பெயர் மட்டும் தான் பிளாக் பாக்ஸ் ஆனால் இது ஆரஞ்ச் நிறத்தில் தான் இருக்கும், இதற்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா?
விமானம் விபத்தில் சிக்கினால் எப்படி விபத்தில் சிக்கியது எனக் கண்டறியும் கருவியான பிளாக்ஸ் பாக்ஸ் ஏன் கருப்பு நிறத்தில் இல்லாமல் ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது என்பது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

பலருக்கு விமான பயணம் என்றால் மிகவும் பயம். விமானம் விபத்தில் சிக்கிவிட்டால் உயிரே போய்விடும் என்ற பயத்தால் சிலர் விமானத்திலேயே ஏற பயப்படுவார்கள். மற்ற போக்குவரத்து வாகனங்களை விட அதிகமாக விபத்தில் சிக்கும் அபாயம் கொண்டது விமானம் தான். பூமியுடன் எந்த தொடர்பும் இல்லாமல் பயணிப்பதால் இதில் ரிஸ்க் அதிகம் தான்.

இப்படியாக ஏதாவது விமான விபத்து நடந்து விட்டால் செய்திகளில் அதிகம் இடம் பெறும் வார்த்தை பிளாக் பாக்ஸ் தான். விமான விபத்து நடந்ததும். ஒரு குழு விமானத்தில் உள்ள இந்த பிளாக்ஸ் பாக்ஸ் எங்கு இருக்கிறது எனத் தேட சென்று விடுவார்கள். அவர்கள் தேடிக் கண்டுபிடித்து அந்த பிளாக் பாக்ஸை எடுத்துவிட்டால் அதில் இந்த விமானம் ஏன் விபத்தில் சிக்கியது என்பது தெரிந்துவிடும். விமானத்தின் காக்பிக்பிட் உள்ள சத்தம் அனைத்தும் இந்த பிளாக் பாக்ஸில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

எந்த வகையான விமானமாக இருந்தாலும் சரி பிளாக் பாக்ஸ் என்பது கட்டாயம் இருக்கும். அதில் பதிவான விஷயங்களை வைத்து விமான விபத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய முடியும். மேலும் எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது. அந்த தவறு மீண்டும் நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட விஷயங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். பலருக்கு இந்த பிளாக்ஸ் பாக்ஸ் எப்படி இருக்கும் என் விஷயம் தெரியாது அதற்கு முன்னாள் நாம் பிளாக் பாக்ஸ் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பிளாக்ஸ் பாக்ஸ் என்ற விஷயம் ஆஸ்திரேலியாவில் தான் கடந்த 1950களில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. அதில் பிசிக்கல் மேக்னடிக் டேப் ஓடப்பட்டு அது காக்பிட்டில் ஆங்காங்கே இருக்கும் மைக்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதில் காக்பிட்டில் பதிவாகும் ஒலிகள் அனைத்தும் ரெக்கார்டு செய்யப்படும்.

இந்த பிளாக் பாக்ஸ் நெருப்பு கூட எரிக்க முடியாத அளவிற்குப் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருக்கும், நீர், நெருப்பு, குண்டு, என எதுனாலும் இந்த பிளாக்ஸ் பாக்ஸை சேதப்படுத்த முடியாதவாறு டிசைன் செய்யப்பட்டிருக்கும். இதனால் விமானம் விபத்தில் சிக்கினால் அதன் காரணத்தை இதில் கண்டுபிடிக்க முடியும் என்பதே இதன் பயன்பாடு.

பின்னர் தொழிற்நுட்பம் வளர வளர மேக்னேக்டிக் டேப் எல்லாம் மாற்றப்பட்டு டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டது. மேலும் ஒலிப் பதிவு மட்டுமல்லாமல் விமானத்தின் மற்ற தகவல்களும் பதிவாகும் வகையில் மாற்றப்பட்டது. இன்று உலகில் இருக்கும் ராணுவ விமானம் முதல் பயணிகள் விமானம், சரக்கு விமானம் என எல்லா வகையான விமானங்களிலும் இந்த பிளாக் பாக்ஸ் இருக்கும்.

சரி இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். இந்த பிளாக்ஸ் பாக்ஸிற்கு ஏன் இந்த பெயர் வந்தது? இன்று இருக்கும் பிளாக் பாக்ஸ்கள் ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது அப்பொழுது ஏன் அந்த பெயர் என யோசிக்கலாம். முதலில் பிளாக் பாக்ஸ் தயாரிக்கும் போது அதைக் கருப்பு நிறத்தில் தான் வடிவமைத்தனர். அதனாலேயே அதற்கு பிளாக் பாக்ஸ் எனப் பெயரிட்டனர்.

ஆனால் விமானம் விபத்தில் சிக்கினால் கருப்பு நிறத்தில் இருக்கும் பிளாக் பாக்ஸை கண்டுபிடிப்பது கடினம் அதனால் அதை வெகு தூரத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் படி பளீர் ஆரஞ்சு நிறத்தில் வடிவமைத்துள்ளனர். இதனால் நெருப்பு, தண்ணீர், இருள் என எந்த சூழ்நிலையில் விமானம் விபத்தில் சிக்கினாலும் இதைக் கண்டுபிடிக்க முடியும்.

இந்த பிளாக் பாக்ஸ் குறித்த கூடுதல் சில தகவல்கள் என்றால் இந்த பிளாக் பாக்ஸில் மொத்தம் 25 மணி நேரம் விமானத்தில் என்ன நடந்தது என்ன தகவல்கள் பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும்,புதிய பதிவுகள் வரவர பழைய பதிவுகள் அழிந்து கொண்டே இருக்கும். விமானம் விபத்தில் சிக்கினால் இதற்கான பவர் கட்டாகிவிடும். அதன் பின் வரும் பதிவுகள் எதுவும் இதில் இருக்காது. மேலும் அதன் பின்னர் புதிய பதிவுகளையும் ஏற்ற முடியாது.

அதனால் விமானம் விபத்தில் சிக்கில் சில நாட்கள் என்ன மாதங்கள் வருடங்கள் கழித்து இந்த பிளாக் பாக்ஸ் கிடைத்தாலும் விமானம் விபத்தில் சிக்கிய போது அதில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications