ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

Written By:

கார்கள் என்பது பெரும் பணக்காரர்களுக்கான விஷயம் என்ற நிலையை மாற்றி எழுதியவர் ஃபோர்டு நிறுவனத்தின் ஸ்தாபகர் ஹென்றி ஃபோர்டு. அமெரிக்காவின் சாமானியர்களின் கைகளிலும் கார்கள் தவழ வேண்டும் என்ற கொள்கையுடன் ஃபோர்டு மாடல் டி காரை உருவாக்கி சாதித்து காட்டினார்.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

இந்த நிலையில், அவரது கனவை நனவாக்கிய ஃபோர்டு டி மாடல் வெறும் கருப்பு நிறத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது என்ற கருத்து பரவலாக இருக்கிறது. இது ஓரளவு உண்மைதான் என்றாலும், அதற்கான காரணம் உள்ளிட்ட பல சுவாரஸ்ய விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

சாமானிய மக்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் கார் என்ற பெருமை ஃபோர்டு மாடல் டி காருக்கு உண்டு. 1908ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஃபோர்டு மாடல் டி கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்திலும், எளிதில் பராமரிக்கும் விதத்திலும் இந்த காரை வடிவமைத்து விற்பனைக்கு கொண்டு வந்தார் ஹென்றி ஃபோர்டு.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

1908ல் துவங்கிய ஃபோர்டு மாடல் டி காரின் உற்பத்தி 1927ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 18 ஆண்டுகள் ஃபோர்டு மாடல் டி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. வெறும் கருப்பு வண்ணத்தில் மட்டுமே ஃபோர்டு மாடல் டி கார் உற்பத்தி செய்யப்பட்டது என்ற கூற்று இருக்கும் நிலையில், கடைசியாக உற்பத்தி செய்யப்பட்ட 15வது மில்லியன் ஃபோர்டு மாடல் டி கார் பச்சை வண்ணத்தில் வந்தது.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

நெருப்பில்லாமல் புகையாதே, இந்த கூற்று வருவதற்கும் காரணம் இல்லாமல் இருக்காதே என்ற ஐயப்பாடு எழுகிறது. சரி, அப்படியானால் இந்த கூற்று எவ்வாறு உருவானது என்ற சந்தேகம் எழுகிறதுதானே?

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

1908ம் ஆண்டு உற்பத்தி துவங்கப்பட்ட ஆரம்ப காலங்களில் ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தை தவிர்த்து, சிவப்பு, நீலம், பழுப்பு, சாம்பல் மற்றும் பச்சை என பல வண்ணங்களில் கிடைத்தது. ஆனால், 1914ம் ஆண்டிலிருந்து 1925ம் ஆண்டு வரை ஃபோர்டு மாடல் டி கார் வெறும் கருப்பு வண்ணத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

இந்த காலக்கட்டத்தில்தான் ஃபோர்டு மாடல் டி காரின் விற்பனை உச்சாணியில் இருந்தது. அதாவது, ஃபோர்டு மாடல் டி காருக்கான தேவை மிக அதிகமாக இருந்த பொற்காலமாக வரலாற்றில் பதிவானது.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

1914 முதல் 1925 வரை ஃபோர்டு மாடல் டி கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதற்கு பல காரணங்கள் அடுக்கப்படுகின்றன. 1800களில் மரம் மற்றும் ஸ்டீல் அலங்கார பொருட்களில் மெருக்கூட்டுவதற்கு ஜப்பானிங் என்ற பூச்சு முறை பயன்படுத்தப்பட்டது.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

இந்த ஜப்பானிங் மெருகூட்டும் முறையானது பியானோ பிளாக் போன்ற அதீத பளபளப்பை காருக்கு கொடுத்தது. இது நீண்ட காலத்திற்கு சேதமடையாமலும், பளபளப்பு தன்மையை இழக்காமலும் இருந்தது.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

இந்த மெருகூட்டும் பொருள் கருப்பு வண்ணத்துடன் மட்டுமே சேர்க்க முடிந்தது. பிற வண்ணங்களில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுவே ஃபோர்டு மாடல் டி கார்கள் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனைக்கு வந்தது.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

மற்றொரு கூற்றுபடி, கருப்பு வண்ணமானது பிற வண்ணங்களை காட்டிலும் வெகு சீக்கிரமாக உலர்ந்து விடும் தன்மையை பெற்றிருந்தது என்பதாக காரணம் சொல்லப்படுகிறது. இதனால், உற்பத்தியை அதிகரிக்க முடிந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், ஒரே ஒரு வண்ணத்தில் உற்பத்தி செய்வதால் கால தாமதம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

ஃபோர்டு மாடல் டி கார் உற்பத்திக்காக அசெம்பிளி லைன் உற்பத்தி முறை அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது அனைத்து கார் நிறுவனங்களும் பின்பற்றும் இந்த அசெம்பிளி லைன் கார் உற்பத்தி முறைக்கு அந்த காலத்திலேயே வித்திட்டுவிட்டவர் ஹென்றி ஃபோர்டு.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

ஃபோர்டு மாடல் டி காரின் கருப்பு வண்ணம் குறித்து வாடிக்கையாளர்களிடத்திலும் அதிக வரவேற்பு இருந்தது. காரணம், மிக பளபளப்பாகவும், பொருத்தமாகவும் இருந்ததே காரணம். இதனால், வாடிக்கையாளர்களிடத்தில் இருந்து புகார் என்பதே இல்லை என்ற நிலை இருந்துள்ளது.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

அதேநேரத்தில், ஃபோர்டு மாடல் டி காருக்கான வரவேற்பை கண்டு மார்க்கெட்டில் போட்டியும் அதிகரித்தது. ஃபோர்டு மாடல் டி காரிலிருந்து வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்ப பல வண்ணங்களில் கார்களை பிற நிறுவனங்கள் கொண்டு வந்தன. இதனையடுத்து, விற்பனையை தக்க வைக்க வேறு வண்ணங்களிலும் ஃபோர்டு மாடல் டி காரை உற்பத்தி செய்யும் நிலைக்கு ஃபோர்டு நிறுவனம் தள்ளப்பட்டது.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

ஃபோர்டு மாடல் டி கார் 1908ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபோது, 850 டாலர் விலைக்கும், 1925ம் ஆண்டில் 300 டாலர் விலைக்கும் விற்பனை செய்யப்பட்டது. அசெம்பிளி லைன் உற்பத்தி துவங்கப்பட்டதால், உற்பத்தி செலவு கணிசமாக குறைந்ததால் விலை குறைப்பு செய்யப்பட்டது.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

1913ம் ஆண்டு முதல் 1927ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 15 மில்லியன் ஃபோர்டு மாடல் டி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

ஃபோர்டு மாடல் டி காரில் முன்னோக்கி செலுத்துவதற்கான ஒரு கியரும், பின்னோக்கி செல்வதற்கான ஒரு கியரும் கொடுக்கப்பட்டு இருந்தது.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

ஃபோர்டு மாடல் டி கார் மரம் மற்றும் இரும்பு தகடிலான பாடி பேனல்களுடன் கட்டமைக்கப்பட்டது.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

இந்த கார் 2 டோர், 4 டோர் டூரிங், ரோட்ஸ்டெர், டவுன் கார்ஸ், பிக்கப் டிரக் மற்றும் செடான் ஆகிய பல மாடல்களில் விற்பனை செய்யப்பட்டது.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

சாதாரண ஃபோர்டு மாடலில் 20 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 4 சிலிண்டர் எஞ்சினும், ரோட்ஸ்டெர் மாடலில் 25 பிஎச்பி பவரை அளிக்க வல்ல எஞ்சினும் பொருத்தப்பட்டு இருந்தது.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

ஃபோர்டு மாடல் டி காரில் ஸ்பீடோமீட்டர் கிடையாது. அதிகபட்சமாக மணிக்கு 48 கிமீ வேகத்தையும், ரோட்ஸ்டெர் மாடல் மணிக்கு 65 கிமீ வேகம் வரையிலும் செல்லும் திறனை பெற்றிருந்தன.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

வெறும் 12 மணிநேரத்தில் ஒரு ஃபோர்டு மாடல் டி காரை உற்பத்தி செய்துள்ளனர். அந்த காலக்கட்டத்தில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.

ஃபோர்டு மாடல் டி கார் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது ஏன்?

இன்றளவும் ஏராளமான ஃபோர்டு மாடல் டி கார்களை அதன் உரிமையாளர்களும், கார் பிரியர்களும் வாங்கி புதுப்பித்து பராமரித்து வருகின்றனர்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
"You can have it (Ford Model T) in any colour as long as it's black" - This is a famous quote by Henry Ford. This led to many believing that the Ford Model T was available only in black. This is however, wrong.
Story first published: Tuesday, March 6, 2018, 16:26 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark