Just In
- 47 min ago
இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க
- 1 hr ago
எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கான முன்பதிவுகள் துவக்கம்!! இந்தியாவின் முதல் செயல்திறன்மிக்க பிஎம்டபிள்யூ கார்..!
- 1 hr ago
பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... முக்கிய விபரங்கள் வெளியானது
- 3 hrs ago
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!
Don't Miss!
- Finance
கவனிக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்.. ஈஸி டிரிப் பிளானர்ஸ் ஐபிஓ.. நல்ல வாய்ப்பு..!
- Movies
என்னை தேவதையாக்கிய தாய்மை.. நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோஷூட் நடத்திய 'எருமை சாணி' ஹரிஜா!
- Sports
எரியுற தீயில் எண்ணெய ஊத்துறதா? ..... டக் அவுட்டான கோலி... மறைமுகமாக கடுப்பேத்தும் க்ரீம் ஸ்வான்
- News
நிலக்கோட்டையின் கலவர நிலவரம்.. சமாளிப்பாரா அதிமுக வேட்பாளர் எஸ்.தேன்மொழி?
- Lifestyle
நீங்க சாப்பிடும்போது இந்த அறிகுறி தெரியுதா? அப்ப அது பிங் உணவுக் கோளாறா இருக்கலாமாம்... ஜாக்கிரதை..!
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விமானங்களில் பயணிகளின் பாதுகாப்பிற்கு பாராசூட் வழங்கப்படாது... ஏன் தெரியுமா? அதிர வைக்கும் காரணம்
விமானங்களில் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஏன் பாராசூட்கள் வழங்கப்படுவதில்லை? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்களில் பல்வேறு ஆச்சரியமான விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன. எவ்வளவோ விஷயங்களை தேடி தேடி படித்தாலும் கூட, விமானங்களை பற்றி இன்னும் பலருக்கும் ஏராளமான சந்தேகங்கள் இருக்கவே செய்கின்றன. விமானங்களில் ஏன் பாதுகாப்பிற்காக பாராசூட் (Parachutes) வழங்கப்படுவதில்லை? என்பது அவ்வாறான சந்தேகங்களில் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

ஆம், கமர்ஷியல் விமானங்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக பாராசூட்கள் வழங்கப்படுவது கிடையாது. இது ஏன்? என்பது குறித்த சந்தேகம் நம்மில் பலருக்கும் மிக நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. ஆனால் உங்களின் இந்த நீண்ட நாள் சந்தேகத்திற்கு இன்று விடை கிடைக்க போகிறது. விமானங்களில் ஏன் பாராசூட்கள் வழங்கப்படுவதில்லை? என்பதை இந்த செய்தியில் விளக்கியுள்ளோம்.

கமர்ஷியல் விமானங்களில், பயணிகளுக்கு பாராசூட்கள் வழங்கப்படாததற்கு மூன்று மிக முக்கியமான காரணங்கள் கூறப்படுகின்றன. அவை ஒவ்வொன்றையும் பின்வரும் ஸ்லைடர்களில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பாராசூட்கள் பருமனானவை மற்றும் விலை உயர்ந்தவை:
முதலில் விமானத்தில் உங்கள் இருக்கைக்கு அடியில் பாராசூட்களை வைக்கவே முடியாது. ஏனெனில் பாராசூட்கள் மிக பருமனாகவும், ஹெவியாகவும் இருக்கும். இதன் காரணமாக அதிக அளவிலான இடத்தை பாராசூட்கள் அடைத்து கொள்ளும். அத்துடன் இதன் மூலமாக விமானத்தின் மொத்த எடையும் வெகுவாக அதிகரித்து விடும்.

மேலும் பாராசூட்களை முறையாக பராமரிக்க வேண்டியதும் அவசியம். பாராசூட்களுக்கு ரெகுலரான இன்ஸ்பெக்ஸன் மற்றும் ரீபேக்கிங் தேவைப்படும். இப்படிப்பட்ட சூழலில் விமானங்களில் பயணிக்கும் நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு பாராசூட்களை வழங்குவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அப்படியே வழங்கினாலும் அதற்கு அதிகமாக செலவு ஆகும். இது விமான பயணங்களை இன்னும் விலை உயர்ந்ததாக மாற்றி விடும். ஏற்கனவே விமானங்களில் பயணிப்பதற்கு அதிகமாகதான் செலவாகி வருகிறது. அதிக கட்டணம் காரணமாக விமானத்தில் பறக்க வேண்டும் என்ற கனவை பலரால் நிறைவேற்ற முடியாத சூழல் இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் விமானங்களில் பயணிக்கும் அனைவருக்கும் பாராசூட்களை வழங்கினால், டிக்கெட் கட்டணத்தை இன்னும் உயர்த்த வேண்டிய நிலைக்கு விமான நிறுவனங்கள் தள்ளப்படும். இதுபோன்ற காரணங்களாலும் விமானங்களில் பாராசூட் வழங்கப்படுவதில்லை.

வழி இல்லை!!
தற்போது உள்ள வழக்கமான விமானங்களில், பாராசூட்கள் மூலம் குதிப்பதற்கு வசதியான வழிகள் எதுவும் இல்லை. விமானங்களில் பாராசூட் வழங்கப்படாததற்கு இதுவும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்பெஷல் ஜம்ப்பிங் எக்ஸிட் (Special Jumping Exit) அமைப்பை ஏற்படுத்தி விமானங்களை ரீ-டிசைன் செய்தால் வேண்டுமானால், அதைப்பற்றி யோசிக்கலாம்.

அதை விடுத்து வெறுமனே வழக்கமான விமானங்களின் கதவு அல்லது எமர்ஜென்ஸி டோர் வழியாக பாராசூட் மூலம் குதிப்பது என்பது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் நீங்கள் விமானத்தின் இறக்கை அல்லது வால் பகுதியில் மோதி விடக்கூடிய அபாயம் இருக்கிறது. எனவே கேபினின் பின்புறத்தில் சரிவுப்பாதை போன்ற அமைப்பை நிறுவ வேண்டிய தேவை உள்ளது.

பயிற்சி:
நம்மில் எத்தனை பேருக்கு பாராசூட்களை முறையாக ஓபன் செய்து, பாதுகாப்பாக தரையிறங்க தெரியும்? என்ற கேள்வியை உங்களை நீங்களே கேட்டு கொள்ளுங்கள். உண்மையில் நம்மில் பலருக்கும் அந்த விஷயம் தெரியாது. குறைந்தபட்ச பயிற்சி கூட இல்லாமல், பயணிகளால் பாராசூட்களை சரியாக கையாள முடியாது என்பதுதான் யதார்த்தம்.

இதன் காரணமாகவும் விமானங்களில் பாராசூட்கள் வழங்கப்படுவது கிடையாது. அதாவது பயிற்சி இல்லாதவர்களுக்கு பாராட்சூட்களை வழங்கினாலும் கூட அது பயனற்ற செயல் என்றுதான் இதனை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. போதிய பயிற்சி இல்லாதவர்களால், சாதாரண சமயங்களிலேயே பாராசூட்களை சரியாக கையாள முடியாது.

நிலைமை இப்படி இருக்க அவசர சூழ்நிலைகளில் மனம் மிகுந்த அழுத்தத்தின் கீழ் இருக்கும். அப்போது உரிய பயிற்சி இல்லாமல் பாராசூட்களை கையாள்வது நிலைமையை இன்னும் சிக்கலாக்கி விடும். மேலும் ஒரு முறை விமானத்தில் பயணிப்பதற்காக பாராசூட்களில் பயிற்சி பெறுவதும் நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒரு விஷயமாக இருக்கிறது.