தண்டவாளத்துல ஏன் ஜல்லி கற்களை கொட்டுறாங்க தெரியுமா? இதுக்கு பின்னால இப்படி ஒரு காரணம் இருக்கா!!
ரயில் பயணத்தின் போது தண்டவாளங்களுக்கு இடையிலும், தண்டவாளத்தின் இரு பக்கங்களிலும் ஜல்லி கற்களை கொட்டி வைப்பது எதற்காக என்கிற பதில் உங்களுக்கு தெரியுமா?, இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ரயில் தண்டவாளங்களுக்கு இடையிலும், இருபக்கங்களிலும் ஜல்லி கற்கள் ஏன் கொட்டப்படுகின்றன?, என்கிற கேள்விக்கான பதில் இப்போது கிடைத்துள்ளது. நம்மில் பலர் ரயில் பயணம் மேற்கொண்டிருப்போம், அந்த பயணத்தின்போது ரயில் பற்றி பல்வேறு சந்தேகம் நமக்கு எழுந்திருக்கக் கூடும். அதில், பலருக்கு இந்த கேள்வி கட்டாயம் எழும்பியிருக்கும். இவ்ளோ ஜல்லி கற்களை ஏன் இப்படி வேஸ்டா இங்க கொட்டி வச்சிருக்காங்க என்றுகூட முனுமுனுத்திருப்போம்.

இந்த ஜல்லி கற்களுக்கு பின்னால் மிகப் பெரிய பாதுகாப்பு காரணங்கள் இருக்கின்றன. இந்த ஜல்லி கற்களை ரயில்வே துறையில் டிராக் பேல்லஸ்ட் (track ballast) என்று அழைக்கின்றனர். இவையே ரயில் தடங்களை சரியான இடத்தில் நிலைத்து நிற்க உதவுகின்றன. அதாவது, ரயில் பயணிக்கும்போது ஏற்படும் அதிர்வினால் ரயில்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து விடக் கூடாது.
இந்த முக்கிய காரணத்திற்காகவே டிராக்குகளின் இடையில் மற்றும் இரு பக்கங்களிலும் உடைக்கப்பட்ட ஜல்லி கற்கள் கொட்டப்படுகின்றன. இவை தண்டவாளங்களை இறுக்கமாகப் பிடித்து, நகராமல் பார்த்துக் கொள்ளும். ரயில் பெட்டிகள் எந்த அளவு கனமானது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அவை இயங்கும்போது அருகில் இருக்கும் கட்டுமானங்களே அதிரும். ஏன் சில நேரங்களில் வீடுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள்கூட சரிந்து விழுந்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.

இத்தகைய மிக பிரமாண்ட ரயில்கள் தண்டவாளத்தின்மீது அதிக வேகத்தில் பயணிக்கும்போது அதன் ஒழுங்கமைப்பில் மாற்றம் ஏற்படலாம். அவ்வாறு அது அதன் அமைப்பில் மாற்றம் ஏற்படும் எனில் பெரும் விபத்துகள் ஏற்படக் கூடும். ரயில் தடம் புறளுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படும். இதைத் தவிர்க்கும் பொருட்டே ஜல்லி கற்கள் குவிக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, தாவரங்கள் வளர்வதையும் இந்த ஜல்லி கற்கள் தடுக்கின்றன.
தண்ணீர் முழுமையாக தேங்காத காரணத்தினால் இங்கு சிறு புற்கள் முளைப்பதும் சந்தேகமே. சில நேரங்களில் புற்கள்கூட முளைக்கலாம். ஆனால், மரம் போன்றவை முளைப்பது இயலாத ஒன்று. இதுவும் ஜல்லி கற்கள் தண்டவாளங்கள் இடையில் பயன்படுத்த முக்கிய காரணமாக இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, ஜல்லி கற்கள் தண்ணீரை தேங்க விடாமல் வழிந்தோட செய்வதால், தண்டவாளங்கள் தண்ணீரால் அரிக்கப்படுவதும் தவிர்க்கப்படுகின்றது.

ஜல்லி கற்கள் மட்டுமின்றி நீளமான பல்பம் போன்ற கான்கிரீட்டும் ரயில் பாதைகளில் பயன்படுத்துவதை நாம் பார்த்திருப்போம். இது தண்டவாளங்கள் நேராக இருக்க முக்கிய பங்கினை வகிக்கின்றது. குறிப்பாக, தண்டவாளங்கள் நிலையாக நிற்கவே இவை பயன்படுத்தப்படுகின்றன. ஹூக்குகள் வாயிலாக அவை நிலை நிறுத்தப்படுகின்றன. இந்த கான்கிரீட்டை ஸ்லீப்பர்கள் என ரயில்வே துறை குறிப்பிடுகின்றது.
இந்த இரண்டே தண்டவாளங்கள் வேறு இடத்திற்கு நகர்ந்து செல்லாமல் நிலையாக நிற்க வைக்கின்றன. இவற்றால் ரயிலின் பாதுகாப்பும் பல மடங்கு அதிகரிக்கின்றது. எனவே தண்டாவளங்களுக்கு மேலே நடக்கும்போது அங்கிருக்கும் கற்களை இனி தூக்கி எறியா மாட்டீர்கள் என நம்புகின்றோம். சில பகுதிகளில் ரயில் செல்ல தண்டவாளங்கள் கான்கிரீட் தரையில் அமைக்கப்படுகின்றன. ஆனால், இதற்கு செலவு பல மடங்கு அதிகம் ஆகும்.

மேலும், வேலையும் மிக மிக அதிகம். எனவேதான் பண்டைய காலம் தொட்டு இப்போது வரை ஜல்லி கற்கள் தண்டவாளங்களுக்கு இடையிலும், வெளிப்புறத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. அதேவேளையில், கடந்த காலங்களில் ஸ்லீப்பர்கள் மரக் கட்டைகளால் உருவாக்கப்படதாக இருந்தன. ஆனால், இப்போது அவை கன்கிரீட்டால் ஆனதாக உள்ளது. ரயில்களின் வேகம் மற்றும் எடை ஆகியவை அதிகரித்திருப்பதால் இந்த அப்கிரேட் அவசியமாகி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









