இனி நீல நிற ரயில் பெட்டிகளை உங்களால் பார்க்க முடியாது எல்லாம் மஞ்சள் நிறமாக மாற்றப்படுகிறது ஏன் தெரியுமா?
இந்தியாவில் ரயில் பெட்டிகள் நீல நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்படுகிறது. ஏன் இந்த மாற்றம் நடக்கிறது. ரயில் பெட்டிகளில் கலர் மட்டும் தான் மாறுகிறதா? பெட்டிகளுக்குள் என்ன மாற்றம் எல்லாம் நடந்துள்ளது? முழு விபரங்களைக் கீழே காணலாம் வாருங்கள்

ஆசியக் கண்டத்தில் 2வது மிகப்பெரியதும், உலகின் 4வது மிகப்பெரியதுமான திகழ்வது இந்திய ரயில்வே, இந்தியாவில் ஏராளானமான ரயில்கள் இயக்கப்படுகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இந்த ரயில்களில் பயணிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ரயில்கள் தினமும் இந்தியா முழுவதும் இயக்கப்படுகிறது. இந்தியாவின் அதிகமாக ஊழியர்களைக் கொண்ட நிறுவனமாக இந்திய ரயில்வே செயல்படுகிறது.

இந்நிலையில் நீங்கள் சமீபத்தில் ரயிலில் பயணித்திருந்தால் ஒரு விஷயத்தைக் கவனித்திருப்பீர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நீல நிறத்திலிருந்த ரயில் பெட்டிகள் எல்லாம் தற்போது மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டிருக்கும். இது போல சில ரயில்கள் மட்டும் சிவப்பு அல்லது பச்சை நிற பெட்டிகளைக் கொண்டிருக்கும். இப்படியாக ரயில்களில் விதவிதமாக பெட்டிகள் இருப்பதற்குப் பின்னால் உள்ள அர்த்தம் என்ன முழு தகவல்களை இங்கே காணலாம்

ரயில்வே ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டே ரயில் பெட்டிகள் எல்லாம் அடர் சிவப்பு நிறத்தில்தான் பெயிண்ட் செய்யப்பட்டன. இது நேரோ மற்றும் மீட்டர் கேஜ் ரயில்களில் தான் பயன்படுத்தப்பட்டன. பின்னர் இந்தியாவில் பிராட்கேஜ் தண்டவாளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது நேரோ கேஜ் ரயில்கள் இந்தியாவிலேயே இல்லை எனச் சொல்லும் அளவிற்குக் குறைந்துவிட்டது. மீட்டர் கேஜ் எங்கோ ஒரு சில இடங்களில் ஓடலாம். ஆனால் அதுவும் பிராட்கேஜ் பாதையாக மாற்றும் பணி நடக்கிறது.

இந்த சிவப்பு நிற ரயில் பெட்டிகள் எல்லாம் 25 ஆண்டுகளுக்கு முன்பே மாற்றம் பெறத் துவங்கிவிட்டன. பிராட்ஜேக் பாதைகளுக்கான ரயில் பெட்டிகள் சென்னை பெரம்பலூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது.

இது நில நிறத்தில் உருவாக்கப்பட்டது. சிவப்பு நிற பெட்டிக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் சிவப்பு நிற பெட்டிகளில் மொத்தம் 6 சீட்கள் மட்டுமே இருக்கும் ஆனால் நீல நிற பெட்டிகளில் தனியாக 2 சீட்கள் பொருத்தப்பட்டன. இந்த சீட்கள் ரயில்கள் வந்த பின்புதான் ரயில் பயணத்தில் பெரும் புரட்சியே துவங்கியது.

இது மட்டுமல்ல நீல நிற ரயில் பெட்டிகளில் பாதுகாப்பு அம்சங்கள், கழிப்பறை வசதிகள், தொழிற்நுட்ப வசதிகள் எல்லாம் மேம்படுத்தப்பட்டன. இதனால் இந்த ரக பெட்டிகளை மக்கள் அதிகம் விரும்பினர். இந்திய ரயில்கள் பாதுகாப்பான பயணத்தைத் தரும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்தது. 1999-2000 ஆண்டுகளில் இந்த பெட்டிகள் ரயில்களில் கொஞ்சம் கொஞ்சமாகப் பயன்பாட்டிற்கு வரத் துவங்கின. இந்த கோச்கள் எல்லாம் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலைகளில் உருவாக்கப்படுவதால் ஐசிஎஃப் கோச்கள் என அழைக்கப்பட்டன.

அதே 2000வது ஆண்டில் இந்தியாவில் சிவப்பு நிற கோச்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது முதலில் ஜெர்மனி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆரம்பக்கட்டத்தில் இது இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் பின்னர் இந்த கோச்களை இந்தியாவே தயாரிக்கும் தொழிற்சாலையைப் பஞ்சாப் மாநில கபூர்தலாவில் துவங்கியது. அந்த ஆலைக்கு LHB (Link Hoffmann Bush) எனப் பெயர். அதனால் அந் ஆலையில் தயாரிக்கப்படும் பெட்டிகளை LHB கோச்கள் என்றே அழைக்கிறார்கள்.

இந்த LHBகோச்கள் முற்றிலும் அலுமினியத்தால் ஆனது முன்னதாக ஐசிஎஃப் கோச்கள் முற்றிலும் இரும்பால் செய்யப்பட்டது. LHB கோச்கள் அலுமினியத்தால் செய்யப்பட்டதால் அந்த கோச்களின் எடை குறைவாக இருக்கும். அதனால் ரயில் வேகமாகச் செல்ல முடியும். இந்த ரக கோச்கள் 200 கி.மீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. ஆனால் இந்தியாவில் 160 கி.மீ வேகம் வரை தான் பயணிக்க அனுமதியுள்ளது. அதனால் இந்த ரக கோச்கள் வேகமாகப் பயணிக்கும் ராஜ்தானி, சதாப்தி, போன்ற ரயில்களில் பொருத்தப்படுகிறது. தற்போது சில சூப்பர்பாஸ்ட் ரயில்களிலும் இந்த ரக கோச்கை காண முடியும்.

அடுத்தாக பச்சை நிறத்திலும் இந்தியா ரயில்வே கோச்கள் இருக்கிறது. இது கரீப் ரதம் ரயில்களில் மட்டும் காணப்படும். கரீப் ரதம் என்பது முற்றிலும் ஏசிப் பொருத்தப்பட்ட கோச்கள் ஆனால் இதில் பயணிக்க விலை குறைவு தான். நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் மக்கள் குறைவான விலையில் ஏசியில் பயணிக்க கரீப் ரத கோச்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ரயில்கள் குறைவான எண்ணிக்கையிலேயே பயன்படுத்தப்படுகிறது. சென்னையிலிருந்து ஒரே ஒரு ரயில் மட்டுமே இயங்குகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக நீங்கள் ரயில்களில் பயணிக்கும் போது நீல நிற பெட்டிகளுக்குப் பதிலாக மஞ்சள் நிற பெட்டிகள் ரயில்களில் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். ஏன் நீல நிற பெட்டிகள் எல்லாம் மஞ்சள் நிறமாக மாறியது என்பதற்குப் பின்னால் பெரும் திட்டமே இருக்கிறது. அதாவது கடந்த 2020ம் ஆண்டு முதல் இந்திய ரயில்வேயில் ஓடும் ரயில் பெட்டிகளை மேம்படுத்த உத்கிரஷ்ட் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக ரூ400 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்த திட்டத்தின்படி ரயில் கோச்களில் வெளிப்புற நிறத்தை பேட்ஜ் மற்றும் மெரூன் நிறமாக மாற்றப்பட்டது. இதற்கு முக்கியமான காரணம் உலக வங்கி இந்திய ரயில்வேக்கு ரயில் பெட்டிகளை மஞ்சள் நிற ஷேடில் மாற்ற வேண்டும் அப்பொழுது தான் பல விபத்துக்கள் தவிர்க்கப்படும் என அறிவுறுத்தியிருந்தது. அந்த அறிவுறுத்தலுக்கு ஏற்ப தற்போது மஞ்சள் ஷேடில் உள்ள பேட்ஜ் நிறத்திற்கு கோச்களை மாற்றியுள்ளது. இந்த திட்டத்தில் இது மட்டுமல்ல கோட்ச்களில் உள்ளேயும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி எல்லா கோச்களிலும் கொரியன் வாஷ் பேசின், பொருத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் லிக்யூடு சோப்புகளை வழங்கும் டிஸ்பென்சர்கள், டாய்லெட் உள்ளே வழங்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக டாய்லெட்ரகளில் சுவட்ச் ரயில் டாய்லெட் முறையில் பயோ கழிப்பறைகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் கழிப்பறையிலிருந்து துர்நாற்றம் வீசுவது தவிர்க்கப்படும். இது போக எல்லா பெட்டிகளில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குப்பைத் தொட்டிகள், டபுள் ஆக்டிக் ஃபயர் ஒர்த் கதவுகள், எல்இடி லைட்கள், உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இப்படியப்பட்ட வசதிகள் செய்யப்பட்ட கோச்கள் தான் பேட்ஜ் மற்றும் மெரூன் நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. இன்று பெரும்பாலான ரயில் பெட்டிகளில் நீங்கள் பேட்ஜ் மற்றும் மெரூன் நிறங்களையே காண முடியும். பழைய மாதிரி நீல நிற பெட்டிகளைக் காண முடியாது. இதுதான் ரயில் பெட்டிகள் மஞ்சள் நிறத்திற்கு மாறியதற்கு முக்கியமான காரணம். தற்போது LHB கோச்கள் ராஜ்தானி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் வேறு சில ரயில்களில் பயன்படுத்தப்படுகிறது.

இது போக LHBயில் டபுள் டக்கர் ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்படுகின்றன. இது மஞ்சம் சிவப்பு கலர் காம்பினேஷனில் உருவாக்கப்படுகிறது. இது போக மஞ்சள் பச்சை டிசைனில் ஸ்டிக்கர் ஓட்டப்பட்ட துரந்தோ ரயில்களுக்கான பெட்டிகளும் LHBயில் செய்யப்படுகிறது. துரந்தோ ரயில் பெட்டியில் சிசிடிவி கேமரா, டீ காபி வெண்டிங் மிஷின், ஆகிய வசதிகளுடன் முழுமையாக ஏசி3 டயர் பெட்டிகளைக் கொண்ட ஹம்சஃபர் ரயில் பெட்டிகளும் LHBயில் தான் செய்யப்படுகின்றன.

LHB காட்டிமன் என்ற கோச் செய்யப்படுகிறது. இது மணிக்கு 155 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லும் ரயில்களில் பொருத்தப்படும் பெட்டி. இதிலும் ஏசி சேர் கார் ரக பெட்டியாகும். பகலில் நெடுந்தூர பயணம் செய்யும் ரயில்களில் இந்த ரக பெட்டிகள் இணைக்கப்படும். இது போக தேஜஸ் ரயில்களில் LHB சேர்கார் ரயில் பெட்டிகளில் சிசிடிவி ஆட்டோமெட்டிக் டோர் வசதி கொண்டது பெட்டிகள் தேஸ் ரயிலுக்காக LHBயில் தயாரிக்கப்படுகின்றனர். அந்தியோதயா ரயில் முழுவதுமாக முன்பதில்லாத பெட்டிகள் இந்த ரயில் LHB இரண்டாம் கிளாஸ் ரயில் பெட்டியில் டாய்லெட் வசதி மட்டும் மேம்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








