விமானி கூட சொல்ல மாட்டார்... விமானங்களில் ஏன் சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை? இவ்வளவு காரணம் இருக்கா!!

தொலைத்தூர விமானங்கள் எவ்வளவு நேரத்தில் தனது பயணத்தை நிறைவு செய்யும் என்பதை ஏர்லைன்ஸோ அல்லது விமானத்தை இயக்கும் விமானியால் கூட துல்லியமாக கூற இயலாது. இதற்கான காரணம் என்ன என்பதை பற்றி விரிவாக இனி பார்க்கலாம்.

விமானி கூட சொல்ல மாட்டார்... விமானங்களில் ஏன் சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை? இவ்வளவு காரணம் இருக்கா!!

பேருந்திலோ அல்லது இரயிலிலோ ஓர் இடத்திற்கு செல்கிறீர்கள் எனில் அப்பயணத்திற்கு ஆகும் நேரத்தை உங்களால் அறிந்து கொள்ள இயலும். அதற்கேற்ப பயண திட்டங்களை உங்களால் வகுத்து கொள்ள இயலும். ஏனெனில் பேருந்திலோ அல்லது இரயிலிலோ நிர்ணயிக்கப்பட்ட பயண நேரத்தில் சென்றுவிட முடியும். சில சமயங்களில் மட்டுமே சில நிமிடங்கள் தாமதமாகலாம்.

விமானி கூட சொல்ல மாட்டார்... விமானங்களில் ஏன் சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை? இவ்வளவு காரணம் இருக்கா!!

அதிகப்பட்சமாக சில மணிநேரங்கள் தாமதமாகலாம் அவ்வளவுதான். ஆனால் விமானத்தில் கதையே வேறு. இதற்கு முக்கிய காரணம், பயணம் செய்யும் தொலைவு. உள்நாட்டிற்குள் இயங்கும் விமானங்கள் எனில் அவற்றின் பயண நேரங்கள் சில மணிநேரங்களாக மட்டுமே இருக்கும். ஆதலால் அவற்றில் தாமதம் என்றாலும் 10 நிமிடங்களில் இருந்து அதிகப்பட்சமாக 40 நிமிடங்கள் வரையில் மட்டுமே இருக்கும்.

விமானி கூட சொல்ல மாட்டார்... விமானங்களில் ஏன் சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை? இவ்வளவு காரணம் இருக்கா!!

ஆனால் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் செல்லும் விமானங்கள் பல ஆயிரம் கிமீ-களுக்கு பயணிக்கும். ஆதலால் அவை எதிர்க்கொள்ளும் சவால்களும் அதிகமாக இருக்கும். அவற்றினால் ஏற்படும் தாமதங்கள் ஒரு பக்கம் இருக்க, நீண்ட தொலைவிற்கு இயங்கும் சர்வதேச விமானங்களின் பயணங்கள் பெரும்பாலும் புறப்படும் விமான நிலையங்களிலேயே தாமதாகிவிடுகின்றன.

விமானி கூட சொல்ல மாட்டார்... விமானங்களில் ஏன் சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை? இவ்வளவு காரணம் இருக்கா!!

ஏனெனில் விமான பயணம் என்பது விமானத்தின் நிலை, வானிலை உள்பட பல்வேறு காரணிகளை சார்ந்ததாக உள்ளது. குறிப்பாக, பயணத்திற்கு முன்பு விமானத்தின் தரத்தையும், அதன் பாகங்களின் தரத்தையும் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆராய்ந்து பார்த்த பின்னரே இயங்க சம்மந்தப்பட்ட ஏர்லைன் நிறுவனம் அனுமதிக்கும்.

விமானி கூட சொல்ல மாட்டார்... விமானங்களில் ஏன் சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை? இவ்வளவு காரணம் இருக்கா!!

இந்த ஆராய்ச்சிகள் அனைத்தும் முன்னரே திட்டமிடப்பட்டிருக்கும் என்றாலும், எதிர்பாராத குறைப்பாடுகளை ஏர்லைன் நிறுவனம் நிவர்த்தி செய்ய வேண்டி இருந்தால், அந்த பயணத்தில் தாமதம் ஏற்படும். விமானம் என்பது எந்த அளவிற்கு பெரிய வாகனம் என்பது உங்களுக்கே தெரியும். பல்வேறு பாகங்களின் உதவியுடன் இயங்கும் அவ்வளவு பெரிய விமானத்தில் குறைப்பாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததே.

விமானி கூட சொல்ல மாட்டார்... விமானங்களில் ஏன் சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை? இவ்வளவு காரணம் இருக்கா!!

அதுமட்டுமில்லாமல், பல ஆயிரம் கிமீ தொலைவிற்கு பயணிக்கவுள்ள விமானத்தில் உள்ள குறைப்பாடு சிறியதாக இருப்பினும் அதனை அலட்சியப்படுத்த முடியாது அல்லவா. இவற்றினால் பயணிகளின் பயணம் தாமதமாகுவது மட்டுமின்றி, விமானத்தின் அடுத்தடுத்த பயணங்களின் அட்டவணையிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி, ஒரு விமானத்தின் தாமதத்தினால் மற்ற விமானங்களின் பயணங்களும் தாமதமாகுகின்றன.

விமானி கூட சொல்ல மாட்டார்... விமானங்களில் ஏன் சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை? இவ்வளவு காரணம் இருக்கா!!

ஏனெனில் ஒரு விமானம் சென்றாலே மற்ற விமானங்களாலும் ரன்வே-இல் செல்ல முடியும். ஆதலால் விமானங்களின் பயணங்கள் தாமதமாகுவது மிகவும் வாடிக்கையானதே. விமானம் புறப்படும் நேரத்திற்கு 15 நிமிடங்கள் வரையில் "ஆன்-டைம்" ஆகவே கருதப்படும். ஆனால் இந்த தாமதங்கள் அனைத்தையும் ஓரளவிற்கு சமநிலை படுத்தும் வகையில் ஏர்லைன் நிறுவனங்கள் பயணத்திற்கான நேரத்தை நிர்ணயிக்கும்.

விமானி கூட சொல்ல மாட்டார்... விமானங்களில் ஏன் சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை? இவ்வளவு காரணம் இருக்கா!!

அதாவது, இந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து அந்த ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு விமானம் 2 மணிநேரங்களில் சென்றுவிடும் என ஏர்லைன் நிறுவனம் தெரிவித்தால், உண்மையில் அந்த விமானம் 1 மணிநேரம் 45 நிமிடங்களிலேயே சென்றுவிடும். மீதி 15 நிமிடங்கள் ஆனது தாமதங்களுக்காக முன்கூட்டியே ஏர்லைன் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்ளும் நேரமாகும்.

விமானி கூட சொல்ல மாட்டார்... விமானங்களில் ஏன் சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை? இவ்வளவு காரணம் இருக்கா!!

மற்றப்படி தாமத்தினால் விமானங்களின் நேரங்கள் பெரிய அளவில் மாற்றி கொள்ளப்படுவதில்லை. ஏனெனில் அவற்றினால் நிறுவனத்தின் செயல்படுதிறன் குறைந்துவிடும் என ஏர்லைன் நிறுவனங்கள் எண்ணுகின்றன. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் விமான நிலையத்திற்குள் வரும்போது எப்போதும் விமானம் புறப்படும் நேரம் தாமதமாக இருந்தால் அந்த ஏர்லைன் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும் அல்லவா.

விமானி கூட சொல்ல மாட்டார்... விமானங்களில் ஏன் சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை? இவ்வளவு காரணம் இருக்கா!!

ஏர்லைன் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான முறையில் அவற்றின் விமானங்களின் நேரங்களை நிர்ணயிக்கின்றன. அதாவது, பயணிக்கும் விமானத்தின் வகை, விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு, வானிலை மற்றும் மற்ற காரணிகளை பொறுத்து விமானத்தின் பயண நேரங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், ஒவ்வொரு பயணத்தின்போதும் தாமதமாகும் நேரத்தை சம்மந்தப்பட்ட ஏர்லைன் கணக்கெடுத்து கொள்ளும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why flights never go quite as smoothly as they should
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X