அழகான மனைவி கிடைப்பாங்க! டயர்ல எலுமிச்சையை நசுக்கறதுக்கு உண்மையான காரணம் இதானா! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

இந்தியர்கள் ஜாதகம் (Horoscope) மற்றும் ஜோதிடம் (Astrology) ஆகிய விஷயங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். எனவே புதிதாக ஒரு செயலை தொடங்கும் முன்னர், ஜோதிடர்களிடம் ஜாதகத்தை கொடுத்து தங்களின் எதிர்காலத்தை கணிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அத்துடன் எந்தவொரு செயலையும் புதிதாக தொடங்குவதற்கு முன்னதாக ஒரு சில சடங்கு மற்றும் சம்பிரதாயங்களை மேற்கொள்வதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். புதிதாக வாங்கிய வாகனங்களின் டயருக்கு அடியில் எலுமிச்சை பழத்தை வைத்து நசுக்கிய பிறகு பயணங்களை தொடங்குவதை இதற்கு ஒரு உதாரணமாக கூற முடியும்.

புதிய வாகனங்களை வாங்கும் சமயங்களில் மட்டுமல்லாது, தொலை தூர மற்றும் ஆன்மீக பயணங்களை தொடங்குவதற்கு முன்பாகவும், வாகனங்களின் டயருக்கு அடியில் எலுமிச்சை பழத்தை வைத்து நசுக்கிய பிறகு பயணங்களை தொடங்குவது என்பது, இந்தியர்களின் வழக்கமாக உள்ளது. இதற்கு என்ன காரணம் என எப்போதாவது யோசித்துள்ளீர்களா?

Why Lemon Is Kept Under The Tyre Of Vehicle

ஜோதிடத்தின்படி இதற்கு என்ன காரணம்? என்பதையும், முற்காலத்தில் இந்த பழக்கம் எப்படி உருவானது? என்பதையும் இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். ஜோதிடத்தில் எலுமிச்சை பழத்திற்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் உள்ளது. தீய சக்தியை விரட்டும் தன்மை எலுமிச்சை பழத்திற்கு உள்ளது என கருதப்படுவதுதான் இதற்கு காரணம்.

வேதங்களின்படி பார்த்தால், எந்தவொரு புதிய பொருளை சுற்றியும், எதிர்மறை சக்திகள் இருக்கும் என கருதப்படுகிறது. எனவே எந்தவொரு புதிய பொருளை வாங்கினாலும், அதை சுற்றி எலுமிச்சை பழத்தை வைக்க வேண்டும் என்பது இந்தியர்களின் நம்பிக்கை. இதன் காரணமாகவே புதிய வாகனங்களின் டயருக்கு அடியில் எலுமிச்சை பழங்களை வைக்கின்றனர்.

Lemon

ஜோதிடத்தின்படி பார்த்தால், சுக்கிரன் மற்றும் சந்திரன் உடன், எலுமிச்சை பழத்திற்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக கருதப்படுகிறது. அதாவது எலுமிச்சை பழத்தின் புளிப்பு சுவை வெள்ளி கோள் உடன் தொடர்புடையது எனவும், எலுமிச்சை பழத்தின் சாறு நிலவுடன் தொடர்புடையது எனவும் ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே புதிய வாகனங்களின் டயருக்கு அடியில் எலுமிச்சை பழத்தை வைத்து நசுக்கினால், ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் சந்திரனின் நிலை வலுப்பெறும் என்பது ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது. ஜோதிடத்தின்படி உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் சந்திரன் வலுப்பெற்றால், உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இதன்படி சொகுசு வாகனங்கள், நல்ல அழகான மனைவி, வீடு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் தெளிவான மனம் ஆகியவை எல்லாம் உங்களுக்கு கிடைக்கும் என கருதப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் உங்கள் ஜாதகத்தில் சுக்கிரனும், சந்திரனும் வலுப்பெற்றால், மிகவும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை கிடைக்கும். அத்துடன் வாழ்க்கையின் சவால்களை எளிமையாக கையாளலாம்.

இது போன்ற நன்மைகள் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், தீய சக்திகள் மற்றும் எதிர்மறை எண்ணங்களை எல்லாம் விரட்டி பயணங்கள் மிகவும் பாதுகாப்பாக அமைய வேண்டும் என்பதற்காகவும்தான் வாகனங்களின் டயருக்கு அடியில் எலுமிச்சை பழத்தை வைத்து நசுக்குவதாக ஜோதிடர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இதுவரை நாங்கள் கூறியவை எல்லாம் ஜோதிடத்தின் அடிப்படையிலான கருத்துக்கள் ஆகும். வாகனங்களின் டயருக்கு அடியில் எலுமிச்சை பழத்தை வைத்து நசுக்குவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. இது பண்டைய காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு நடைமுறை ஆகும்.

அதாவது வாகன பயன்பாடு இல்லாத முந்தைய காலகட்டத்தில், மாடு, குதிரை, கழுதை போன்றவற்றைதான் போக்குவரத்திற்கு மக்கள் பயன்படுத்தினர். தொலை தூர பயணங்களின்போது அவற்றின் கால்களில் கற்கள், முட்கள் குத்தி காயங்கள் ஏற்படும். இந்த காயங்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, எலுமிச்சை பழத்தை மிதிக்க வைத்து அழைத்து சென்றனர்.

ஏனெனில் எலுமிச்சை ஒரு இயற்கையான கிருமி நாசினி ஆகும். இது விலங்குகளுக்கு காயங்களில் இருந்து பாதுகாப்பு அளித்தது. அன்றைய காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த நடைமுறையே மக்கள் இன்றும் கைவிடாமல் தற்போது மோட்டார் வாகனங்களுக்கும் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 28, 2025, 13:27 [IST]
English summary
Why lemon is kept under the tyre of vehicle know all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+