அட! கருமமே இதான் காரணமா? கார் டயரில் நாய்கள் உச்சா போவதைத் தடுப்பது எப்படி?

நாய்கள் அதிகமாக கார்களின் டயர்களில் உச்சா போவதை நாம் காண முடியும். இப்படியாக நாய்கள் உச்சா போவதற்கு கார் டயரை தேர்வு செய்ய என்ன காரணம்? இதனால் டயருக்கு ஏதாவது பிரச்சனை வருமா? இதை எப்படித் தடுப்பது? இது குறித்த விரிவான தெளிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

புதிதாக கார் வாங்கிய நம்மில் பலர் காரை பத்திரமாகச் சிறு தூசி கூடப் படாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என நினைப்போம். அதற்கான காரை வெயிலில் நிறுத்தாமல், காரை சரியான நேரத்தில் சர்வீஸ் செய்து எல்லாம் பாதுகாப்போம். ஆனால் நம்மால் தடுக்க முடியாத ஒரே விஷயம் பொது வெளியில் காரை நிறுத்தியிருக்கும் போது காரில் நாய்கள் வந்து உச்சா போவதை தான்.

நம்மில் பலருக்கு அந்த அனுபவம் இருக்கும். காரை சாலையில் பார்க்கிங்கில் நிறுத்தியிருக்கும் போது அங்கு வரும் நாய்கள் முதலில் நம் காரின் டயரை தன் மூக்கால் நுகர்ந்து பார்க்கும். பின்னர் தன் காலை தூக்கி அந்த டயரில் உச்சா போகும். இதை நாம் தடுக்க நினைத்தாலும் முடியாது நாம் தடுக்க நினைப்பதற்குள் நாய்கள் நம் காரின் டயரில் உச்சா போய்விடும்.

பலர் சரி டயரில் தானே போகிறது என விட்டு விடுவார்கள். சிலருக்கு இதைப்பார்த்ததும் எரிச்சல் தான் வரும் இப்படியாக நாய்கள் கார் டயரில் உச்சா போவதால் கார் டயருக்கு ஏதும் ஆபத்து வருமா? என்பதைத் தெரிந்து கொள்ளும் முன் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நாய்கள் ஏன் கார் டயரில் மட்டும் உச்சா போகிறது என்பதைத் தான். நாய்கள் தனக்கான ஜோடியை தேடும் முயற்சியே இது.

நாம் நன்றாகக் கவனித்துப் பார்த்தால் நாய்கள் ஒரு டயரில் உச்சா போகும் முன்பு அந்த டயரை தன் மூக்கால் முகர்ந்து பார்க்கும். பொதுவாக நாய்கள் தன் ஜோடியை தேடும் போது தன் உச்சாவின் வாசனை மூலமாகத் தான் தன் ஜோடிகளுக்குத் தகவலைச் சொல்லும். இதற்காக நாய்கள் தேர்வு செய்யும் இடம் தான் காரின் டயர். ஆனால் கார் டயர் மட்டும் ஒரே இடமில்லை ஒரு போல் கம்பம் உள்ளிட்ட இடங்களில் செங்குத்தான இடங்களைத் தான் இப்படியாக உச்சா போவதற்குத் தேர்வு செய்யும்.

இதற்கு முக்கியமான காரணம் தன் ஜோடி நாயின் மூக்கு இருக்கும் உயரத்தில் சரியாக உச்சா பேனால் தான் தன் ஜோடியை அதை எளிதாக மோந்து பார்க்க முடியும் என்பதால் இப்படியாகச் செய்கிறது. இதில் காரை டயரை நாய்கள் அதிகம் தேர்வு செய்கிறது.இதற்கு முக்கியமான காரணம் டயரிலிருந்து வரும் ஸ்மல் தான். கார் டயரிலிருந்து வரும் ரப்பரின் வாசம் நாய்களை ஈர்க்கிறது. அது தான் நாய்கள் டயர்களில் உச்சா போவதற்கு முக்கியமான காரணம்.

இது மட்டுமல்ல நாய்கள் டயரில் உச்சா போனால் அதன் ஸ்மல் அது தரையில் உச்சா போவதை விட அதிக நேரம் நீடித்திருக்கும்.இதனால் அதன் ஜோடி அதை மோந்து பார்ப்பதற்கு வாய்ப்பு அதிகம் இதன் காரணமாகவே நாய்கள் காரின் டயரை தேர்வு செய்கின்றன. ஆனால் காரில் டயரில் நாய் உச்சா போனால் அது டயருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்று கேட்டால் இல்லை காரின் டயரில் ரப்பரால் ஆனது இதனால் எந்த பிரச்சனையும் இருக்காது.

ஆனால் டயர் பொருத்தப்பட்ட ரிம்கள் நாய்கள் உச்சாப்போவதால் எளிதாகப் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இன்று அலாய் வீல்கள் வந்துவிட்டதால் துருப் பிடிக்க வாய்ப்பு இல்ல ஆனால் பழைய வீல்களில் துருப் பிடிக்கும் தன்மை கொண்ட பாகங்கள் இருந்தன. இது மிகப்பெரிய பிரச்சனை தான். இதனால் கார் டயரில் நாய்கள் உச்சா போவதைத் தடுக்க காரை பார்க்கிங்கில் நிறுத்தும் போது துணி, பிளேவுட், காட்போர்டு ஆகியவற்றைக் கொண்டு டயரை மூடி வைப்பது மூலம் இதைத் தடுக்கலாம்.

இல்லை வெளியில் கார கொண்டு செல்லும் போது நாய்கள் இப்படி உங்கள் கார் டயரில் உச்சா போனால் உடனடியாக அந்த இடத்தில் தண்ணீரை ஊற்றி விடுவது சிறந்தது. மீண்டும் வீட்டிற்கு வந்த பிறகு அந்த டயரை சோப்பு போட்டு கழுவி விடுது மேலும் சிறந்தது. கார் டயரில் நாய்கள் உச்சா போவது பெரிய பிரச்சனையில்லை என்றாலும் நிச்சயம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் தான்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 21, 2022, 11:56 [IST]
English summary
Why dogs always urinate on car tyres know all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+