எல்லாம் மார்கெட்டிங் தான்.. ஜெர்மன் கார்கள் உலகம் முழுவதும் பிரபலமாக இது தான் முக்கியமான காரணம்...

ஜெர்மன் நாடு தான் கார் தயாரிப்பின் தலை நகரம் என அழைக்கப்படுகிறது. இந்த நாட்டில் தயாராகும் கார்களுக்கு மட்டும் தனி மவுசு இருக்கிறது? இது ஏன்? எப்படி இது உருவானது? இது குறித்த முழு விபரங்கள் இதோ.

எல்லாம் மார்கெட்டிங் தான்.. ஜெர்மன் கார்கள் உலகம் முழுவதும் பிரபலமாக இது தான் முக்கியமான காரணம்...

கார்கள் தயாரிப்பு என்ற பேச்சு வந்துவிட்டாலே பலர் ஜெர்மன் கார்கள் சிறந்த கார்கள் எனச் சொல்லி கேள்விப் பட்டிருப்போம். ஜெர்மன் நாட்டில் தயார் செய்யப்பட்ட கார்களுக்கு உலகளவில் மவுசு அதிகம் என்பதையும் நாம் பரவலாகக் கேட்டிருப்போம். ஏன் ஜெர்மன் கார்களுக்கு மட்டும் இந்த மவுசு, அவர்களைப் போல மற்ற நாடுகளால் ஏன் கார் தயாரிப்பைக் கொடுக்க முடியவில்லை. ஜெர்மன் எப்படி இந்த நிலையை அடைந்தது. இதைப் பற்றித் தான் இந்த பகுதியில் காணப்போகிறோம்.

ஜெர்மனிக்கும் கார்களுக்கும் உண்டான தொடர்பு 1879களிலேயே துவங்கிவிடுகிறது. ஆம் அப்பொழுதே ஜெர்மனைச் சேர்ந்த கார்ல் பென்ஸ் என்பவர் முதன் முறையாக இன்டர்னல் கம்பஷன் இன்ஜினை காப்புரிமை பெற்றார். அதற்கு முன்பு வரை ஸ்டீம் இன்ஜின் ஒன்று தான் பயன்பாட்டிலிருந்தது. ஆம் நீங்கள் நினைக்கும் பென்ஸ் தான் இவர் இவர் பின்நாளில் உருவாக்கிய நிறுவனம் தான் பென்ஸ், பென்ஸ் நிறுவனம் தான் முதல் காரை வடிவமைத்தது. இந்த இரண்டும் தான் இன்று ஜெர்மனியின் வளர்ச்சிக்குக் காரணம்

கார்களின் துவக்கத்திலேயே எல்லாவற்றையும் ஆய்வு செய்து காரை தயாரித்ததால் ஜெர்மன் துவங்கப்பட்ட பென்ஸ் நிறுவனம் மக்களின் ஒவ்வொரு விஷயங்களைப் புரிந்து கொண்டு கார்களை தயாரிக்க ஆரம்பித்தனர். அதனால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் அக்கு வேறு ஆணி வேராக தெரிந்து வைத்துக்கொண்டனர். அதன் பின் மற்ற நாடுகளில் துவங்கப்பட்ட கார் நிறுவனங்கள் எல்லாம் பெரும்பாலும் ஜெர்மன் நிறுவனங்களைப் பார்த்துக் காப்பியடித்தனர் என்று கூடச் சொல்லலாம்.

கார்களின் பயன்பாடு ஒவ்வொரு நாட்டு மக்களின் பழக்க வழக்கம், கலாச்சாரம், புவியியல் அமைப்பு, பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட பல விஷயங்களைக் கொண்டு மாறுபடும். உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்கா போன்ற நாடுகளில் சாலைகள் பெரியதாக இருக்கும், பெரும்பாலும் நேரான சாலைகள் தான் இருக்கும். இதனால் அமெரிக்கர்கள் பெரிய பல்கியான காரை தான் அந்நாட்டு மக்கள் விரும்புவார்கள்.

ஜெர்மன் போன்ற நாடுகளில் இடம் குறைவாக இருக்கும். ஐரோப்பா கண்டத்திலேயே பார்க்கிங் என்பது மிக முக்கியமான பிரச்சனை, பார்க்கிங்கிற்காக அதிக இடங்கள் ஒதுக்க முடியாது. இங்குள்ள சாலைகளும் சிறியதாகவே அமைக்கப்படும். இதனால் ஐரோப்ப நாடுகளில் பார்க்கிங்கிற்கு தகுந்த, சிறிய சாலைகளிலும் பயணிக்கும் திறன் கொண்ட கார்களுக்கே நல்ல வரவேற்பு இருக்கும்.

இந்தியாபோன்ற நாடுகளில் கார்களை பயன்படுத்தும் மக்கள் அதிகமாகச் செலவு செய்ய முடியாது. அதனால் குறைந்த விலை கார்களையே அதிகம் விரும்புவார்கள். இப்படியாக ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேவை இருந்தது. ஆனால் ஜெர்மன் நாட்டில் மக்கள் கார்கள் வேகமாகச் செல்ல வேண்டும். அது மட்டுமல்ல பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும். எவ்வளவு வேகமாகச் சென்றாலும் பாதுகாப்பில் குறை இருக்கக்கூடாது என விரும்பும் மக்கள்.

அதனால் அந்நாட்டில் உள்ள நிறுவனங்கள் பாதுகாப்பு விஷயத்திலும் காரின் வேகம் விஷயத்திலும் கவனம் செலுத்தினர். இது மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் கார்களில் இல்லாததால் தீவிரமான ஆட்டோமொபைல் காதலர்கள் ஜெர்மன் கார்களை அதிகம் விருப்ப துவங்கினர். அதிக வேகம் மக்களை ஈர்த்தது. குறிப்பாக ஜெர்மன் நாட்டின் நெடுஞ்சாலைகளில் வேகத்திற்கு லிமிட்டே கிடையாது. எவ்வளவு வேகத்தில் வேண்டுமானாலும் பயணிக்கலாம் என சட்டம் இருக்கிறது. இதனாலேயே இந்த நாட்டில் வேகமாக காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

இது மட்டுமல்ல ஜெர்மன் நாட்டில் உள்ள ஆட்டோமொபைல் இன்ஜினியர்களும் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் அந்நாட்டில்உள்ள பள்ளிகளில் சிறு வயதிலேயே ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் ஒக்கேஷனல் டிராக்காக பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த நாட்டில் ஆட்டோமொபைல் தயாரிப்பில் இருப்பவர்களை பெரும் மதிப்புடன் பார்க்கின்றனர். அதுவும் சொந்தமாக ஒரு கார் நிறுவனத்தை உருவாக்கி வெற்றி பெற்றால் அவர்கள் அந்நாட்டின் மிகப்பெரிய சொத்தமாக பார்க்கின்றனர்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக என்னதான் தரமான தயாரிப்புகளை அவர்கள் வைத்திருந்தாலும் ஜெர்மன் நாட்டு கார் நிறுவனங்கள் மார்கெட்டிங்கிலும் கில்லிகள் தான். அந்நாட்டின் கார் நிறுவனங்களின் பெயர்களில் சிலவற்றை இங்கே தருகிறோம். ஆடி, ஃபோக்ஸ்வேகன், மெர்சிடீஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் போர்ஷே ஆகிய நிறுவனங்கள் ஜெர்மன் நிறுவனங்கள் அவர்கள் தங்கள் தயாரிப்பைச் சரியாக, சரியான நபர்களிடம் மார்கெட்டிங் செய்து அதை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். இதுவும் இவர்கள் வளர்ச்சிக்கு முக்கியமான காரணம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why german cars are so popular than others
Story first published: Wednesday, September 28, 2022, 17:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X