ரோட்டோரத்துல ருசியான பழம் தரும் மரங்களை மட்டும் இந்த அரசுகள் நடாது.. ஏன் தெரியுமா?

சாலை ஓரங்களில் மரங்களை நடும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் அசோகர் என நம்மால் உறுதியாகக் கூற முடியும். இதையே நம்முடைய சிறு வயது பாடப்புத்தகங்களும் நமக்குக் கற்பித்தன. அவர் சால மரங்களையே சாலையோரங்களில் நடவு செய்தார். புத்த பௌத்த மதத்தில் தெய்வீக மரமாக அது பார்க்கப்படுகின்றது.

எனவேதான் சாலையோரங்களில் அசோகர் சால மரங்களை நட்டார். புத்தர் சால மரத்தடியிலேயே பிறந்ததாகக் கூறப்படுகின்றது. எனவேதான் அந்த மரம் பௌத்த மதத்தின் புனிதமாகக் கருதப்படுகின்றது. மரங்கள் சாலையோரத்தில் நடப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, பயணிகள் இளைப்பாறவும், ஓய்வெடுக்கவுமே அவை சாலையோரங்களில் வரிசையாக நடப்படுகின்றன.

Street blossom trees

கடந்த காலத்தில் அசோகரால் நடவு செய்யப்பட்ட சால மரம் பல வழிகளில் பூர்வ குடிகளுக்கு உதவியது. சால மரங்களின் இலைகள் உணவு சாப்பிட பயன்படுத்தப்பட்டன. அதேநேரத்தில் மருத்தில் இருந்து வாசனை திரவியங்களை தயாரித்தனர். மேலும், அதன் இலைகளை விவாசயத்திற்கு உரமாகவும் அந்த காலத்து மக்கள் பயன்படுத்தினர்.

இத்தகைய பன்முக பயன்பாட்டையே அசோகர் நட்ட சால மரங்கள் மக்களுக்கு வழங்கின. ஆனால், இப்போது சாலையோரங்களில் நடப்படும் மரங்கள் ஒன்னுத்துக்கும் ஒதவாதவையாக இருக்கின்றன. குறிப்பாக, பழங்கள் தரும் மரங்கள் சாலையோரங்களில் நடப்படுவதே இல்லை. இதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் காரணத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Streets blossom

அளவுக்கு அதிகமான ஊட்ட சத்துக்கள், விட்டமின்கள் மற்றும் அமிலங்களை வாரி வழங்கக் கூடியவை பழங்கள். தினமும் பழ வகைகளை சாப்பிடுவதன் வாயிலாக நோய்களில் இருந்து தப்பிக்க முடியும். இதனாலேயே பழங்களை விரும்பக் கூடியவர்கள் அதிகளவில் இருக்கின்றனர். மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்ககளுக்கும் பழங்களே பிடித்தமானவையாக இருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலில் சாலையோரங்களில் பழ வகை மரங்களை நடவு செய்தால் விலங்குகளை அழைப்பிதழ் கொடுத்து அழைப்பதற்கு சமமாக மாறிவிடும். மேலும், விலங்குகள் சாலையை ஆக்கிரமிப்பு செய்தால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்படும். இந்த மாதிரியான நிலையைத் தவிர்க்கவே சாலையோரங்களில் பழ வகை மரங்களை நடுவதை அரசுகள் தவிர்க்கின்றன.

இதுமட்டுமே பழவகை மரங்களை சாலையோர நடாமல் இருக்க காரணம் இல்லைங்க. பழங்கள் பேராபத்தைக் கொண்டவை என்பதாலும் அவற்றை தரும் மரங்கள் சாலையோரங்களில் நடப்படுவதில்லை. வாழை மற்றும் மாம்பழம் போன்றவை வழு வழுக்கும் தன்மைக் கொண்டவையாக இருக்கின்றன. இந்த தன்மைக் கொண்ட பழங்கள் அதிகளவில் சிதறிக் கிடக்கும் சாலையில் ஓர் வாகனம் பயணிக்கும் எனில் அந்த பயணம் மிகுந்த ஆபத்தானதாக மாறிவிடும்.

அதாவது, பழங்கள் மீது வாகனங்கள் பயணிக்கும்போது அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தைச் சந்திக்க நேரிடலாம். பழங்களை எல்லாம் பறித்துவிடலாமே என்று நீங்கள் கேட்கலாம். எல்லா நேரங்களிலும் அனைத்து பழங்களையும் பறித்துவிட முடியாது. சில தவிர்க்க முடியாத சூழல்களில் பழங்கள் கீழே கட்டாயம் சிதறி விழும்.

இதை தவிர்ப்பது மிக கடினம். இவ்வாறு விழும் பழங்கள் அழுகிப்போகும் பட்சத்தில் அதன் வேறு மாதிரியான பின் விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கிவிடும். துர்நாற்றம், ஈ மற்றும் கொசுக்களை அதிகம் மொய்க்க செய்துவிடும். இதுமாதிரியான சூழலை தவிர்க்கும் பொருட்டும் அரசுகள் சாலையோரங்களில் பழ மரங்களை நட தயங்குகின்றன.

பழ மரங்களின் பராமரிப்பிற்கும், வளர்ப்பிற்கும் அதிக செலவாகும் என்பதும் அரசுகள் அதை தவிர்ப்பதற்கான காரணமாக இருக்கின்றது. நீர் பாய்ச்ச வேண்டும், உரம் போட வேண்டும் மற்றும் களையெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த தலைவலி எல்லாம் எதற்கு என்றே அரசு அதில் இருந்து விலகி நிற்கின்றது.

அப்படியே இதை எல்லாம் ஏற்றுக் கொண்டு பழ வகை மரங்களை சாலையோரங்களில் நடவு செய்து அதை அரசு பராமரித்தாலும், வாங்குவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஏனெனில் அவை சாலையோரங்களில் வளர்க்கப்படுவதால் வாகன கழிவுகளின் கூடரமாக அவை மாறிவிடும். இந்த தரமற்ற பழங்களை சாப்பிடுவதனால் பெரும்பாலும் வியாதிகளே அதிகமாகக் கூடும்.

ஆகையால், சாலையோரங்களில் பழ வகை மரங்களை நடவு செய்வது நல்ல யோசனையாக இருக்காது என அரசுகள் கருதுகின்றன. இன்னும் பல காரணங்களால் சாலையோரங்களில் பழ மரங்கள் நடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், சாலையோரங்களில் பழ மரங்கள் நடப்படும் எனில் வீடற்றோர் மற்றும் பசியால் வாடும் ஏழைகளுக்கு அந்த மரங்கள் பெரும் உதவியாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையோரங்களில் மரங்களை நடவில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஓர் பூங்கா போன்று அமைத்து மரங்களை நடலாம் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கின்றது. புதிய சாலைகள் அமைக்கப்படுவதற்காக ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கான மரங்கள் சாலையோரங்களில் இருந்து வெட்டி அகற்றப்படுகின்றன. இதற்கு பதிலாக புதிய மரங்களை நட வேண்டும் என்பதும் அனைவரின் கோரிக்கையாக இருக்கின்றது.

Article Published On: Tuesday, May 2, 2023, 15:34 [IST]
English summary
Why govt dont plant fruit trees on streets
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+