காரில் அதிக எடையை ஏற்றினால் இவ்ளோ பிரச்னைகள் ஏற்படுமா? இதெல்லாம் முன்னாடியே தெரியாம போச்சே!
காரில் அதிக எடையை ஏற்றினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? என்பதை இந்த செய்தியில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

கார்களில் அதிக எடையை ஏற்றினால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். இது தெரியாமல் பலர் தொடர்ச்சியாக கார்களில் அதிக எடையுடன் பயணித்து கொண்டேதான் இருக்கின்றனர். எனவே கார்களில் அதிக எடையை ஏற்றினால், என்ன பிரச்னைகள் எல்லாம் ஏற்படும்? என்பதை இந்த செய்தியில் கூறியுள்ளோம். இந்த செய்தியை படித்த பிறகு கார்களில் அதிக எடையை ஏற்ற மாட்டீர்கள் என நம்புகிறோம்.

உங்கள் காரில் நீங்கள் அதிக எடையை ஏற்றினால், அது டயரின் ஆயுட்காலத்தை வெகுவாக குறைத்து விடும். அதிக எடையை ஏற்றும்போது, டயர்கள் வேகமாக தேய்மானம் அடைந்து விடும். அதிகப்படியான எடையால், டயர்கள் வெப்பமடைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே டயர்களை சரி செய்வதற்கோ அல்லது மாற்றுவதற்கோ நீங்கள் அதிக தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

அதிகப்படியான எடை காரணமாக டயர்கள் விரைவாக தேய்மானம் அடையும் அதே நேரத்தில், உங்கள் காரின் மைலேஜூம் குறைந்து விடும். ஆம், காரின் எடைக்கும், மைலேஜூற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதிக எடை இருக்கும் சமயங்களில், உங்கள் கார் வழக்கத்திற்கு மாறாக அதிக எரிபொருளை குடிக்கும். இதற்கான செலவையும் நீங்கள்தான் செய்ய வேண்டும்.

அதேபோல் அதிக எடை இருக்கும் சமயங்களில், நீங்கள் பிரேக் பிடித்தால், கார் நிற்பதற்கு அதிக நேரம் எடுத்து கொள்ளும். அதாவது குறைவான எடை இருக்கும் சமயங்களுடன் ஒப்பிடுகையில், அதிக எடை இருக்கும் சமயங்களில் கார் நிற்பதற்கு அதிக நேரம் ஆகும். இது சாலை விபத்துக்களுக்கு வழிவகுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மேலும் அதிக எடை இருந்தால், காரின் ஆக்ஸலரேஷன் சிறப்பாக இருக்காது. எனவே உங்களால் வழக்கமான வேகத்தில் பயணிக்க முடியாது. குறைவான வேகத்தில்தான் செல்ல முடியாது. எனவே தேவையில்லாமல் அதிக நேரத்தை நீங்கள் சாலையில் செலவிட வேண்டியிருக்கும். இதன் காரணமாக ஏற்படும் காலதாமதத்திற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஆக்ஸலரேஷன் சிறப்பாக இருக்காது என்பதால், உங்கள் முன்னால் செல்லும் வாகனங்கள் மிகவும் மெதுவாக ஊர்ந்து சென்றால், உங்களால் அவற்றை 'ஓவர்டேக்' செய்யவும் முடியாது. அதிக எடையால், காரின் டயர்கள், பிரேக்குகள், செயல்திறன் மட்டுமின்றி சஸ்பென்ஸன் அமைப்பும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அதிக எடையால் உங்கள் காரின் சஸ்பென்ஸன் அமைப்பு மிக கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கிறது. இது தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால், சஸ்பென்ஸன் அமைப்பு பாதிக்கப்படலாம். இது காரின் பராமரிப்பு செலவு உயர்வதற்கும் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக எடையால் டயர்கள், பிரேக்குகள் மற்றும் சஸ்பென்ஸன் அமைப்பு போன்றவை வேகமாக சேதம் அடையும்.

எனவே நீங்கள் அடிக்கடி அவற்றை மாற்ற வேண்டிய தேவை ஏற்படும். அத்துடன் அதிக எடை இருந்தால், கார் கட்டுப்பாட்டை இழப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. கியர் லிவர் மற்றும் ஸ்டியரிங் வீல் ஆகியவை உங்கள் உத்தரவுகளுக்கு கீழ்படிய மறுத்து விடும். அவசர சூழல்களில் இது மிக கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

காரில் அதிக எடை இருந்தால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். இதனால் காரை ஓட்டுபவர்கள் மற்றும் அதில் பயணம் செய்பவர்கள் மட்டுமல்லாது, சாலையில் பயணம் செய்யும் மற்றவர்களும் பாதிப்பு அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே காரில் அதிக எடையை ஏற்றும் பழக்கம் இருந்தால், அதனை உடனடியாக கைவிட்டு விடுங்கள்.

உங்கள் காரின் எடை மிகவும் குறைவாக இருந்தால், செயல்திறன் சிறப்பாக இருக்கும். அத்துடன் உங்கள் கார் நல்ல மைலேஜையும் வழங்கும். மேலும் டயர்கள், பிரேக் மற்றும் சஸ்பென்ஸன் போன்ற பாகங்கள் அதிக காலத்திற்கு நீடித்து உழைக்கும் என்பதால், பராமரிப்பு செலவுகளும் கணிசமாக குறையும். எனவே எப்போதுமே காரில் குறைவான எடையுடன் பயணிக்க முயற்சி செய்யுங்கள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக கார்களில் அதிக எடையை ஏற்றுவது சட்ட விரோதம் என்பதையும் மனதில் வைத்து கொள்ளுங்கள். சட்ட விரோதமான செயலில் ஈடுபடுவதால் காவல் துறை அதிகாரிகள் உங்களுக்கு அபராதம் விதிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. மேலும் அதிக எடை காரணமாக, உங்களால் 'இன்சூரன்ஸ் க்ளைம்' செய்ய முடியாமலும் போகலாம்.

அதிக எடை இருக்கும்போது கார் விபத்தில் சிக்கினால், இன்சூரன்ஸ் தொகையை பெற முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அதிக எடையை ஏற்றுவது சட்ட விரோதம் என்பதால், இதை காரணம் காட்டி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீட்டு தொகையை வழங்க மறுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இனி எக்காரணத்தை கொண்டும் காரில் அதிக எடையை ஏற்றாதீர்கள்.


Click it and Unblock the Notifications








