விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
அதிகரித்துக் காணப்படும் பெட்ரோல், டீசல் விலையைக் கண்டு ஒவ்வொரு வாகன உரிமையாளர்களும் அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான காலகட்டத்திலேயே விமானிகள் சிலர் விமானங்களை தரையிறக்கும் முன்னர் விமானத்தில் இருக்கும் எரிபொருளை திறந்துவிட்டு வீணடிப்பார்கள் என்கிற அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த செயல் நேற்று, இன்று அல்ல காலகாலமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விமானங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட காலத்தில் இருந்தே இது செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. விமானிகள் வேண்டுமென்றே ஏன் இந்த செயலைச் செய்கின்றனர்? இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் நடுவானிலேயே விமானிகள் இதைச் செய்கின்றனர். இதற்கு விமான உலகில் 'எரிபொருள் ஜெட்டிங்' (fuel jetting) என்ற பெயர் உண்டு. நடுவானில் இருக்கும்போது எரிபொருளை திறந்துவிடுவது என்பது அவ்வளவு பாதுகாப்பான செயல் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. அது மிகுந்த ஆபத்தான செயல்.
இருப்பினும் இதை விமானிகள் துணிச்சலாக செய்கின்றனர். அதேநேரத்தில் அதை மிக பாதுகாப்பாகவும் செய்து முடிப்பார்கள். ஆபத்து இருக்கிறது என்கிற காரணத்திற்காகவோ, அல்லது, இது பணத்தை வீணழிக்கக் கூடிய சயல் என்பதற்காகவோ, ஒரு நாளும் விமானிகள் இந்த செயலைச் செய்ய மறுக்க மாட்டார்கள். தேவைப்படும் நேரத்தில் கட்டாயம் எரிபொருளை விமானத்தில் இருந்து திறந்து விட்டு வெளியேற்றிவிடுவார்கள்.

அதேநேரத்தில், எல்லா விமானத்திலும், எல்ல நேரங்களிலும் இவ்வாறு எரிபொருள் திறந்துவிட்டு வீணடிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே விமானிகள் எரிபொருளை நடுவானில் திறந்துவிடுவார்கள். அப்படி என்ன காரணம் அது என்று தானே கேக்குறீங்க? அது வேறு ஒன்றுமில்லைங்க, விமானங்கள் தரையிறங்கும் போது குறிப்பிட்ட அளவில் மட்டுமே அதன் எடை இருத்தல் வேண்டும்.
அளவிடப்பட்ட எடையைத் தாண்டி விமானம் இருத்தல் கூடாது. அப்படி மீறி இறங்கினால் மிகப் பெரிய ஆபத்தான சூழல் உருவாகி விடும். இதன் விளைவாகவே தேவையான எடை சமநிலையைக் கொண்டு வரும் பொருட்டு விமானங்களில் இருக்கும் எரிபொருள் வெளியேற்றப்படுகின்றது. அதேவேளையில் இந்த கட்டுப்பாடு சில விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஒரு சில விமானங்கள் தரையிறங்கும் போது கூடுதல் இலகுவானதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. அதாவது, டேக்-ஆஃப் செய்யும்போது இருப்பதைக் காட்டிலும் சற்று குறைவான எடையை தரையிறங்கும்போது இருத்தல் வேண்டும். அத்தகைய விமானங்களிலேயே இதுமாதிரியான செயல்கள் தொடர்ச்சியாக செய்யப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
எனவே விமானங்கள் பறக்கும்போது மட்டுமல்ல தரையிறங்கும்போது எடை அதிகமாக இருத்தல் கூடாது என்பது தெளிவாக தெரிகின்றது. கூடுதல் எடையுடன் ஓர் விமானம் தரையிறங்க நேரிடும் எனில் அது அதிக கனமாக தரையிறங்க நேரிடும். இதன் விளைவாக விமானம் மிகப் பெரிய மோதலைச் சந்திப்பதற்கு இணையான பின் விளைவைச் சந்திக்க நேரிடும்.
இதனால்தான் இது மிக பெரிய ஆபத்தாகக் கருதப்படுகின்றது. எனவேதன் பல டாலர்கள் மத்திப்புள்ள எரிபொருளை வானில் பறக்கும்போதே தரையிறங்கும் விமானிகள் வானில் சிதறிடித்துவிடுகின்றனர். சராசரியாக ஒவ்வொரு பெரிய, நீண்ட தூரம் பயணிக்கும் விமானங்களிலும் 10 ஆயிரம் கணக்கான கேலன்கள் எரிபொருள் நிரப்பப்படும்.
இதில், சில நூறு கேலன் அல்லது ஆயிரக் கணக்கான கேலன்கள் எரிபொருளே வீணடிக்கப்படுகின்றன. சில நேரங்களில் விமானங்களே பயணத்தின்போது தேவையான அளவு எரிபொருளை எரித்து தரையிறங்குவதற்கு ஏற்ற எடைக் கொண்டதாக மாற்றிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது நடக்க தவறும்பட்சத்திலேயே விமானிகளால் வேண்டுமென்றே அளவுக்கு அதிகமாக இருக்கும் எரிபொருள் வெளியேற்றப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானிகள் எரிபொருளை வெளியேற்ற மிகப் பெரிய ரிஸ்க்கை எடுப்பார்களோ என நினைக்க வேண்டாம். விமானங்களில் இருந்து எரிபொருளை வெளியேற்றுவது மிகவும் சுலபமான செயல் ஆகும். ஒரு சிறிய சுவிட்சைத் தட்டினாலே போதும் ஆயிரக் கணக்கான லிட்டர் எரிபொருள் கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியேறிவிடும்.


Click it and Unblock the Notifications








