ஆம்னி பஸ்கள் இரவில் மட்டுமே இயங்கும்... பகலில் ஓட்ட மாட்டாங்க... இதுக்கு பின்னாடி இப்படி ஒரு சூட்சமம் இருக்கா?
இந்தியாவில் இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டும் அதிகம் இயக்கப்படுகிறது.
Recommended Video
பகல் நேரங்களில் இந்த பஸ்கள் இயக்கப்படாததற்கு என்ன காரணம் தெரியுமா? முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

நீங்கள் தனியார் பஸ்களில் வெளியூர்களுக்கு சென்றுள்ளீர்களா? அட அதாங்க ஆம்னி பஸ்சில் பயணித்த அனுபவம் இருக்கிறதா? இரவு நேரங்களில் சென்னை வாசி என்றால் பெங்களத்தூரிலும், பெங்களூரு வாசி என்றால் சில்க் போர்டிற்கும் சென்றால் போதும் ஒரு நாளுக்கு இத்தனை ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறதா என உங்களை ஆச்சரியப்படுத்திவிடும்.

பெருங்களத்தூருக்கு சென்றால், திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி என தமிழ் நாடு முழுவதும ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவதை பார்க்க முடியும். பெரும்பாலும் இந்த காட்சிகள் எல்லாம் இரவு நேரங்களில் தான் காண முடியும் பகல் நேரங்களில் ஆம்னி பஸ்கள் இயங்குவது என்பது அரிதான விஷயம் தான்.

பெரும்பாலானா ஆம்னி பஸ்கள் குறிப்பாக நீண்ட தூரம் பயணிக்கும் ஆம்னி பஸ்கள் எல்லாம் இரவு நேரங்களில் தான் இயக்கப்படுகிறது. பகல் நேரத்தில் போட்டிக்கு வேறு பஸ்கள் இல்லை, டிரைவர்கள் நைட் டூட்டி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படியாக பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் இரவு நேரம் தான் பஸ்களை இயங்குகிறார்கள். இதை பற்றி தான் முழுமையாக காணப்போகிறோம்.

ஆம்னி பஸ் உரிமையாளர்கள் இரவு நேரத்தில் மட்டும் பஸ்களை இயக்குவதற்கு முக்கியமான காரணம் பயணிகள் தான். பொதுவாக பொது போக்குவரத்தில் ஒரு பயணி பயணம் செய்யும் போது அவருக்கு என எந்த வேலையும் இல்லை. அவர் பொழுதை கடத்த செல்போனை நோட்டுவது, பாட்டு கேட்பது, படம் பார்ப்பது, புத்தகம் படிப்பது என தான் இறங்கும் இடம் வரும் வரை பொழுதை தான் போக்கி கொண்டிருப்பார்.

நீண்ட தூர பயணம் என்றால் வெகு நேரம் ஆகும். இந்த நேரத்தை நாம் பகல் செலவிட்டால் அன்றைய நாளே வீணாகிவிடும். இதுவே இரவு தூங்கும் நேரத்தில் பயணித்தால் அவர்கள் மறுநாள் காலையில் அங்கு சென்று தன் வேலையை பார்க்கலாம் தன் வேலை கெட்டு விட கூடாது என்பதற்காக பொதுவாக மனிதர்கள் நீண்ட தூர பயணத்திற்கு இரவு நேர பயணத்தை விரும்புகின்றனர்.

ஆம்னி பஸ்கள் எல்லாம் நீண்ட தூர பயணத்திற்கு தான் பயன்படுத்தப்படுகிறது என்பதால் தன் வாகனங்களுக்கு பயணிகள் வர வேண்டும் என்றால் இரவு நேர பயணத்திற்கு தான் பயணிகள் வருவார்கள். பகல் நேரங்களில் ஒரு சில பயணிகள் வந்தாலும் தினமும் பஸ் முழுவதும் நிரம்புவது என்பது கடினம். ஆனால் இரவு நேரத்தில் பஸ் சுலபமாக நிரம்பி விடும்.

இதனால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு லாபம் வேண்டும் என்றால் இரவு நேர பயணம் தான் லாபத்தை ஈட்டி தரும். அதே நேரம் அதிகமாக மக்கள் பயணிக்கும் சென்னை - பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பகல் நேரத்திலும் ஆம்னி பஸ்கள் இருக்கின்றன. இது மட்டும் காரணம் அல்ல பகல் நேர பயணத்தால் பல வகையில் லாபம் இருக்கிறது.

இரவு நேரத்தில் நெடுஞ்சாலைகளில் கூட்ட நெரிசல் குறைவாக இருக்கும். இதனால் பஸ்கள் தொடர்ந்து வேகமாக செல்லலாம். பகல் நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் எதிர்பார்க்கும் அளவிற்கு வேகமாக செல்ல முடியாது. இதனால் எரிபொருள் செலவு அதிகமாகும். ஆனால் இரவு நேரத்தில் வேகமாக செல்வதால் எரிபொருள் மிச்சமாகும்.

பொதுவாக பஸ்களை பராமரிப்பு செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இரவு நேரங்களில் மெக்கானிக்கள் அதிகமாக கிடைக்கமாட்டார்கள். அதனால் இரவு நேரத்தில் பயணம் செய்வதால் பகல் நேரத்தில் மெக்கானிக்களை கொண்டு பராமரிப்பு மற்றும் ரிப்பேர் வேலைகளை பஸ்களில் செய்யலாம். பகல் நேர பஸ் என்றால் சிறிய வேலைக்கு கூட ஒரு நாள் பஸ் ட்ரிப்பை கேன்சல் செய்ய வேண்டிய நிலை வரும்.


Click it and Unblock the Notifications