பைக்குகளில் ஏன் டீசல் இன்ஜின் பொருத்தப்படுவதில்லை? இது தான் உண்மையான காரணம்!

இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பைக் எல்லாம் பெட்ரோல் இன்ஜினை கொண்டே உருவாக்கப்படுகிறது. கார்களில் பெட்ரோல் இன்ஜின் மற்றும் டீசல் இன்ஜின் என இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும்போது பைக்குகளில் மட்டும் ஏன் டீசல் இனஜினை அதன் தயாரிப்பாளர்கள் பயன்படுத்துவதில்லை? இதைப் பற்றி தான் நாம் இங்கே விரிவாக காணப்போகிறோம்.

கார் பயன்படுத்தும் பலருக்கும் தெரியும் பெட்ரோல் இன்ஜின் காரை விட டீசல் இன்ஜின் கார்தான் லாபமாக இருக்கும் என்று. அதிகமாக வாகனம் பயன்படுத்துபவர்களுக்கு பெட்ரோல் இன்ஜினை விட டீசல் இன்ஜின் தான் லாபத்தை தரும். இதனால்தான் டிராவல்ஸ் வாகனங்கள் பெரும்பாலும் டீசல் இன்ஜின் கொண்ட வாகனங்களாகவே இருக்கிறது. ஆனால் இது எல்லாம் காருக்கு மட்டும் தான்.

diesel engine bikes

பைக்கை பொறுத்தவரை ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் தான். அதாவது பெட்ரோல் இன்ஜின் பைக் மட்டும் தான் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. ஒரு காலத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் டீசல் இன்ஜின் கொண்ட புல்லட் பைகளை விற்பனை செய்திருந்தாலும் தற்போது டீசல் இன்ஜின் கொண்ட பைக்கில் எதுவும் விற்பனையில் இல்லை.

இந்தியாவில் பல கார்களை விட பைக்குகளை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். தினம் தோறும் 100 முதல் 150 கிலோமீட்டர் தூரம் வரை பைக்கில் பயணிக்கும் நபர்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்ட நபர்களுக்கு பெட்ரோல் இன்ஜின் உன்னை விட டீசல் இன்ஜின் கொண்ட பைக்குகள் இருந்தால் அவர்களுக்கு லாபமாக இருக்கும். ஆனால் இவ்வளவு மார்க்கெட் இருந்தும் ஏன் தயாரிப்பாளர்கள் டீசல் இன்ஜின் பைக்குளை தயாரிப்பதில்லை என உங்களுக்கு தெரியுமா?

diesel engine bikes

டீசல் இன்ஜினியரிங் கம்ப்ரஷன் ரேஷியோ என்பது 24:1என்ற கணக்கில் இருக்கிறது இதுவே பெட்ரோல் இன்ஜினுக்கு 11:1என்ற கணக்கில் தான் இருக்கிறது. இதனால் டீசல் இன்ஜினை தயாரித்தால் அதன் அளவு மற்றும் எடை பெரியதாக இருக்கும். அதனால் பைக் போன்ற சிறிய வாகனங்களில் டீசல் இன்ஜினை பயன்படுத்துவது என்பது சற்று சிரமமான விஷயமாக இருக்கும். பைக்கில் பெரும்பாலான பகுதி டீசல் இன்ஜினே இடம் பிடித்து விடும். பைக்கின் எடையும் அதிகமாக இருக்கும்.

அதே நேரம் டீசல் இன்ஜின்களில் கம்ப்ரஷன் ரேஷியோ அதிகமாக இருப்பதால் அந்த இன்ஜின் செயல்படும் போது அதிலிருந்து வெளியாகும் சத்தம் மட்டும் வைப்ரேஷன் அதிகமாக இருக்கும். பைக் போன்ற வாகனங்களில் சத்தம் மற்றும் வைப்ரேஷன் அதிகமாக இருப்பது பைக் ஓட்டவே அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் ஒரு நல்ல ரைட்டிங் அனுபவம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இதுவும் பைக்குகளில் டீசல் இன்ஜினை தவிர்ப்பதற்கு ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

diesel engine bikes

நான் முன்னரே சொன்னது படி டீசல் இன்ஜினை பொருத்தினால் அது ஹெவியான இன்ஜினாக தான் இருக்கும். அதே நேரம் இன்ஜின் அதிக எடையில் இருப்பதால் அதன் விலையும் அதிகமாக தான் இருக்கும். இதனால் ஒட்டுமொத்தமாக பைக்கின் விலை அதிகமாக வாய்ப்புள்ளது. இதனால் பெட்ரோல் இன்ஜின் கொண்ட பைக்குளை விட டீசல் இன்ஜின் கொண்ட பகுதிகளின் விலை இரு மடங்காக கூட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே தயாரிப்பாளர்கள் டீசல் பைக்குகளை தவிர்க்கின்றனர்.

அதே நேரம் டீசல் இன்ஜின் கொண்டு ஒரு பைக்கை தயாரித்தால் அந்த பைக்கை பயன்படுத்துபவர் அதை அதிகம் பராமரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உதாரணமாக பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர் ஒரு ஒரு 3000 கிலோமீட்டர் பைக் இன்ஜினில் ஆயில் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டும்.

டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட பைக்காக இருந்தால் ஒவ்வொரு ஆயிரம் கிலோமீட்டருக்கும் ஆயில் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். இதுபோல பைக்கில் ஒவ்வொரு பாகத்தில் பராமரிப்பு செலவு அதிகமாக இருக்கும். இதை பெட்ரோல் டீசல் விலை வித்தியாசத்துடன் ஒப்பிட்டால் பெட்ரோல் தான் லாபகரமாக இருக்கும். இதுவும் ஒரு முக்கிய காரணம்.

டீசல் இன்ஜினை பயன்படுத்தினால் அந்த இன்ஜின் அதிகமான டார்க்கை உற்பத்தி செய்தாலும் குறைவான ஆர் கேமை தான் வெளிப்படுத்தும் இதனால் இதனால் வாகனத்தில் பிக்கப் மெதுவாக தான் இருக்கும். குறைவான ஆர்பிஎம் இருந்தால் வாகனம் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக செல்லாது. ஆனால் பெட்ரோல் இன்ஜினில் ஆர்பிஎம் அதிகமாக இருக்கும் இதனால் பெட்ரோல் இன்ஜினை விட டீசல் இன்ஜின் பைக் மெதுவாக செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் டீசல் இன்ஜின் கொண்ட பைக் விலை தயாரிக்க எந்த நிறுவனமும் வராமல் இருப்பதற்கு மேலே குறிப்பிட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் தான் காரணம். டீசல் இன்ஜின் கொண்ட பைக்குகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஒரு காலத்தில் தயாரித்து விற்பனை செய்திருந்தாலும் தற்போது அந்த முயற்சியை அந்நிறுவனமே எடுப்பதில்லை. டீசல் இன்ஜின் கொண்ட பைக்குகள் இனி வருங்காலத்திலும் சாத்தியமில்லை

More from DriveSpark

Article Published On: Thursday, October 12, 2023, 14:12 [IST]
English summary
Why motorcycles avoid diesel engines
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X