ISRO LVM3 Rocket: பிஎஸ்எல்வி இருக்கும் போது ஒன்வெப் செயற்கைக்கோள்களை ஏவ ஜிஎஸ்எல்வியை பயன்படுத்துவது ஏன்?

இஸ்ரோ நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தாவன் விண்வெளி மையத்திலிருந்து இங்கிலாந்து நிறுவனத்தைச் சார்ந்த 36 செயற்கைக் கோள்களை விண்ணில் நிலைநிறுத்தத் தனது எல்விஎம்-3 (LVM-3) ராக்கெட்டை விண்ணிற்கு அனுப்புகிறது. இந்த எல்விஎம்- 3 (LVM-3)ராக்கெட் முன்னர் ஜிஎஸ்எல்வி மார்க்-3 (GSLV MARK III) என அழைக்கப்பட்டது.

இந்த எல்விஎம்-3 (LVM-3)ராக்கெட்டை தயாரித்தது இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனை தான். இஸ்ரோ தனக்கென ஒரு ராக்கெட்டை உருவாக்க நினைக்கும் போது 2 விதமான ராக்கெட்களை உருவாக்கத் திட்டமிட்டது. ஒன்று குறைந்த தூரம் மட்டும் பயணிக்கும் Polar Satellite Launch Vehicle (PSLV), மற்றொன்று நீண்ட தூரம் பயணிக்கும் Geosynchronous Satellite Launch Vehicle (GSLV) ஆகிய ராக்கெட்களை உருவாக்கியது.

பிஎஸ்எல்வி இருக்கும் போது ஒன்வெப் செயற்கைக்கோள்களை ஏவ ஜிஎஸ்எல்வியை பயன்படுத்துவது ஏன்?

எல்எம்வி-3: இந்த எல்எம்வி 3 ரக ராக்கெட் மொத்தம் 3 கட்டங்களாகச் செயல்படும் முதல் கட்டம் திட வடிவிலான எரிபொருளைக் கொண்டு இயங்கும். இரண்டாவது கட்டம் திரவ வடிவிலான எரிபொருளைக் கொண்டு இயங்கும். மூன்றாவது கட்டம் கிரையோஜினிக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் இந்த ராக்கெட் செயல்படும் படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

லோ எர்த் ஆர்பிட்: இந்த எல்விஎம்-3 ராக்கெட் செயற்கைக்கோள்களை ஜியோஸ்டேஷனரி டிரான்ஸ்ஃபர் ஆர்பிட் வரை எடுத்துச்செல்லும் திறன் கொண்டது. ஆனால் தற்போது விண்ணில் ஏவப்படும் ஒன் வெப் செயற்கைக்கோள்கள் விண்ணில் லோ எர்த் ஆர்பிட் பகுதி வரை கொண்டு சென்றால் போதும். இந்த பகுதிக்கு பிஎஸ்எல்வி ராக்கெட்டாலேயே செல்ல முடியும்.

பிஎஸ்எல்வி இருக்கும் போது ஒன்வெப் செயற்கைக்கோள்களை ஏவ ஜிஎஸ்எல்வியை பயன்படுத்துவது ஏன்?

எல்இஓ vs ஜிடிஓ: விண்வெளி ஆய்வில் செயற்கைகோள்களின் சுற்று வட்டப் பாதைகளை 6 விதமாகப் பிரித்துள்ளது. லியோ என்பது பூமிலியிருந்து 500 முதல் 1500 கி.மீ தொலைவு வரை உள்ள பகுதியைக் குறிக்கும். ஜிடிஓ என்பது என்பது பூமிலிருந்து 36,000 கி.மீக்கும் அதிகமான தூரத்தைக் குறிக்கும் இதில் எல்விஎம்-3 ராக்கெட் ஜிடிஓ வரை சென்று செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தும் பணியைச் செய்யும் திறன் கொண்டது.

பிஎஸ்எல்வி இருக்கும் போது எல்விஎம்-3 ஏன்?: இந்த ஒன் வெப் சாட்டிலைட்கள் லோ எர்த் ஆர்பிட் (1200 கி.மீ) பகுதியில் தான் நிலை நிறுத்தப்பட வேண்டும். அந்த தூரத்தை பிஎஸ்எல்வி ராக்கெட்டே கடக்கும் என்றாலும் இந்த மிஷனிற்கு இஸ்ரோ ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை பயன்படுத்துகிறது. பலருக்கு இது ஏன் என்பது தெரியவில்லை. இதற்கான காரணம் சாட்டிலைட்களின் எடை தான்.

பிஎஸ்எல்வி இருக்கும் போது ஒன்வெப் செயற்கைக்கோள்களை ஏவ ஜிஎஸ்எல்வியை பயன்படுத்துவது ஏன்?

பிஎஸ்எல்வி ராக்கெட்டில் அதிகபட்சம் 1750 கிலோ எடை கொண்ட சாட்டிலைட்களை தான் அதிகபட்சம் பொருத்தி அனுப்ப முடியும் ஆனால் எல்விஎம்-3 ராக்கெட்டை பொருத்தவரை 8000 கிலோ வரையிலான எடை கொண்ட சாட்டிலைட்களை விண்ணில் அனுப்பச் சாத்தியம் உள்ளது. ஒன் வெப் நிறுவனத்தின் 36 சாட்டிலைட்கள் மொத்தம் 6 டன் எடை கொண்டதாக இருப்பதால் இதற்கு எல்விஎம்-3 ராக்கெட் தேவைப்படுகிறது.

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் எல்விஎம் என பெயர் மாற்றம் பெற்றதற்கும் இதான் காரணம் இது ஜியோ ஸ்டேஷனரி பகுதிக்குச் செல்லாது. லோ எர்த் ஆர்பிட் பகுதி வரை மட்டுமே செல்லும். இதில் விண்ணில் ஏவப்படும் 36 செயற்கைக் கோள்கள் 12 பிளேன்களில் பொருத்தப்பட்டுள்ளது. ராக்கெட் குறிப்பிட்ட உயரத்திற்குச் சென்றதும் இது ஒவ்வொரு பிளேனையும் சுமார் 4 கி.மீ இடைவெளியில் ரிலீஸ் செய்யும்.

இதனால் ஒரு பிளேன் மற்றொரு பிளேன் உடன் உரசாமல் இருக்கும். பின்னர் இந்த பிளேனிலிருந்து சாட்டிலைட்கள் விண்ணில் நிலை நிறுத்தப்படும். அதன் பின்னர் இதை வெப் ஒன் நிறுவனம் கட்டுப்படுத்த முடியும். இந்த எல்விஎம் ராக்கெட் என அழைக்கப்படும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் தான் வருங்காலத்தில் இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப பயன்படுத்தப்போகும் ராக்கெட்டாகும்.

டிரைவ்ஸ்பார்க் நினைப்பது என்ன?: இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி உலகளவில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை அடைந்துள்ளது. தற்போது பல வெளிநாட்டு நிறுவனங்களே இஸ்ரோவின் உதவியை நாடி வருகிறது. அதற்கு இந்த விண்வெளி ஏவுதலே சிறந்த உதாரணம். தொடர்ந்து இந்தியா விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய எல்லைகளை எட்டி பிடித்து உலகின் சிறந்த விண்வெளி ஆய்வு மையமாக வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Article Published On: Saturday, March 25, 2023, 21:00 [IST]
English summary
Why isro using lvm 3 instead of pslv in oneweb india 2 mission
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+