Just In
- 41 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
தேனியில் டிடிவி தினகரன் தங்க வீடு பார்க்கும் அமமுகவினர்.. கலக்கத்தில் இரண்டு தலைகள்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விமானத்தின் இடது பக்கம் சிகப்பு, வலது பக்கம் பச்சை லைட் இருப்பதற்கு காரணம் இதுதான்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே
விமானத்தின் இடது இறக்கையில் சிகப்பு விளக்கும், வலது இறக்கையில் பச்சை விளக்கும் வழங்கப்படுவதற்கு என்ன காரணம்? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

விமானத்தின் இறக்கைகளில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்துள்ளீர்களா? ஒரு சில விதிவிலக்குகள் இருந்தாலும் கூட, வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான விமானங்களின் இறக்கைகளில் நிச்சயமாக வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் அவை சிகப்பு மற்றும் பச்சை வண்ண விளக்குகளாகதான் இருக்கும்.

விமானங்களின் இறக்கைகளில் ஏன் சிகப்பு மற்றும் பச்சை வண்ண விளக்குகளை பயன்படுத்துகின்றனர்? என்பது அடிக்கடி விமான பயணம் செய்யும் சிலருக்கு கூட தெரியாது. ஆனால் இந்த செய்தியின் முடிவில், அதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். விமானங்களின் இறக்கைகளில் உள்ள சிகப்பு மற்றும் பச்சை வண்ண விளக்குகள் 'நேவிகேஷன் லைட்கள்' எனப்படுகின்றன.

இரவு நேரங்களில் வானில் பறந்து கொண்டிருக்கும் மற்ற ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களின் பைலட்களுக்கு, மற்றொரு விமானம் பறந்து கொண்டுள்ளது என்பது தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த 'நேவிகேஷன் லைட்கள்' வடிவமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, விமானம் எந்த பாதையில் பயணம் செய்கிறது? என்பதையும் இந்த 'நேவிகேஷன் லைட்கள்' மற்ற பைலட்களுக்கு உணர்த்தி விடும்.

இதன் மூலம் மோதல் தவிர்க்கப்படும். வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான விமானங்களின் ஒரு இறக்கையில் சிகப்பு விளக்கும், அதன் எதிர்ப்புற இறக்கையில் பச்சை விளக்கும் பொருத்தப்பட்டிருக்கும். இதில், சிகப்பு விளக்கு விமானத்தின் இடது பக்க இறக்கையிலும், பச்சை விளக்கு விமானத்தின் வலது பக்க இறக்கையிலும் வழங்கப்பட்டிருக்கும்.

இதுதவிர விமானங்களின் வால் பகுதியில் வெள்ளை விளக்கு ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கும். இதில், சிகப்பு மற்றும் பச்சை விளக்குகளை இறக்கைகளில் பயன்படுத்துவதற்கு முதல் காரணம், விமானத்தை எளிதாக பார்க்க முடியும் என்பதுதான். விமானங்களின் இறக்கைகளில் சிகப்பு விளக்குகள் மட்டும் இருந்தாலோ அல்லது பச்சை விளக்குகள் மட்டும் இருந்தாலோ, மற்ற பைலட்கள் அவற்றை தவறாக கணிக்க கூடும்.

அதாவது விமானங்களுக்கு பதிலாக அவற்றை ட்ரோன்கள் என நினைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆம், விமானங்களில் மட்டுமே சிகப்பு மற்றும் பச்சை வண்ண விளக்குகளின் கலவை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வானில் பறக்கும் திறனை பெற்றுள்ள ட்ரோன்கள் போன்றவற்றில் இருந்து விமானங்களை எளிதாக வேறுபடுத்தி பார்க்க முடியும்.

படகுகளில் இருந்துதான் இந்த சிகப்பு மற்றும் பச்சை வண்ண விளக்கு கலவையை விமானங்கள் பெற்றதாக கூறப்படுகிறது. படகுகளில் சிகப்பு மற்றும் பச்சை வண்ண விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் மோதலை தவிர்க்க முடிகிறது என்பதை கடந்த 19ம் நூற்றாண்டின்போது கடற்பயணம் மேற்கொள்பவர்கள் கண்டறிந்தனர்.

எனவே விமான துறையை சேர்ந்த நிபுணர்களும் அதே வழியை பின்பற்ற தொடங்கி விட்டனர். சிகப்பு மற்றும் பச்சை வண்ண விளக்கு கலவை விமானங்களை தெளிவாக தெரியும்படி செய்து, வானில் மோதலுக்கான வாய்ப்பை குறைக்கிறது. இதன் மூலம் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படுகிறது. மனித கண்களால் சிகப்பு, பச்சை வண்ணத்தை மிக எளிதாக வேறுபடுத்தி பார்க்க முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சரி, விமானங்களின் இறக்கைகளில் சிகப்பு மற்றும் பச்சை வண்ண விளக்குகளுடன், வால் பகுதியில் வெள்ளை வண்ண விளக்கு வழங்கப்பட்டிருக்கும் என ஏற்கனவே கூறியிருந்தோம் அல்லவா? இந்த மூன்று வண்ண விளக்குகளின் கலவையும், விமானங்கள் எந்த திசையில் இருந்து எந்த திசையில் செல்கின்றன? என்பதை மற்ற பைலட்கள் கணிப்பதற்கு உதவி செய்கின்றன.

அதாவது ஒரு ஹெலிகாப்டரின் பைலட் இரவு நேரத்தில் தனது வலது பக்கத்தில், சிகப்பு மற்றும் வெள்ளை விளக்குகளை பார்க்கிறார் என்றால், விமானம் வலது பக்கத்தில் இருந்து இடது புறம் நோக்கி சென்று கொண்டுள்ளது என அர்த்தம். அதே நேரத்தில், அந்த ஹெலிகாப்டரின் பைலட் பச்சை மற்றும் வெள்ளை விளக்குகளை பார்த்தால், விமானம் இடது புறத்தில் இருந்து வலது பக்கம் செல்கிறது என அர்த்தம்.

வானில் மோதல்களை தவிர்க்க பைலட்களுக்கு இந்த விளக்குகளின் கலவை எப்படி உதவி செய்கிறது? என்பது உங்களுக்கு தற்போது புரிந்திருக்கும் என நம்புகிறோம். விமானங்களும், விமான பயணங்களும் இப்படி இன்னும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை உள்ளடக்கியது. அடுத்தடுத்த பதிவுகளில் உங்களுக்கு பயனுள்ள இன்னும் பல்வேறு தகவல்களை வழங்குகிறோம்.
Note: Images used are for representational purpose only.