ரயில்கள் ஸ்டேஷனிற்குள் நுழையும் முன்பு சிக்னலில் சில நிமிடங்கள் நிறுத்தப்படும் ஏன் தெரியுமா?
இந்தியாவில் ரயில் பயணம் ஒரு முக்கியமான போக்குவரத்து வசதியாக இருக்கிறது. குறுகிய நேரத்தில், குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணிக்க ஏற்ற வாகனம் என்றால் ரயில் தான். இந்தியாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயங்குகிறது. லட்சக்கணக்கான மக்கள் இதில் பயணிக்கின்றனர்.
ரயிலில் பயணித்தவர்களுக்கு ரயில் பயணம் குறித்த பல விஷயங்கள் தெரியும். ரயில் பெட்டியில் உள்ள வசதிகள், அதில் உள்ள கருவிகள் பற்றி எல்லாம் தெரிந்திருக்கும். இப்படியாக நீங்கள் ரயிலில் பயணிக்கும் போது அதிகம் சந்தித்த பலருக்கு அதற்கான காரணமே தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றித் தான் காணப்போகிறோம்.

நீங்கள் ரயிலில் பயணிக்கும் போது ரயில் ஒரு சில ரயில் நிலையங்களுக்குள் நுழையும் முன்பு ரயில் நிலையத்திற்கு சில கி.மீ முன்பு சிக்னலுக்காக நிறுத்தப்பட்டு விடும். இப்படியாக நிறுத்தப்படும் ரயில்கள் சில நிமிடங்கள் அல்லது சில நேரங்களில் சில மணி நேரங்கள் வரை கூட சிக்னலுக்காக காத்திருக்கும்.
இது ஏன் எனப் பலருக்கும் காரணம் தெரியாது. இந்த ரயில் ஏன் வேகமாக வந்து இப்படி ரயில் நிலையத்திற்குள் செல்லாமல் ரயில் நிலையத்திற்கு அருகில் வந்து ஏன் சிக்னலில் நிறுத்தப்படுகிறது என்ற கேள்விக்கான விடையைக் காணலாம் வாருங்கள்.
ஒரு ரயில், ரயில்வே நிலையத்திற்குள் நுழைய வேண்டும் என்றால் அது எந்த பிளாட்பாரத்தில் வர வேண்டும் என்பதை அந்த ரயில் நிலைய அதிகாரிதான் முடிவு செய்வார். அப்படியாக அவர் முடிவு செய்யும் போது ஒரே ரயில் நிலையத்திற்கு, கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இரண்டு ரயில்கள் வந்துவிடும். இதனால் வேறு வழியில்லாமல் ஒரு ரயிலை மட்டுமே உள்ள அனுமதிக்க முடியும்.
எந்த ரயிலை முதலில் அனுமதிக்க வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்வார். அதன்படி அவர் இரண்டாவதாக ஒரு ரயிலை அனுமதிக்க முடிவு செய்துவிட்டால் அந்த ரயில் சிக்னல் போட்டு நிறுத்தப்படும் முதலாவதாக வந்த ரயில் கிளம்பிய பின்பே இரண்டாவதாக வந்த ரயில் அனுமதிக்கப்படும்.
சில நேரம் வேறு வேறு நேரத்தில் ரயில் வரும் என்பதால் ஒரே பிளாட்பாரத்தில் நிறுத்த திட்டமிட்டிருப்பார். ஆனால் அதில் ஏதாவது ஒரு ரயில் காலதாமதமாக வந்தால் மற்ற ரயில் நேரத்தைப் பாதிக்கும் இப்படியான சூழ்நிலைகளிலும் ஒரு ரயில் சிக்னல் போட்டு பிளாட்பாரத்திற்குள் நுழையவிடாமல் நிறுத்தப்பட்டிருக்கும்.
இப்படியாக இரண்டு ரயில்கள் வருகிறது என்றால் எந்த ரயிலுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற ஒரு விதிமுறையை ரயில்வே நிர்வாகம் பின்பற்றி வருகிறது. இந்தியாவில் எல்லா ரயில் நிலையங்களுக்கும் ராஜ்தானி, சதாப்தி ரயில்களுக்குத் தான் முன்னுரிமை வழங்கப்படும். அதன் பின்னர் சூப்பர் பாஸ்ட் ரயில்களுக்கும், அதன் பின்னர் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கும், கடைசியாகத் தான் பாசஞ்சர் ரயில்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சில நேரங்களில் ரயில் நிலையத்திற்கு முன்னர் சில மணி நேரம் வரை நிறுத்தப்பட்டிருக்கும். இது அவ்வப்போது நடக்கும் ஒரு நிகழ்வு தான். இதற்குக் காரணம் முன்னர் பிளாட்பாரத்தில் இருக்கும் ரயில் கிளம்புவதில் ஏதாவது பிரச்சனை இருக்கும். அல்லது பழுதாகியிருக்கும். இப்படி இருக்கும் போது மற்ற ரயில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
நாம் பல நேரங்களில் ரயிலில் பயணிக்கும் போது ரயில் இப்படியாக சிக்னலுக்காக ரயில் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் அதற்கான காரணம் பலருக்குத் தெரியாமல் இருந்திருக்கும். இப்பொழுது உங்களுக்கு அந்த காரணம் தெரிந்துவிட்டது.இது புதிய தகவலாக இருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications