நாம சாதாரணமா கடந்து போற பச்சை கலர் போர்டுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

இந்தியாவில் தற்போது மிகவும் பிரம்மாண்டமான முறையில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகத்தரம் வாய்ந்த இந்த தேசிய நெடுஞ்சாலைகள் நமது போக்குவரத்தை மிகவும் எளிமையாக மாற்றி விட்டன. நமது போக்குவரத்து மட்டுமல்லாது, சரக்கு போக்குவரத்தையும் இந்த தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் எளிமையான ஒன்றாக மாற்றியுள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைகளில் நாம் அனைவரும் தொடர்ச்சியாக பயணம் செய்து கொண்டே இருக்கிறோம். ஆனால் நம்மில் நிறைய பேர் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரு விஷயத்தை கவனிப்பதில்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பலகைகளை பார்த்துள்ளீர்களா?

நீங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு எந்த திசையில் பயணம் செய்ய வேண்டும்? நீங்கள் செல்ல வேண்டிய ஊர் இன்னும் எவ்வளவு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது? என்பது போன்ற விபரங்களை தெரிவிக்கும் பலகைகளை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இந்த பலகைகள் பெரும்பாலும் பச்சை நிறத்தில்தான் இருக்கும்.

Highways

இந்த பலகைகளில், பச்சை நிற பின்னணியில் வெள்ளை நிற எழுத்துக்களில் தகவல்கள் கூறப்பட்டிருக்கும். சரி, தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பலகைகள் பெரும்பாலும் ஏன் பச்சை நிறத்தில் உள்ளன என்று என்றாவது நீங்கள் யோசித்துள்ளீர்களா? இதற்கான காரணத்தை இந்த செய்தியில் நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம்.

பச்சை நிறமானது, மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டும் வண்ணமாக கருதப்படுகிறது. மனிதர்களின் மனதை அமைதிப்படுத்தும் தன்மையும் பச்சை நிறத்திற்கு உண்டு. உண்மையில் பச்சை ஒரு அமைதியான வண்ணம். அத்துடன் பச்சை நிறமானது, ஓட்டுனர்களுக்கு கவன சிதறலையும் ஏற்படுத்தாது. தேசிய நெடுஞ்சாலைகளின் பலகைகள் பச்சை நிறத்தில் இருப்பதற்கு இவைதான் மிகவும் முக்கியமான காரணங்களாக உள்ளன.

Why National Highways Sign Boards Are Green In Colour

இன்னும் தெளிவாக சொல்வதென்றால், தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்லும். எனவே தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டும்போது, நம்பிக்கையுடன் இருப்பது அவசியம். இந்த நம்பிக்கையை பச்சை நிறம் வழங்கும். எனவேதான் தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்க கூடிய பலகைகளுக்கு பச்சை நிறத்தை தேர்வு செய்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டும்போது, 'ரிலாக்ஸ்'-ஆக இருப்பது அவசியம். நாங்கள் ஏற்கனவே கூறியபடி, மனிதர்களின் மனதை அமைதிப்படுத்தும் தன்மை பச்சை நிறத்திற்கு உள்ளது. பச்சை நிற பலகைகளை பயன்படுத்துவதற்கு இது 2வது காரணமாக இருக்கிறது. கவன சிதறலை ஏற்படுத்தாது என்பது 3வது காரணம்.

வாகன ஓட்டுனர்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டிய விஷயங்களை, அவர்களுக்கு எந்தவொரு கவன சிதறலையும் ஏற்படுத்தாமல் தெரியப்படுத்த வேண்டும் என்றால், பச்சை நிறத்தை பயன்படுத்துவதே மிகவும் சரியானதாக இருக்கும். தேசிய நெடுஞ்சாலைகளின் பலகைகள் பச்சை நிறத்தில் இருப்பதற்கு இதுவே 3வது காரணம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஒட்டுமொத்தத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே பலகைகளில் பச்சை நிறம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் சாதாரணமாக கடந்து செல்லும் பச்சை நிற பலகைகளுக்கு பின்னால் இவ்வளவு அறிவியல் மறைந்திருப்பது உண்மையிலேயே ஆச்சரியமான ஒரு விஷயம்தான்!

More from DriveSpark

Article Published On: Wednesday, July 10, 2024, 13:32 [IST]
English summary
Why national highways sign boards are green in colour check here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+