ஏசி போடாமலேயே செம ஜில்லுன்னு இருக்கும்... உல்லாச கப்பல்களில் அடிக்கப்படும் பெயிண்ட்டிற்கு பின்னால் உள்ள மர்மம்

உல்லாச கப்பல்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் மட்டும் பெயிண்ட் செய்யப்படுவதற்கு பின்னால் உள்ள காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏசி போடாமலேயே செம ஜில்லுன்னு இருக்கும்... உல்லாச கப்பல்களில் அடிக்கப்படும் பெயிண்ட்டிற்கு பின்னால் உள்ள மர்மம்

கன்டெய்னர் கப்பல்களும் மற்றும் இதர வகையான சரக்கு கப்பல்களும் பல்வேறு வண்ணங்களில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும். மீன்பிடி படகுகளையும் கூட நீங்கள் வெவ்வேறு வண்ணங்களில் பார்க்க முடியும். அதாவது நீலம், கருப்பு, சிகப்பு, பச்சை மற்றும் சாம்பல் உள்பட வெவ்வேறு வண்ணங்களில் அந்த கப்பல்களை அலங்கரித்திருப்பார்கள்.

ஏசி போடாமலேயே செம ஜில்லுன்னு இருக்கும்... உல்லாச கப்பல்களில் அடிக்கப்படும் பெயிண்ட்டிற்கு பின்னால் உள்ள மர்மம்

எனினும் உல்லாச கப்பல்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் மட்டும்தான் பெயிண்ட் செய்யப்படும். இது ஏன் என நீங்கள் யோசித்துள்ளீர்களா? துருப்பிடிப்பதை தவிர்ப்பதற்காகதான் பெயிண்ட் செய்யப்படுகிறது எனும்போது, வண்ணங்களில் ஏன் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது? என்னும் சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம்.

ஏசி போடாமலேயே செம ஜில்லுன்னு இருக்கும்... உல்லாச கப்பல்களில் அடிக்கப்படும் பெயிண்ட்டிற்கு பின்னால் உள்ள மர்மம்

உங்களது இந்த சந்தேகத்திற்கான விளக்கத்தை இந்த செய்தி வழங்கும். சரக்கு கப்பல்கள் என்ன நிறத்தில் இருக்க வேண்டும்? என்பதை அதன் உரிமையாளர்கள் தீர்மானிக்கின்றனர். அவர்களுக்கு என்ன நிறம் பிடிக்கிறதோ? அதே நிறத்தில் சரக்கு கப்பல்களை பெயிண்ட் செய்கின்றனர். எந்த நிற பெயிண்ட் மிக எளிதாகவும், விலை குறைவாகவும் கிடைக்கிறது? என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்வர்.

ஏசி போடாமலேயே செம ஜில்லுன்னு இருக்கும்... உல்லாச கப்பல்களில் அடிக்கப்படும் பெயிண்ட்டிற்கு பின்னால் உள்ள மர்மம்

குறைவான விலையில் கிடைக்கும் வண்ணங்களுக்கு அவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள். அதே நேரத்தில் ஒரு சில நிறுவனங்கள் தங்களுடைய பிராண்டு தனித்து தெரிய வேண்டும் என விரும்பும். இதற்காக தங்களது அனைத்து சரக்கு கப்பல்களையும் ஒரே நிறத்தில் பெயிண்ட் செய்வார்கள். உதாரணத்திற்கு அவர்களிடம் 10 சரக்கு கப்பல்கள் இருக்கிறது என்றால், அவை அனைத்திற்கும் சிகப்பு வண்ணத்தை வழங்கி விடுவார்கள்.

ஏசி போடாமலேயே செம ஜில்லுன்னு இருக்கும்... உல்லாச கப்பல்களில் அடிக்கப்படும் பெயிண்ட்டிற்கு பின்னால் உள்ள மர்மம்

சரி, இதே நடைமுறையை பின்பற்றி உல்லாச கப்பல்களையும் பெயிண்ட் செய்து விடலாமே என உங்களுக்கு தோன்றலாம். ஆனால் உல்லாச கப்பல்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்படுவதற்கு பின்னால் அருமையான காரணங்கள் இருக்கின்றன. வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்வதன் மூலம் ஏர்-கண்டிஷனின் பணிச்சுமையை குறைக்கலாம் என்பதுதான் முதல் காரணம்.

ஏசி போடாமலேயே செம ஜில்லுன்னு இருக்கும்... உல்லாச கப்பல்களில் அடிக்கப்படும் பெயிண்ட்டிற்கு பின்னால் உள்ள மர்மம்

வெள்ளை வண்ணம் சூரிய ஒளியை எதிரொலிக்கும் விஷயத்தில் சிறப்பானது என்பது நம் அனைவருக்குமே தெரியும். எனவே வெள்ளை வண்ணத்தை பயன்படுத்துவதன் மூலம், உல்லாச கப்பல்களின் உட்புறத்தில் அவ்வளவாக சூடு ஆகாது. பொதுவாக உல்லாச கப்பல்கள் வெப்ப மண்டலங்கள் சார்ந்த இடங்களில்தான் பயணிக்கும்.

ஏசி போடாமலேயே செம ஜில்லுன்னு இருக்கும்... உல்லாச கப்பல்களில் அடிக்கப்படும் பெயிண்ட்டிற்கு பின்னால் உள்ள மர்மம்

அதுவும் உல்லாச கப்பல்களில் பயணம் செய்யும் பெரும்பாலான நபர்கள் வயது முதிர்ந்தவர்களாகதான் இருப்பார்கள். அவர்களால் அதிக வெப்பத்தை தாங்க முடியாது. சௌகரியமான பயணத்தை அவர்கள் எதிர்பார்ப்பார்கள். எனவே உல்லாச கப்பல்களில் ஏர்-கண்டிஷன் அனைத்து நேரமும் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி இயங்க வேண்டியதாக இருக்கும்.

ஏசி போடாமலேயே செம ஜில்லுன்னு இருக்கும்... உல்லாச கப்பல்களில் அடிக்கப்படும் பெயிண்ட்டிற்கு பின்னால் உள்ள மர்மம்

ஆனால் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்வதன் மூலமாக, சூரிய ஒளியால் உல்லாச கப்பல் சூடு ஆவதை தவிர்க்கலாம். இதன் மூலம் ஏர்-கண்டிஷனின் பணிச்சுமை குறையும். மேலும் பயணிகளும் குளுமையான பயணத்தை அனுபவிப்பார்கள். அத்துடன் ஏர்-கண்டிஷனின் வேலை குறைவதால், உல்லாச கப்பல் நிறுவனங்களுக்கு செலவு குறைந்து, பொருளாதார ரீதியான நன்மைகள் கிடைக்கும்.

ஏசி போடாமலேயே செம ஜில்லுன்னு இருக்கும்... உல்லாச கப்பல்களில் அடிக்கப்படும் பெயிண்ட்டிற்கு பின்னால் உள்ள மர்மம்

சரக்கு கப்பல்கள் வெவ்வேறு வண்ணங்களில் இருப்பதற்கும், உல்லாச கப்பல்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் மட்டும் இருப்பதற்கும் தற்போது உங்களுக்கு காரணம் புரிந்திருக்கும் என நம்புகிறோம். அதே நேரத்தில் உல்லாச கப்பல்கள் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்படுவதற்கு உளவியல் ரீதியிலும் முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.

ஏசி போடாமலேயே செம ஜில்லுன்னு இருக்கும்... உல்லாச கப்பல்களில் அடிக்கப்படும் பெயிண்ட்டிற்கு பின்னால் உள்ள மர்மம்

அதாவது வெள்ளை வர்ணத்தை பூசுவதன் மூலமாக உல்லாச கப்பல்கள் மிகவும் 'க்ளீன்' ஆகவும், 'ஷைன்' ஆகவும் இருக்கும். கடல் மற்றும் வானத்தின் நீல வண்ண பின்னணியில் இது தனித்து தெரியும். இதை பார்க்கும் பயணிகளின் மனதில் ஒருவித மகிழ்ச்சி ஏற்படும். எனவே அவர்கள் பயணத்தை 'என்ஜாய்' செய்வார்கள்.

ஏசி போடாமலேயே செம ஜில்லுன்னு இருக்கும்... உல்லாச கப்பல்களில் அடிக்கப்படும் பெயிண்ட்டிற்கு பின்னால் உள்ள மர்மம்

இதுபோன்ற காரணங்களால்தான் உல்லாச கப்பல் நிறுவனங்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தை தேர்வு செய்கின்றன. சரி, தற்போது உங்களுடைய முறை. உல்லாச கப்பல்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு உங்களுக்கு வேறு ஏதேனும் காரணம் தெரியுமா? அப்படியென்றால், கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலம் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, April 12, 2021, 15:50 [IST]
English summary
Why Most Cruise Ships Are White, The Reason Will Surprise You. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+