சூப்பர் பவர்... இந்த காரியங்களை எல்லாம் ஹெலிகாப்டர்தான் அசால்டாக செய்யும்... விமானங்களால் முடியாது

ஒரு சில சவாலான காரியங்களை ஹெலிகாப்டர்களால் மட்டுமே செய்ய முடியும். விமானங்களால் அவற்றை செய்ய முடியாது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர் பவர்... இந்த காரியங்களை எல்லாம் ஹெலிகாப்டர்தான் அசால்டாக செய்யும்... விமானங்களால் முடியாது

விமானங்களுடன் ஒப்பிடும்போது ஹெலிகாப்டர்கள் மிகவும் வித்தியாசமானவை. இரண்டும் வெவ்வேறு கொள்கையின் அடிப்படையில் இயங்குகின்றன. இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடும்போது, பல்வேறு விஷயங்களில் ஒன்றை காட்டிலும் மற்றொன்று சிறப்பானதாக இருக்கின்றன. அதாவது சில விஷயங்களில் விமானங்கள் மூலம் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

சூப்பர் பவர்... இந்த காரியங்களை எல்லாம் ஹெலிகாப்டர்தான் அசால்டாக செய்யும்... விமானங்களால் முடியாது

இன்னும் சில விஷயங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் நமக்கு வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். எனவே இரண்டுமே சிறப்பு வாய்ந்த கண்டுபிடிப்புகள்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஹெலிகாப்டர்கள் அவசியமா? என்ற வாதத்தை ஒரு சிலர் முன் வைக்கின்றனர். ஹெலிகாப்டர்கள் அவசியமில்லை என்பது நிச்சயமாக தவறான ஒரு வாதம்.

சூப்பர் பவர்... இந்த காரியங்களை எல்லாம் ஹெலிகாப்டர்தான் அசால்டாக செய்யும்... விமானங்களால் முடியாது

விமானங்களில் ஒரு சில நிறை, குறைகள் இருக்கின்றன. அதேபோல் ஹெலிகாப்டர்களிலும் ஒரு சில நிறை, குறைகள் இருக்கின்றன. இவை இரண்டும் வெவ்வேறு விதங்களில் நமக்கு சேவையாற்றுகின்றன. எனவே ஹெலிகாப்டர்கள் அவசியமற்றது என்பது ஏற்க கூடியது அல்ல. அப்படிப்பட்ட ஒரு வாதத்தை முன் வைப்பவர்களுக்காக ஹெலிகாப்டர்களின் நன்மைகளை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

சூப்பர் பவர்... இந்த காரியங்களை எல்லாம் ஹெலிகாப்டர்தான் அசால்டாக செய்யும்... விமானங்களால் முடியாது

அத்துடன் ஒரு சில விஷயங்களை ஹெலிகாப்டர்களால் மட்டும்தான் செய்ய முடியும். அந்த விஷயங்களை விமானங்களால் ஒருபோதும் செய்யவே முடியாது. அந்த விஷயங்கள் என்னென்ன? என்பதையும் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள், இனி செய்திக்குள் செல்லலாம்.

சூப்பர் பவர்... இந்த காரியங்களை எல்லாம் ஹெலிகாப்டர்தான் அசால்டாக செய்யும்... விமானங்களால் முடியாது

ஹெலிகாப்டர்களால் செய்யக்கூடிய விஷயங்களும், விமானங்களால் செய்ய முடியாத விஷயங்களும்...

விமானங்களை காட்டிலும் ஹெலிகாப்டர்கள் எந்த வகையில் சிறந்தது? என்ற கேள்வி உங்களுக்கு இருக்கும். ஹெலிகாப்டர்களின் பெரும்பாலான நன்மைகள், அவற்றின் மிகச்சிறிய அளவின் மூலமாகதான் நமக்கு கிடைக்கின்றன. ஹெலிகாப்டர்களால் காற்றில் ஒரே இடத்தில் இருக்க முடியும். இதனை ஆங்கிலத்தில் ஹோவர் (Hover) என கூறுகின்றனர்.

சூப்பர் பவர்... இந்த காரியங்களை எல்லாம் ஹெலிகாப்டர்தான் அசால்டாக செய்யும்... விமானங்களால் முடியாது

மேலும் ஹெலிகாப்டர்களால் செங்குத்தாக தரையிறங்க முடியும். செங்குத்தாகவே வானில் மேலே எழும்பவும் முடியும். விமானங்களால் செங்குத்தாக தரையிறங்கவோ, மேல் எழும்பவோ முடியாது. விமானம் இதனை செய்ய வேண்டுமானால், ஓடுபாதை தேவை. ஓடுபாதையில் சிறிது தூரம் ஓடிய பிறகுதான் விமானத்தால் மேலே எழும்ப முடியும்.

சூப்பர் பவர்... இந்த காரியங்களை எல்லாம் ஹெலிகாப்டர்தான் அசால்டாக செய்யும்... விமானங்களால் முடியாது

அதேபோல் தரையிறங்கும்போதும் ஓடுபாதையில் குறிப்பிட்ட தூரம் ஓடிய பிறகுதான் விமானங்களை நிறுத்த முடியும். ஆனால் ஹெலிகாப்டர்கள் இருந்த இடத்தில் இருந்து அப்படியே செங்குத்தாக மேலே எழும்பவும், தரையிறங்கவும் செய்யும். அத்துடன் விமானங்களால் நுழைய முடியாத மிகச்சிறிய இடங்களில் கூட ஹெலிகாப்டர்கள் மிக எளிதாக சென்று வந்து விடும்.

சூப்பர் பவர்... இந்த காரியங்களை எல்லாம் ஹெலிகாப்டர்தான் அசால்டாக செய்யும்... விமானங்களால் முடியாது

உண்மையில் இன்னும் பல்வேறு விஷயங்களை ஹெலிகாப்டர்கள் செய்யும். அவற்றை விமானங்களால் செய்ய முடியாது. அவற்றின் பட்டியலை கீழே காணலாம்.

  • ஹோவர்
  • செங்குத்தான டேக் ஆஃப், லேண்ட்
  • ஹெலிகாப்டர்கள் முன்னோக்கி பயணிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அவற்றால் வானில் பின்னோக்கியும் பயணிக்க முடியும் (கார் ரிவர்ஸ் கியரில் வருவதை போல). அத்துடன் பக்கவாட்டாகவும் ஹெலிகாப்டர்களால் பயணிக்க முடியும்.
சூப்பர் பவர்... இந்த காரியங்களை எல்லாம் ஹெலிகாப்டர்தான் அசால்டாக செய்யும்... விமானங்களால் முடியாது
  • பொருட்கள் மற்றும் கட்டமைப்புகளுக்கு மிக நெருக்கமாக செல்ல முடியும்.
  • மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை மீட்க முடியும்.
  • வானளாவிய கட்டிடங்களுக்கு இடையே பயணிக்க முடியும்.
சூப்பர் பவர்... இந்த காரியங்களை எல்லாம் ஹெலிகாப்டர்தான் அசால்டாக செய்யும்... விமானங்களால் முடியாது

ஹெலிகாப்டர்களின் பல்வேறு பயன்பாடுகள்

அளவில் பெரிதாக இருப்பதால், விமானங்களால் அனைத்து இடங்களுக்கும் சென்று விட முடியாது. எனினும் சிறிய ஹெலிகாப்டர்கள் பல்வேறு பொருட்கள் மற்றும் கட்டமைப்புகளுக்கு அருகே மிகவும் நெருக்கமாக செல்ல கூடிய வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. ஏற்கனவே கூறியபடி ஹெலிகாப்டர்களை போன்று விமானங்களால் தரையிறங்கவும், மேலே எழும்பவும் முடியாது.

சூப்பர் பவர்... இந்த காரியங்களை எல்லாம் ஹெலிகாப்டர்தான் அசால்டாக செய்யும்... விமானங்களால் முடியாது

எனவே குறிப்பிட்ட சில இடங்களுக்கு செல்வது ஹெலிகாப்டரில்தான் எளிமையானது. ராணுவம், தனியார் துறை என பலரும் பல்வேறு பயன்பாடுகளுக்காக ஹெலிகாப்டர்களை பயன்படுத்துகின்றனர். உயரமான கட்டிடங்களின் மேலே ஏர்-கண்டிஷனிங் யூனிட்கள் மற்றும் ரேடியோ டிரான்ஸ்மிஷன் டவர்களை அமைப்பதற்கு ஹெலிகாப்டர்கள் உதவுகின்றன.

சூப்பர் பவர்... இந்த காரியங்களை எல்லாம் ஹெலிகாப்டர்தான் அசால்டாக செய்யும்... விமானங்களால் முடியாது

வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின்போது மக்களை மீட்பதற்கும் ஹெலிகாப்டர்கள் உதவுகின்றன. இதுதவிர சுற்றுலாவிற்கும் ஹெலிகாப்டர்கள் பயன்படுகின்றன. சுற்றுலா பயணிகள் விரும்பும் இடத்தை சுற்றி பார்க்க ஹெலிகாப்டர்கள் ஒரு வரப்பிரசாதம். மருத்துவ உபகரணங்களையும், நோயாளிகளையும் மருத்துவமனைக்கு விரைவாக கூட்டி செல்லவும் ஹெலிகாப்டர்கள் பயன்படுகின்றன.

சூப்பர் பவர்... இந்த காரியங்களை எல்லாம் ஹெலிகாப்டர்தான் அசால்டாக செய்யும்... விமானங்களால் முடியாது

மனித உடல் உறுப்புகளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு விரைவாக கொண்டு சென்றாக வேண்டிய தேவை இருந்தாலும் கூட, போக்குவரத்து நெரிசல் இல்லாமல், வான் வழியாக எடுத்து செல்ல ஹெலிகாப்டர்கள்தான் சிறந்த தேர்வு. காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதிலும் கூட, ஹெலிகாப்டர்களின் பங்கு அளப்பரியது.

சூப்பர் பவர்... இந்த காரியங்களை எல்லாம் ஹெலிகாப்டர்தான் அசால்டாக செய்யும்... விமானங்களால் முடியாது

மீட்பு பணிகளுடன், தேடுதல் வேட்டைகளிலும் ஹெலிகாப்டர்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. போர் முனைகளுக்கு ராணுவ உபகரணங்களை உடனடியாக கொண்டு செல்லவும் ஹெலிகாப்டர்கள்தான் உதவி செய்கின்றன. விமானங்கள் தரையிறங்க முடியாத இடங்களுக்கு ஹெலிகாப்டர்கள் எளிதாக சென்று வரும் என்பதால், ராணுவத்தில் ஹெலிகாப்டர்களின் பயன்பாடு அதிகம்.

சூப்பர் பவர்... இந்த காரியங்களை எல்லாம் ஹெலிகாப்டர்தான் அசால்டாக செய்யும்... விமானங்களால் முடியாது

மலை சிகரங்கள், சிறிய இடங்கள், கப்பல் தளங்கள் என்று விமானம் செல்ல முடியாத ஒரு சில இடங்களுக்கு எல்லாம் ஹெலிகாப்டர்கள் எளிதாக செல்லும் என்பதால், ராணுவத்தில் ஹெலிகாப்டர்களுக்கு அதிகமான முக்கியத்துவம் உள்ளது. ஒரு நாடு போரில் வெற்றி பெற்றால், அதில் ஹெலிகாப்டர்கள் மிக முக்கியமான பங்கை ஆற்றியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why Helicopters Are Better Than Airplanes - Interesting Facts. Read in Tamil
Story first published: Wednesday, September 2, 2020, 15:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X