பசிபிக் கடல் மீது பறப்பதை தவிர்க்கும் பைலட்கள்... விமானங்கள் சுற்றி செல்லும் மர்மம் என்னனு தெரியுமா?

பசிபிக் பெருங்கடல் மீது பறப்பதை பைலட்கள் தவிர்த்து விடுகின்றனர். இதுகுறித்து விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பசிபிக் கடல் மீது பறப்பதை தவிர்க்கும் பைலட்கள்... விமானங்கள் சுற்றி செல்லும் மர்மம் என்னனு தெரியுமா?

உலகின் பெரும்பாலான விமான நிறுவனங்கள் பசிபிக் பெருங்கடலின் மீது பறப்பதை தவிர்த்து வருகின்றன. அதாவது அமெரிக்காவையும், ஆசியாவையும் இணைக்கும் வழித்தடங்களில் பசிபிக் பெருங்கடலின் மீது பறப்பதை பெரும்பாலான கமர்ஷியல் விமான நிறுவனங்கள் தவிர்த்து விடுகின்றன. அதற்கு பதிலாக நிலப்பரப்புகள் நிறைந்த பாதையில் சுற்றி செல்லும் வழியை தேர்ந்து எடுக்கின்றன.

பசிபிக் கடல் மீது பறப்பதை தவிர்க்கும் பைலட்கள்... விமானங்கள் சுற்றி செல்லும் மர்மம் என்னனு தெரியுமா?

கமர்ஷியல் விமானங்கள் பசிபிக் பெருங்கடலின் வழியே நேராக பயணிக்காமல் சுற்றி செல்வது ஏன்? என்ற சந்தேகம் உங்களுக்கு தற்போது எழலாம். ஆனால் இப்படி ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடனே உங்கள் மனதில் நீங்களாகவே ஒரு கற்பனையை செய்து கொள்வீர்கள். அதாவது பாதுகாப்பு கருதிதான் பசிபிக் பெருங்கடலின் மீது பறப்பதை கமர்ஷியல் விமானங்கள் தவிர்க்கின்றன என நீங்கள் நினைக்கலாம்.

பசிபிக் கடல் மீது பறப்பதை தவிர்க்கும் பைலட்கள்... விமானங்கள் சுற்றி செல்லும் மர்மம் என்னனு தெரியுமா?

நீங்கள் இவ்வாறு நினைப்பது ஏன்? என்பதை எங்களால் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் இருப்பதிலேயே பசிபிக் பெருங்கடல்தான் மிகப்பெரியது மற்றும் ஆழமானது. எனவே பசிபிக் பெருங்கடல் மீது பறக்கும்போது விமானத்தில் ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டால், பைலட்களால் அதனை சமாளிக்க முடியாமல் போய் விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பசிபிக் கடல் மீது பறப்பதை தவிர்க்கும் பைலட்கள்... விமானங்கள் சுற்றி செல்லும் மர்மம் என்னனு தெரியுமா?

அத்துடன் சுற்றிலும் நீரால் சூழப்பட்டிருப்பதால், விமானத்தை பாதுகாப்பாக லேண்ட் செய்வதில் பைலட்கள் மிக கடுமையான பிரச்னைகளை சந்திக்க கூடும். இதுவே நிலப்பரப்பின் வழியாக பயணித்தால், ஏதாவது அவசரம் எனும் பட்சத்தில், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி விட முடியும். இதனால் பாதுகாப்பு கருதியே பசிபிக் பெருங்கடலை விமானங்கள் தவிர்க்கின்றன என்பது உங்கள் எண்ணமாக இருக்கும்.

பசிபிக் கடல் மீது பறப்பதை தவிர்க்கும் பைலட்கள்... விமானங்கள் சுற்றி செல்லும் மர்மம் என்னனு தெரியுமா?

இது கொஞ்சம் உண்மைதான். பொதுவாக பயணம் செய்யும் வழித்தடத்தை திட்டமிடும்போது, ஏர்போர்ட்கள் அதிகம் உள்ள வழியைதான் பைலட்கள் தேர்வு செய்வார்கள். இது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதி. இவ்வாறான வழித்தடத்தை தேர்வு செய்யும்போது, அவசர கால சூழல்களில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி விடலாம்.

பசிபிக் கடல் மீது பறப்பதை தவிர்க்கும் பைலட்கள்... விமானங்கள் சுற்றி செல்லும் மர்மம் என்னனு தெரியுமா?

ஆனால் பசிபிக் பெருங்கடலின் மீது பறப்பதை பைலட்கள் தவிர்ப்பதற்கு இதுதான் முதன்மையான காரணம் என சொல்லி விட முடியாது. எரிபொருள் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பசிபிக் பெருங்கடலின் மீது பயணம் செய்வதை பைலட்கள் தவிர்க்கின்றனர். இதுதான் உண்மையான மற்றும் முதன்மையான காரணம்.

பசிபிக் கடல் மீது பறப்பதை தவிர்க்கும் பைலட்கள்... விமானங்கள் சுற்றி செல்லும் மர்மம் என்னனு தெரியுமா?

வெயிட்... வெயிட்... ஒரே குழப்பமாக இருக்கே என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் இதுதான் உண்மை. விமான சேவை என்பது தொழிலின் ஒரு பகுதிதான் என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம். லாபத்தை அடிப்படையாக கொண்டே தொழில் இயங்குகிறது. எனவேதான் எரிபொருள் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் பைலட்கள் தங்கள் டிரிப்களை திட்டமிடுகின்றனர்.

பசிபிக் கடல் மீது பறப்பதை தவிர்க்கும் பைலட்கள்... விமானங்கள் சுற்றி செல்லும் மர்மம் என்னனு தெரியுமா?

இதன்மூலம் செலவை குறைத்து, லாபத்தை உயர்த்த முடியும். உங்களுக்கு இன்னும் சரியாக புரிந்திருக்காது என நினைக்கிறோம். நேரான வழியில் செல்வதை தவிர்த்து விட்டு, அதற்கு பதிலாக வளைவான பாதையில் சுற்றி சென்றால், எப்படி எரிபொருளையும், நேரத்தையும் மிச்சம் பிடிக்க முடியும்? என்ற சந்தேகம் உங்களுக்கு தற்போது எழுந்திருக்கும்.

பசிபிக் கடல் மீது பறப்பதை தவிர்க்கும் பைலட்கள்... விமானங்கள் சுற்றி செல்லும் மர்மம் என்னனு தெரியுமா?

இந்த இடத்தை பொறுத்தவரை, நேரான வழியை விட, வளைவான பாதைதான் குறைவான தூரம் கொண்டது. அதாவது பக்கமாக இருக்கும். நேரான வழியை காட்டிலும் வளைவான பாதை தூரம் குறைவானது என்பதே பசிபிக் பெருங்கடலின் மீது பறப்பதை விமானங்கள் தவிர்ப்பதற்கான முதன்மையான காரணமாக இருக்கிறது.

பசிபிக் கடல் மீது பறப்பதை தவிர்க்கும் பைலட்கள்... விமானங்கள் சுற்றி செல்லும் மர்மம் என்னனு தெரியுமா?

உண்மையில் தட்டையான உலக வரைபடங்கள்தான் (Flat Maps) இந்த விஷயத்தில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றன. ஏனென்றால் பூமி தட்டையானது கிடையாது. மாறாக பூமி கோள வடிவமுடையது. இதன் விளைவாக இரண்டு இடங்களுக்கு இடையே குறுகிய தூரத்தை நேரான வழிகள் வழங்காது. விமான நிறுவனங்கள் வளைவான பாதையை தேர்ந்து எடுக்க இதுவே காரணம்.

பசிபிக் கடல் மீது பறப்பதை தவிர்க்கும் பைலட்கள்... விமானங்கள் சுற்றி செல்லும் மர்மம் என்னனு தெரியுமா?

இதுதவிர ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று, கடல் மேல் பறப்பதை தவிர்ப்பதில் பாதுகாப்பு காரணங்களும் இருக்கின்றன. பசிபிக் பெருங்கடலின் மீது பறக்கும் நேரத்தை குறைப்பதன் மூலமாக, தேவைப்பட்டால் உடனடியாக எமர்ஜென்ஸி லேண்டிங்கை செய்ய முடியும். ஆனால் இது இரண்டாம் பட்ச காரணம்தான். எரிபொருள் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துவதே முதன்மையான காரணம்.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Thursday, January 9, 2020, 15:28 [IST]
English summary
Why Don’t Commercial Flights Fly Over The Pacific Ocean? . Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+