ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து பல்க் ஆர்டர்... ஆஃபரை கொடுத்து வளைத்த டொயோட்டா!

Written By:

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிக்கப் டிரக் டீலை பெறுவதற்காக, கூடுதல் ஆக்சஸெரீகளை டொயோட்டா இலவசமாக வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"கடும் போட்டியில் டீலை பெறுவதற்காக தீவிரவாதிகளுக்கு ஆஃபர் கொடுத்ததற்காக டொயோட்டா தலைவர் தகேஷி உச்சியமடா வருத்தம் தெரிவித்திருக்கிறார். மேலும், கடும் சந்தைப்போட்டி காரணமாக, அந்த ஆஃபரை வழங்க வேண்டி எங்கள் கைகள் கட்டப்பட்டுவிட்டன," என்றும் அவர் கூறினார்.

இந்தநிலையில், டொயோட்டா ஹை- லக்ஸ் பிக்கப் டிரக்குகள்தான் தீவிரவாத இயக்கங்களின் ஆஸ்தான வாகனமாக விளங்குகிறது. இன்று, நேற்றல்ல... பல ஆண்டு காலமாக டொயோட்டா ஹை- லக்ஸ் பிக்கப் டிரக்குகளை தாலிபான் போன்ற தீவிரவாத இயக்கங்கள் விரும்பி வாங்குகின்றன. இதுபற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

விருப்ப வாகனம்

விருப்ப வாகனம்

1990களிலேயே தாலிபான் தீவிரவாதிகள் டொயோட்டா - ஹை- லக்ஸ் பிக்கப் டிரக்குகளை வாங்கி பயன்படுத்த துவங்கினர். தாக்குதல்களை எதிர்கொள்ளவும், தாக்குதல்களை நடத்துவதற்கும் தாலிபான்கள் கையில் ஏராளமான டொயோட்டா ஹை - லக்ஸ் பிக்கப் டிரக்குகள் உள்ளன. இதைத்தொடர்ந்து, தற்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆஸ்தான வாகனமாக டொயோட்டா ஹை - லக்ஸ் மாறியிருக்கிறது.

டொயோட்டா ஹை - லக்ஸ்

டொயோட்டா ஹை - லக்ஸ்

அதிக சொகுசு வசதிகள் கொண்ட Hi- Luxury என்ற பெயரையே தாங்கி பிடித்திருக்கும் பிக்கப் டிரக் மாடல். தனி நபர் மார்க்கெட்டை குறிவைத்தே அறிமுகம் செய்யப்பட்டது. உல்லாச பயணங்களுக்கு மட்டுமின்றி, ஆஃப்ரோடு விரும்பிகளுக்கும் ஏற்ற அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டது. ஆனால், இன்று தீவிரவாதிகளின் ஆஸ்தான வாகனமாக மாறியிருக்கிறது.

கட்டுறுதி...

கட்டுறுதி...

இதனை விரும்பி வாங்குவதற்கான இதன் சிறப்பான கட்டுமானம்தான் முக்கிய காரணம். அத்துடன் பராமரிப்பு செலவும் மிக குறைவானது. டாப் கியர் நிகழ்ச்சி ஒன்றில், 18 ஆண்டுகள் பழமையான டொயோட்டா ஹை - லக்ஸ் பிக்கப் டிரக்கை சோதனை முயற்சியாக மரத்தில் மோதியும், கடல் நீரில் 5 மணி நேரம் போட்டும் சோதனை செய்த காட்சியை பலரும் கண்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால், எந்தவொரு கூடுதல் உதிரிபாகமும் இல்லாமல், அந்த பிக்கப் டிரக்கை அவர்கள் இயக்கிக் காட்டியதே அந்த நிகழ்ச்சியின் ஹை-லைட். அந்தளவுக்கு மிகவும் சிறந்த வாகனம்...

வலது கரம்

வலது கரம்

தாலிபான், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கங்கள் மட்டுமின்றி, உலகில் பல்வேறு உரிமை மீட்பு போராட்டக் களத்தில் இருக்கும் அமைப்புகள் டொயோட்டா ஹை- லக்ஸ் பிக்கப் டிரக்கையே வாங்கி பயன்படுத்துகின்றன. இந்த நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு 30 டொயோட்டா ஹை- லக்ஸ் பிக்கப் டிரக்குகள் சப்ளை செய்யப்பட்டுள்ளன.

 ஆஃபர்

ஆஃபர்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்காக இந்த டீலை கொண்டு வந்த ஏஜென்ட்டுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, இந்த ஆர்டரை வேறு ஒரு நிறுவனத்துக்கு செல்லும் வாய்ப்பிருந்ததாம். இதையடுத்து, பிக்கப் டிரக்குகளில் எந்திர துப்பாக்கி பொருத்துவதற்கான ஹோல்டர், கேபினுக்கான உயர்தர அப்ஹோல்ஸ்டரி, முன்புற எக்ஸ்ட்ரா பம்பர் போன்றவற்றை டொயோட்டா இலவசமாக தர முன்வந்தது. இதுவே சர்ச்சையையும் ஏற்படுத்தியது. சர்ச்சையை தொடர்ந்து டொயோட்டா தலைவர் இப்போது மன்னிப்பு கோரியுள்ளார்.

அமெரிக்க தயாரிப்பு

அமெரிக்க தயாரிப்பு

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு சப்ளை செய்யப்பட்ட டொயோட்டா ஹை- லக்ஸ் பிக்கப் டிரக்குகள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டொயோட்டா ஆலையில் தயாரிக்கப்பட்டவையாகும். வெள்ளை நிற டொயோட்டா ஹை- லக்ஸ் பிக்கப் டிரக்குகள் இப்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்யப்பட்டிருப்பதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.

மக்கள் வரிப்பணம்

மக்கள் வரிப்பணம்

டொயோட்டா ஆஃபர் வழங்கியது மட்டுமின்றி, அமெரிக்க அரசின் வரிச்சலுகைகளுடன் அமைக்கப்பட்ட டொயோட்டாவின் டெக்சாஸ் ஆலையில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள்தான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு சப்ளை செய்யப்பட்டிருப்பதாக வெளியானத் தகவலும், அந்நாட்டு மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

டொயோட்டா ஹை- லக்ஸ் சிறப்புகள்

டொயோட்டா ஹை- லக்ஸ் சிறப்புகள்

1968ல் டொயோட்டா ஹை- லக்ஸ் பிக்கப் டிரக்கின் உற்பத்தி துவங்கப்பட்டது. இப்போது எட்டாம் தலைமுறை மாடலாக விற்பனை செய்யப்படுகிறது. எந்தவொரு சாலை நிலையிலும் சிறப்பாக செயல்படக்கூடிய எஞ்சின் மற்றும் கட்டுறுதியை கொண்டது. 2 லட்சம் முதல் 3 லட்சம் கிலோமீட்டர் வரை ஓட்டக் கூடிய கட்டுமானத்தை இந்த பிக்கப் டிரக் கொண்டதாக புகழ்பாடப்படுகிறது.

 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Why ISIS Terrorists Fond of Toyota Hilux Truck? Here is the answer.
Story first published: Monday, June 29, 2015, 15:31 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark