களா? எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்காங்க!

ஒரு சில விமான பணிப்பெண்கள் தங்கள் கைகளில் 2 வாட்ச்களை கட்டி கொள்வதற்கு மற்றொரு பொதுவான காரணமும் உள்ளது. ஒருவேளை ஒரு வாட்ச் உடைந்து விட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ, தொடர்ந்து நேரத்தை பின்பற்றுவதற்கு மற்றொரு வாட்ச் உதவி செய்யும். ஒரு வாட்ச் திடீரென பழுதடைந்தாலும் கூட மற்றொரு வாட்ச் உதவியாக இருக்கும்.

விமான பணிப்பெண்களின் கையில் இந்த விஷயத்தை கவனிச்சிருக்கீங்களா? எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்காங்க!

விமான பணிப்பெண்கள் மட்டுமல்லாது, விளையாட்டு, சினிமா மற்றும் அரசியல் என பல்வேறு துறைகளை சேர்ந்த ஒரு சிலரிடமும் 2 வாட்ச்களை அணியும் பழக்கம் இருக்கிறது. பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் டியாகோ மரடோனா, பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போன்றவர்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும்.

விமான பணிப்பெண்களின் கையில் இந்த விஷயத்தை கவனிச்சிருக்கீங்களா? எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்காங்க!

ஒரு சிலர் 2 வாட்ச்களை அணிவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஸ்டைலுக்காக ஒரு சிலர் கைககளில் 2 வாட்ச்களை கட்டி கொள்கின்றனர். செண்டிமெண்ட் காரணங்களுக்காக 2 வாட்ச்களை கட்டுபவர்களும் கூட இருக்கின்றனர். ஒரே நேரத்தில் வெவ்வேறு நாடுகளில் நேரங்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ள தொழிலதிபர்கள் போன்றவர்களும் கைகளில் 2 வாட்ச்களை கட்டி கொள்கின்றனர்.

விமான பணிப்பெண்களின் கையில் இந்த விஷயத்தை கவனிச்சிருக்கீங்களா? எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்காங்க!

ஒரே சமயத்தில் வெவ்வேறு நாடுகளின் நேரங்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளவர்கள் ஒரே கைக்கடிகாரத்தில் அதனை செய்ய முடியாதா? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். உங்களின் இந்த சந்தேகம் நியாயமானதுதான். அதற்கு ஏற்ப வாட்ச் தொழில்நுட்பமும் தற்போது பிரம்மிக்க வைக்கும் உயரத்தை எட்டி விட்டது.

விமான பணிப்பெண்களின் கையில் இந்த விஷயத்தை கவனிச்சிருக்கீங்களா? எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்காங்க!

ஆனால் அனைத்து வாட்ச்களும் ஒரே வேலையை செய்வதில்லை என்பதையும் நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். அதாவது ஒரு வாட்ச்சில் அந்த வசதி இல்லாமல் போகலாம். ஆனால் அந்த வாட்ச் சம்பந்தப்பட்ட நபரின் மனதுக்கு நெருக்கமாக இருக்கலாம். எனவே 2 வாட்ச்களை கட்டுவது என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம்.

Note: Images used are for representational purpose only.

Article Published On: Monday, July 18, 2022, 19:10 [IST]
English summary
Why do some flight attendants wear 2 watches
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+