பஞ்சர் ஆகும்னு பயம்லாம் இல்ல! பின்ன எதுக்காக ராணுவ பீரங்கி டயர் வித்தியாசமா இருக்கு தெரியுமா?
உலகம் முழுவதும் உள்ள அனைத்து வாகனங்களிலும் டயர் இருக்கும். ஆனால் நீங்கள் கவனித்துள்ளீர்களா? ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பீரங்கிகளில் மட்டும் டயருக்கு பதிலாக டயருக்கு பதிலாகப் பெரிய இருப்பு பட்டை டிராக் பொருத்தப்பட்டிருக்கும். இதைப் பற்றித் தான் இங்குக் காணப்போகிறோம்.
உலகில் எல்லா வாகனங்களிலும் டயர் இருக்கும் போது ராணுவ பீரங்கிகளில் மட்டும் டயர் இல்லாமல் இப்படி இருப்பு பட்டை கொண்ட வீல் பொருத்தப்பட்டிருக்கும். இது ஏன் என என்றாவது யோசித்துள்ளீர்கள்? இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த பீரங்கிகள் குறித்த வரலாறு உங்களுக்குத் தெரிய வேண்டும்.

இந்த பீரங்கிகள் கடந்த 1872ம் ஆண்டு தான் முதன் முதலில் பயன்பாட்டிற்கு வந்தது. ஜோசப் ஹாக்கர் என்பவர் தான் இதை முதன் முதலில் உருவாக்கினார். ஆனால் இதைப் போருக்கான பீரங்கியாக முதலில் பயன்பாட்டில் இல்லை 1916ம் ஆண்டு தான் பிரிட்டிஷ் இதைப் போருக்காகப் பயன்படுத்தியது.
இது முதலில் ஒரு நடமாடும் தண்ணீர் தொட்டி என்ற பயன்பாட்டிற்காகத் தான் இந்த வாகனம் முதன் முதலில் கட்டமைக்கப்பட்டது. அதனால் தான் ஆங்கிலத்தில் இன்றும் அதை டேங்க் (Tank) என்று அழைக்கின்றனர். ராணுவத்தில் தண்ணீர் கிடைக்காத பகுதிகளுக்குச் செல்லும் போது இதில் தண்ணீரை நிரம்பி எடுத்துச் செல்லுவார்களாம்.

இது கரடு முரடான பகுதிகளிலும் செல்ல வேண்டும் என்பதாலும் தண்ணீர் நிரம்பிய நிலையில் இந்த வாகனத்தின் எடை அதிகமாக இருப்பதாலும் இதைச் சமாளிக்க டேங்க்களில் வழக்கமான டயர்கள் இல்லாமல் இப்படி இரும்பு பட்டைகளால் ஆன வீல் பொருத்தப்பட்டது. இது கண்டியூயஸ் டிராக் என அழைக்கப்பட்டது.
இதில் சாதாரண ரப்பர் டயர்களை பயன்படுத்தினால் இது அதிக எடை காரணமாக ஏதாவது சேரு, சகதி அல்லது மணல் போன்ற இடங்களில் செல்லும் போது நடுவழியில் தரையில் பதிந்துவிடும் ராணுவம் என்பது எப்பொழுது வேண்டுமானாலும் ஆபத்து வரும் தப்பியோட வேண்டிய சூழ்நிலையில் இருக்க வேண்டிய பகுதி என்பதால் அந்த நேரத்தில் இந்த வாகனம் பூமியில் பதிந்துவிட்டால் எதிரிகளிடம் எளிதாக அகப்பட்டு விட வாய்ப்பு இருப்பதால் சாதாரண ரப்பர் டயர்களை பயன்படுத்துவதில்லை.

தண்ணீர் டேங்கிலிருந்து ஆயுங்கள் பொருத்தப்பட்ட பீரங்கியாக இது மாற்றப்படும் போது இது அதற்காக மட்டும் பயன்படுத்தப்படவில்லை. மாறாக இதில் அதிக இடம் இருப்பதால் குண்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், சில நேரங்களில் மறைந்திருந்து தாக்க வீரர்களை இதில் எடுத்துச் செல்வார்கள். இதனால் அதிகமான எடை தற்போதும் ஏற்றப்பட வாய்ப்பு இருக்கிறது.
சிலருக்கு இப்படியாக இரும்பு பட்டை கொண்ட டயர்கள் பயன்படுத்தப்படுவதால் இந்த பீரங்கிகள் மெதுவாகத் தானே செல்லும் என்ற சந்தேகம் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான ராணுவ பீரங்கிகள் 40 கி.மீ வேகம் வரை சமதளமான பாதைகளில் செல்லும் திறன் கொண்டது. இதுவே நன்கு கட்டமைக்கப்பட்ட ரோடுகள் என்றால் 70 கி.மீ வேகம் வரை செல்லும் அவசரக் காலத்திற்காகப் பீரங்கிகள் சிறிது தூரம்110 கி.மீ வேகத்தில் கூட செல்ல முடியும்படி தான் வடிவமைத்துள்ளனர்.
ஆனால் பீரங்கிகள் பெரும்பாலும் அவசரக் காலத்தில் மட்டும் தான் வேகமாகச் செல்ல அனுமதியுண்டு சாதாரணமாகச் செல்லும் போது மெதுவாகத் தான் பயணிக்கும். நீங்கள் வீடியோக்களில் பார்க்கும் போது வேகமாக ஓட்ட மாட்டார்கள். இதற்குக் காரணம் பீரங்கிகள் வேகமாகச் செல்லும் போது சேதாரம் அதிகமாக இருக்கும். இதனால் தேவையில்லாமல் உதாரணமாக ரோடாக இருந்தால் அது முழுவதும் பெயர்ந்துவிடும்.
இதனால் அதை மெதுவாகத் தான் இயங்குவார்கள். இதனால் தான் பீரங்கிகள் பெரும்பாலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது விமானங்கள், ரயில்கள், ஏன் அதற்கென பிரத்தியேக லாரிகளில் கூட ஏற்றிச் செல்வார்கள். ஆனால் ஓட்டி செல்ல மாட்டார்கள். தேவையான இடத்தில் மட்டுமே பீரங்கிகளை ஓட்டி செல்வார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதும் ராணுவ வாகனங்களுக்காக ஏகப்பட்ட மாற்றங்களை செய்துள்ளன. இந்த பீரங்கிகள் ராணுவத்தில் முக்கிய பங்காற்றுபவை, இன்று ராணுவத்தில் அதை விட பலமான ஆயுங்கள் வந்துவிட்டாலும் இன்றும் பீரங்கிகளுக்கு மவுசு இருக்கிறது. பீரங்கி போல பல சிறப்பம்சங்கள் கொண்ட வாகனங்கள் ராணுவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.


Click it and Unblock the Notifications









