Just In
- 1 hr ago
350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு... போட்டிக்கு யாருமே இல்ல...
- 15 hrs ago
டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சவால்... இந்தியாவில் பலரும் காத்து கிடந்த கார் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?
- 15 hrs ago
செம்மையான வேகத்தில் போக விரும்புபவர்களுக்கு ஏற்ற கார்... போர்ஷே 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் அறிமுகம்...
- 16 hrs ago
ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் புதுசா கொடுத்திருக்காங்க... புதிய அவதாரத்தில் அறிமுகமானது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்!
Don't Miss!
- Finance
1160 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. 6% உயர்வில் டாக்டர் ரெட்டி..!
- Sports
மும்பைக்கு ஆதரவு அளிக்கும் கோலி.. மைதானத்திற்கு நேரில் செல்வோம் என குசும்பு.. ரோகித் காப்பாத்துப்பா
- Movies
12th Man movie Review...மோகன்லாலின் மிரட்டல் நடிப்பில் 12th man எப்படி இருக்கு?
- News
பாலியல் தொழிலாளர்களும் மனிதர்கள் தானே..! ஆதார் கார்ட் கொடுங்க.. அதிரடி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்..!
- Lifestyle
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தா...அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கணைய புற்றுநோயோட அறிகுறியாம்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரயில் டிக்கெட் புக் பண்ணும்போது விரும்பிய சீட் கிடைக்காது, இதன் பின் உள்ள சயின்ஸை யாரும் சொல்ல மாட்டாங்க...
ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் டிக்கெட் புக் செய்யும் போது பயணிகளில் அவர்களுக்கு விருப்பமான சீட்டை புக் செய்ய முடியாது ஏன் தெரியுமா? இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணத்தைக் கீழே காணுங்கள்

இந்தியா மக்கள் பயன்படுத்தும் முக்கியமான போக்குவரத்து முறைகளில் ஒன்று ரயில்வே போக்குவரத்து, மத்திய அரசு இந்தியா முழுவதும் ரயில்வேவை விரிவுபடுத்தி போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களை ரயில்வே நிர்வாகம் கையாண்டு வருகிறது.

இந்த ரயில்களில் தினமும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவு செய்யும் வசதி கொண்ட ரயில்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன. இந்த அத்தனை முன்பதிவுகளும் ரயில்வே நிர்வாகம் உருவாக்கிய ஐஆர்சிடிசி என்ற அமைப்பின் ஆன்லைன் தளத்தில் தான் செய்ய முடியும்.

இந்த தளத்தில் தினமும் குறைந்தது. 1.25 லட்சம் ரயில்வே டிக்கெட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது அதிகபட்சமாக ஒரே நாளில் 5.5 லட்சம் டிக்கெட்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப் பாதுகாப்பான வெப்சைட்களில் இந்த இந்திய ரயில்வே புக்கிங் வெப்சைட்டான ஐஆர்சிடிசி வெப்சைட்டும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதே போல இந்தியாவில் பஸ்டிக்கெட் புக்கிங்களுக்கும் பல தனியார் வெப்சைட்கள் இருக்கிறது. இதே போல தியேட்டர் டிக்கெட் முன்பதிவுகளுக்கும் தனியார் இணையத்தளங்கள் இருக்கிறது. இந்த இணையத்தளங்களில் எல்லாம் இருக்கும் ஒரு வசதி ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் இல்லை. என்ன வசதி அது தெரியுமா?

ரயிலில் நீங்கள் பயணிக்கும் போது எந்த சீட்டில் நீங்கள் பயணிக்க வேண்டும் என நீங்களாகத் தேர்வு செய்ய முடியாது. ஆனால் பஸ்களிலோ, தியேட்டர்களிலோ நீங்கள் டிக்கெட் புக் செய்யும் போது எந்த சீட்டில் நீங்கள் அமர வேண்டும் என உங்களால் தேர்வு செய்ய முடியும். ஆனால் ரயிலில் அதைச் செய்ய முடியாது. அது ஏன் என நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

அந்த தொழிற்நுட்ப வசதியை ஐஆர்சிடியால் கொடுக்க முடியாமல் எல்லாம் இல்லை. ரயிலில் முன்பதிவின்போது சீட்களை ஒதுக்குவதற்குப் பின்னால் ஒரு அறிவியல் இருக்கிறது. அதைப் பற்றித் தான் இந்த செய்தியில் நாம் பார்க்கப்போகிறோம்

பொதுவாக ரயில்கள் இன்ஜின்களுடன் இணைக்கப்பட்ட வரிசையான பெட்டிகளைக் கொண்டது. ஒரு பெட்டியுடன் மற்றொரு பெட்டி இணைக்கப்பட்டு இருப்பதால் இந்த ரயில்கள் குறைவான அகலம் ஆனால் அதிகமா நீளத்தைக் கொண்டதாக இருக்கும். இப்படியான பொருட்களில் புவியீர்ப்பு மையப்புள்ளி (Center of Gravity) என்பது சரியாக இருக்கும் ரயிலின் எடையில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது புவியீர்ப்பு மையப்புள்ளியை மாற்றிவிடும். இந்த அறிவியல் காரணத்திற்காகத் தான் இணையதளமே தானாக ரயில் டிக்கெட்டை புக் செய்யும் முறையை வைத்திருக்கிறார்கள்

உதாரணமாக ஒரு ரயிலில் முன் பதிவு துவங்கிவிட்டது என வைத்துக்கொள்வோம். குறிப்பிட்ட ரயிலுக்குக் குறிப்பிட்ட நாளில் போதுமான டிக்கெட் புக் ஆகவில்லை. அப்பொழுது மக்களே தங்கள் சீட்டை தேர்வு செய்யும் ஆப்ஷன் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். எல்லா மக்களும் 10 பெட்டி இருக்கும் ஒரு ரயிலின் முதல் இரண்டு பெட்டியை மட்டும் தேர்வு செய்துவிட்டால் ரயிலின் எடை அந்த 2 பெட்டியில் அதிகமாகவும் மற்ற பெட்டிகளில் குறைவாகவும் இருக்கும். அதனால் புவியீர்ப்பு மையப்புள்ளி மாறுபடும் இதனால் ரயில் விபத்தில் சிக்கக் கூட வாய்ப்பு இருக்கிறது.

பொதுவாக முன்பதிவு செய்யப்படும் ரயில்களில் S1 முதல் S12 வரையிலான சிலீப்பர் கிளாஸ் இது போக ஏசி கிளாஸ், முன்பதிவு இல்லாத பெட்டிகள் ஆகியன இருக்கும் ஏசி மற்றும் முன்பதிவில்லை பெட்டிகளின் எண்ணிக்கை குறைவுதான் ஆனால் சிலீப்பர் கிளாஸில் உள்ள ஒரு பெட்டியில் 72 சீட்கள் இருக்கும்.

ஐஆர்சிடிசி தளம் இந்த ரயிலுக்கான முன்பதிவை முதலில் துவங்கும் போது ரயிலுக்கான மையத்தில் இருக்கும் பெட்டியில் அதாவது 12 பெட்டிகள் இருக்கும் ரயிலில் 6வது பெட்டியிலிருந்தும், 10 பெட்டிகள் இருக்கும் ரயிலில் 5வது பெட்டியிலிருந்தும் தன் முன் பதிவைத் துவங்கும் முதலில் கீழ் படுக்கையை முன்பதிவு செய்யும்

அதுவும் பெட்டியைத் தேர்வு செய்துவிட்டால் அதில் 1வது எண்ணிலிருந்து துவங்காது மாறாக மையத்தில் உள்ளது 30-40 என்ற சீட்டிலிருந்து தான் முன் பதிவைத் துவங்கும். இப்படியாகப் புவியீர்ப்பு மையப்புள்ளி மாறுபடாதபடி சீட்டிங்கை முன்பதிவு செய்யும். இதனால் ரயில் இந்த காரணத்திற்காக விபத்தில் சிக்குவதைத் தவிர்க்க முடியும். இந்த காரணத்திற்காகத்தான் ஐஆர்சிடிசி பயணிகளுக்கே தங்கள் சீட்டை தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்கவில்லை. இந்த தகவல் உங்களுக்குப் புதிதாக இருக்கிறதா? இது போன்று உங்களுக்கு ரயில் பயணத்தின் போது கிடைத்த சுவாரஸ்யமான தகவல்களை எங்களுடன் கமெண்டில் பகிருங்கள்.
-
இந்தியாவில் பெட்ரோல் விலை "ரொம்ப சீப்" தான்... மற்ற நாடுகளில் எவ்வளவு விலைன்னு இங்க பாருங்க...
-
97,000 ரூபாவுக்கே 150கிமீ பயணிக்கும் இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்தது ஒடிசி... ஓலாவுக்கு ஆப்பு ரெடி!
-
சூரிய வெளிச்சத்திலும் சார்ஜ் ஆகும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!