உசுரே போனாலும் விமானத்தில் ஆட்டோமெட்டிக் டோர் பொருத்த மாட்டாங்க! இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா?

விமானங்களில் நாம் பயணம் செய்யும்போது டேக் ஆஃப் ஆனாலும் சரி அல்லது லேண்டிங் ஆனாலும் சரி விமான பணிப்பெண்கள் மேனுவலாக மட்டுமே விமானத்தின் கதவுகளை திறப்பார்கள். இதை நீங்கள் விமான பயணத்தின்போது பார்த்திருக்க முடியும். அதிக தொழில்நுட்பங்கள் கொண்ட விமானங்களில் ஆட்டோமேட்டிக் கதவுகள் இல்லாமல் ஏன் மேனுவல் கதவுகளை வைத்திருக்கிறார்கள் என உங்களுக்கு தெரியுமா? இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. அது என்ன அறிவியல் காரணம் என்பதைதான் இங்கே காண போகிறோம். சரி, வாருங்கள். செய்திக்குள் செல்லலாம்.

விமான பயணம் என்பது பலருக்கும் பெரும் கனவாக இருக்கிறது. இன்று வரை பலர் வாழ்நாளில் ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் விமான பயணம் என்பது வெறும் பயன் அனுபவம் மட்டுமல்லாமல் பல்வேறு விதமான அறிவியல் அம்சங்களை கொண்டதாக இருக்கிறது.

Flight Door

விமானத்தில் பயணம் செய்த பலரும் கவனத்திருக்க கூடிய விஷயம் என்னவென்றால் விமானத்தில் உள்ள கதவுகள் டேக்ஆஃப்க்கு முன்பும் சரி, லண்டிங்கான பிறகும் சரி விமான பணிப்பெண்களால் மேனுவலாக தான் திறக்கப்படும். விமானம் என்பது அதிக தொழிற்நுட்பம் கொண்ட அம்சம் என்றாலும், இதில் ஆட்டோமேட்டிக் கதவுகள் இதுவரை பொருத்தப்படவில்லை.

விமானத்தின் கதவுகளை ஆட்டோமேட்டிக் செய்வது என அவ்வளவு பெரிய தொழிற்நுட்பமா என்று கேட்டால் அதுவும் கிடையாது. விமான கதவுகளை ஆட்டோமேட்டிக்காக மாற்றுவதற்கு உலகில் பல்வேறு தொழிற்நுட்பங்கள் வந்துவிட்டாலும் சில முக்கியமான காரணங்களுக்காக இதை ஆட்டோமேட்டிக்காக மாற்றாமல் மேனுவலாகவே தற்போது வரை பயன்படுத்தி வருகிறார்கள்.

Flight

விமானத்தின் கதவுகள் மேனுவலாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் பாதுகாப்பு தான். விமானம் என்பது எப்பொழுதும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வாகனமாக இருக்கிறது. விமானம் டேக் ஆஃப் ஆன பிறகு என்ன சூழ்நிலை ஏற்பட்டாலும் விமானத்துக்கு ஆபத்து ஏற்படும். இதனால் விமானம் விபத்தில் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆபத்து காரணமாக தான் ஆட்டோமேட்டிக் கதவுகளை விமானத்தில் யாரும் பொருத்துவதில்லை.

விமானம் டேக் ஆஃப் ஆகும்போது அல்லது லேண்டிங் ஆகும்போது இது போன்ற ஆபத்து ஏற்பட்டு விமானம் சிறிய விபத்திற்கு உள்ளதால் விமானத்தில் உள்ள எலெக்ட்ரானிக் பாகங்கள் எல்லாம் செயலிழந்து போக வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக ஆட்டோமேட்டிக் கதவுகள் பொருத்தப்பட்டால் அதில் எலெக்ட்ரானிக் பாகங்கள் மூலம் தான் இயங்கும் வகையில் உருவாக்கப்படும்.

இப்படியான ஆபத்து நிறைந்த சூழ்நிலைகளில் எலெக்ட்ரானிக் பாகங்கள் செயல் இழந்து போனால் விமானத்தின் கதவுகள் திறக்க முடியாமல் பாதிக்கப்படும். இதனால் அவசர காலங்களில் கூட பயணிகளால் விமானங்களில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படும். இதை தவிர்ப்பதற்காகவே ஆட்டோமேட்டிக் தொழிற்நுட்பத்தை விமானத்தின் கதவுகளில் விமான தயாரிப்பு நிறுவனங்கள் பொருத்துவதில்லை.

விமானத்தின் கதவுகள் மேனுவலாக திறக்கப்படும் ஆப்ஷன் இருந்தால் விமானத்தின் எந்த பாகங்கள் செயலிழந்து போனாலும் சரி, மேனுவலாக அந்த கதவை திறந்து விமானத்திற்குள் இருக்கும் பயணிகளை பத்திரமாக வெளியேற்றுவதற்கான பணிகளை செய்ய முடியும். இந்த காரணத்துக்காகவே விமானத்தின் கதவுகள் எல்லாம் மேனுவல் கதவுகளாக இருக்கின்றன ஆட்டோமேட்டிக் கதவுகள் விமானத்தில் பொருத்தப்படுவதில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: என்னதான் தொழிற்நுட்ப வளர்ச்சி என்பது சிறப்பாக மேம்பட்டாலும் மேனுவல் தான் என்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை குறிக்கும் விதமாக இந்த விமானம் எல்லாம் மேனுவல் தொழில்நுட்பத்திலேயே கதவுகளை பொருத்தி வருகின்றன. சூழ்நிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்ப தொழிற்நுட்பத்தை பயன்படுத்துவது தான் புத்திசாலியை தனம் என்பதால் விமான தயாரிப்பு நிறுவனங்கள் இந்த யுக்தியை கையாளுகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, November 16, 2024, 18:33 [IST]
English summary
Why flights dont have fully automatic doors know the reason
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+