ரயில் கிளம்பும் போது டக்குன்னு ஒரு ஆட்டம் கொடுக்குமே அது ஏன் தெரியுமா?
நாம் அனைவரும் ரயிலில் பயணிக்கும் போது பல்வேறு அனுபவங்களை பெற்றிருப்போம். அதில் நமக்கே தெரியாமல் நாம் அனுபவித்து அனுபவம் என்னவென்றால் ரயில் கிளம்பும்போது திடீரென ஒரு ஜர்க் கொடுக்கும். ஒவ்வொரு முறை ரயில் ஒரு ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும்போதும் இந்த ஜர்க் என்பது இருக்கும். இது ஏன் இருக்கிறது? இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன? என்பதை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
பயணங்களிலேயே ரயில் பயணம் தான் மிகவும் சுகமானதாகவும் அதே நேரம் பல்வேறு ரசனை தன்மைகள் நிறைந்ததாகவும் இருக்கும். நீண்ட தூர பயணத்திற்கு விமானங்களை விட ரயில் பயணம் மிக சுகமானதாக இருக்கிறது. இதனால் மக்கள் பல ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். இந்தியாவில் இரவு நேரத்தில் பயணிக்கும் ரயில்கள் அதிகம் இருப்பதால் இரவு நேரத்தில் பல ரயில்களில் பயணித்து வருகிறார்கள்.

தினம் தோறும் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் தங்கள் ரயில் பயணத்தில் அனுபவித்த ஒரு விஷயம் என்னவென்றால் ரயில் ஒரு ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும்போது திடீரென ஜர்க் ஏற்படும். பலருக்கும் இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணம் தெரியாது.
இதைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ரயிலில் உள்ள கப்ளிங் முறைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஒரு பெட்டியையும் மற்றொரு பெட்டியையும் இணைக்கும் பகுதியை கப்ளிங் என அழைப்பார்கள். இது இந்திய ரயில்வேயில் மொத்தம் இரண்டு விதமான கப்ளிங் முறை நடைமுறையில் இருக்கிறது. சென்னை ஐசிஎஃப் ஆலையில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் எல்லாம் ஸ்க்ரூ கப்ளிங் முறையில் வடிவமைக்கப்பட்டதாக இருக்கும்.

இதுவே குறைந்த எடை கொண்ட எல்எச்பி ரக ரயில் பெட்டிகள் எல்லாம் சிபிசி ரக கப்ளிங்கை கொண்டதாக இருக்கும். ஒரு ரயிலின் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்க இந்த கப்ளிங் என்பது தான் மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்த கப்ளின் தொழில்நுட்பத்தில் இணைக்கப்படும் இடத்தில் ஒரு சிறிய இடைவெளி இருக்கும்.
நின்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்த இடைவெளி என்பது இருக்கும். ரயில் இன்ஜின் கிளம்பும்போது ஒவ்வொரு பெட்டியாக இழுக்கும்போது இந்த கப்ளிங் இடையே இருக்கும் இடைவெளி என்பது குறைந்து, இழுக்கப்படும். இப்படியாக ரயில் பெட்டிகள் இழுக்கப்படும் போது இந்த இரண்டு கப்ளிங்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி தான் இந்த ஜர்க் ஏற்படுவதற்கான காரணமாக இருக்கிறது.

சென்னை ஐசிஎஃப் ஆலையில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் ஸ்க்ரூ ரக கப்ளிங்களில் அதிக அளவில் இடம் இருக்கும். இதனால் அந்த பெட்டிகளில் பயணம் செய்யும்போது அதிகமான ஜர்க் இருக்கும். எல்எச்பி பெட்டிகளில் பயன்படுத்தப்படும் சிபிசி கப்ளிங்களில் இடைவெளி குறைவாக தான் இருக்கும். இதனால் அந்த பெட்டிகளில் ஜர்க் என்பது குறைவாக தான் இருக்கும்.
இதற்காகவே ரயில் ஓட்டுநர்கள் ரயில் இன்ஜினை ஸ்டார்ட் செய்து சில கிலோமீட்டர் தூரம் வரை அதிக வேகமாக செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருப்பார்கள். இந்த நேரத்தில் தான் கப்ளிங்கள் இடையே உள்ள இடைவெளி குறைந்து ஜர்க் ஏற்படும் என்பதால் உள்ளே இருக்கும் பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக ரயில் இன்ஜின் மெதுவாக தான் தனது பயணத்தை துவங்கும்.
இருந்தாலும் சில நேரங்களில் கட்டுப்பாட்டை மீறி ரயில் டிரைவர்கள் வேகமாக ரயிலை கிளப்பி விட வாய்ப்பு இருக்கிறது. இந்த நேரத்தில் தான் ரயிலில் உள்ள பயணிகளுக்கு ஜர்க் அதிகமாக இருக்கும். சில அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் பயணிகளுக்கு பெரிய அளவில் தெரியாதா அளவிற்கு மிக மெதுவாக ரயில் இன்ஜினை நகர்த்துவார்கள். இந்த ஜர்க் என்பது ரயில் ஓட்டுநர்கள் இன்ஜினை கையாளும் திறனில் தான் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொடர்ந்து ரயில்களில் பயணிக்கும் பயணிகள் பலர் இந்த ஜர்க் அனுபவத்தை பெற்று இருப்பார்கள். ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்பது பலருக்கும் தெரியாது. இதற்கு பின்னால் இருப்பது ரயில் பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் முறைதான். இனி நீங்கள் ரயில்களில் பயணம் செய்யும்போது இது போன்ற ஜர்க் ஏற்பட்டால் இந்த விஷயத்தை கூறி அருகில் உள்ள பயணிகளையும் விழிப்புணர்வு அடைய வையுங்கள்.


Click it and Unblock the Notifications









