இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... விமானங்களில் 13 மற்றும் 17வது வரிசை இருக்கைகள் இருக்காது... ஏன் தெரியுமா?

ஒரு சில விமானங்களில் ஏன் 13வது மற்றும் 17வது வரிசை இருக்கைகள் வழங்கப்படுவதில்லை? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... விமானங்களில் 13 மற்றும் 17வது வரிசை இருக்கைகள் இருக்காது... ஏன் தெரியுமா?

நீங்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கும். ஒரு சில விமானங்களில் 13வது, 17வது வரிசை இருக்கைகள் இருக்காது. அதாவது 12வது வரிசை இருக்கைகளுக்கு அடுத்தபடியாக 14வது வரிசை இருக்கைகள் வழங்கப்பட்டிருக்கும். 13வது வரிசை இருக்கைகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... விமானங்களில் 13 மற்றும் 17வது வரிசை இருக்கைகள் இருக்காது... ஏன் தெரியுமா?

அதேபோல் 16வது வரிசை இருக்கைகளுக்கு அடுத்தபடியாக 18வது வரிசை இருக்கைகள் வழங்கப்பட்டிருக்கும். 17வது வரிசை இருக்கைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். எதையும் உன்னிப்பாக கவனிக்கும் பயணிகள் இதனை கவனித்திருப்பார்கள். ஒரு சில விமான நிறுவனங்கள் ஏன் 13வது மற்றும் 17வது வரிசை இருக்கைகளை தவிர்க்கின்றன? என்பதற்கான காரணங்களைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... விமானங்களில் 13 மற்றும் 17வது வரிசை இருக்கைகள் இருக்காது... ஏன் தெரியுமா?

மூட நம்பிக்கைகள்தான் இதற்கான முக்கிய காரணம். உலகின் பல்வேறு நாடுகளில் 13 மற்றும் 17 ஆகிய எண்கள் துரதிருஷ்டவசமானதாக கருதப்படுகின்றன. எனவே அந்த இருக்கைகளில் அமர்வதை பயணிகள் விரும்புவதில்லை. இதன் காரணமாகதான் விமான நிறுவனங்கள் 13வது மற்றும் 17வது வரிசை இருக்கைகளை தவிர்த்து விடுகின்றன.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... விமானங்களில் 13 மற்றும் 17வது வரிசை இருக்கைகள் இருக்காது... ஏன் தெரியுமா?

இதில், 13 என்ற எண்ணை துரதிருஷ்டவசமானதாக கருதுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இயேசு கிறிஸ்துவை காட்டி கொடுத்தவர் என கூறப்படும் ஜூடாஸ் 13வது சீடர் ஆவார். எனவே 13 என்ற எண்ணை பலர் துரதிருஷ்டவசமானதாக கருதுகின்றனர். இதன் காரணமாக விமான நிறுவனங்கள் 13வது வரிசை இருக்கைகளை வழங்காமல் தவிர்த்து விடுகின்றன.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... விமானங்களில் 13 மற்றும் 17வது வரிசை இருக்கைகள் இருக்காது... ஏன் தெரியுமா?

உலகின் முன்னணி விமான நிறுவனங்கள் பலவும் 13வது வரிசை இருக்கைகளை வழங்குவது கிடையாது. அதே நேரத்தில் 17வது வரிசை இருக்கைகளை விமான நிறுவனங்கள் ஏன் வழங்குவதில்லை? என்பதற்கும் காரணங்கள் இருக்கின்றன. இத்தாலி மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் 17 என்ற எண்ணை துரதிருஷ்டவசமானதாக கருதுகின்றனர்.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... விமானங்களில் 13 மற்றும் 17வது வரிசை இருக்கைகள் இருக்காது... ஏன் தெரியுமா?

ரோமன் எண்களில் XVII (17) என்பதன் அனகிராம் (Anagram) VIXI ஆகும். இங்கே அனகிராம் என்பது, ஒரு சொல்லின் எழுத்துக்களில் இருந்து அமைக்கப்படும் மற்றொரு சொல் ஆகும். இதன்படி XVII என்பதை மாற்றியமைத்தால் VIXI என வருகிறது அல்லவா? இதற்கு லத்தீன் மொழியில் 'எனது வாழ்க்கை முடிந்து விட்டது' (My Life Is Over) என பொருள் வருகிறது.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... விமானங்களில் 13 மற்றும் 17வது வரிசை இருக்கைகள் இருக்காது... ஏன் தெரியுமா?

எனவே 17 என்ற எண்ணையும் பலர் துரதிருஷ்டவசமானதாக கருதுகின்றனர். இதன் காரணமாக 17வது வரிசை இருக்கைகளையும் விமான நிறுவனங்கள் தவிர்த்து விடுகின்றன. அதற்கு பதிலாக 16வது வரிசை இருக்கைகளில் இருந்து நேரடியாக 18வது வரிசை இருக்கைகளுக்கு விமான நிறுவனங்கள் சென்று விடுகின்றன.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... விமானங்களில் 13 மற்றும் 17வது வரிசை இருக்கைகள் இருக்காது... ஏன் தெரியுமா?

மூட நம்பிக்கைகள் ஏதோ இந்தியாவின் கிராமங்களில் மட்டுமே இருப்பதாக நீங்கள் இதுவரை நினைத்து கொண்டிருந்திருக்கலாம். ஆனால் மூட நம்பிக்கைகள் உலகம் முழுவதும் பரவி காணப்படுகின்றன என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான மூட நம்பிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... விமானங்களில் 13 மற்றும் 17வது வரிசை இருக்கைகள் இருக்காது... ஏன் தெரியுமா?

ஏழை, பணக்காரர் என பாகுபாடுகள் இன்றி பலராலும் மூட நம்பிக்கைககள் பின்பற்றப்பட்டு வருகின்றன. விமானங்களில் 13வது மற்றும் 17வது வரிசை இருக்கைகள் இருக்காது என்பதை போல், பல்வேறு உல்லாச கப்பல்களிலும் 13வது மற்றும் 17வது தளங்கள் இருப்பதில்லை. இதற்கும் நாங்கள் மேலே கூறியுள்ள மூட நம்பிக்கைகள்தான் காரணம்.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... விமானங்களில் 13 மற்றும் 17வது வரிசை இருக்கைகள் இருக்காது... ஏன் தெரியுமா?

அதேபோல் ஒரு சில நட்சத்திர விடுதிகளில் கூட 13வது மற்றும் 17வது தளங்கள் இருப்பதில்லை. விமானங்களில் 13வது மற்றும் 17வது வரிசை இருக்கைகளையும், உல்லாச கப்பல்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் 13வது மற்றும் 17வது தளங்களில் உள்ள அறைகளையும் முன்பதிவு செய்வதற்கு பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... விமானங்களில் 13 மற்றும் 17வது வரிசை இருக்கைகள் இருக்காது... ஏன் தெரியுமா?

எனவே வாடிக்கையாளர்களின் சௌகரியத்திற்காக 13வது மற்றும் 17வது வரிசை இருக்கைகளும், தளங்களும் தவிர்க்கப்பட்டு விடுகின்றன. விமானங்கள், உல்லாச கப்பல்களில் பயணம் செய்யும் பயணிகள் இதன் மூலம் நிம்மதியாக பயணம் செய்வார்கள் என நம்பப்படுகிறது. அதேபோல் நட்சத்திர விடுதிகளில் தங்குபவர்களும் நிம்மதியாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. எனவேதான் விமான நிறுவனங்களும், உல்லாச கப்பல் நிர்வாகங்களும், நட்சத்திர விடுதிகளின் உரிமையாளர்களும் கூட இந்த மூட நம்பிக்கைகளை பின்பற்றுகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why most airlines dont have row 13 and 17 on their planes here is the reason
Story first published: Thursday, January 6, 2022, 18:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X