சாதா கம்யூட்டர்லாம் அந்த காலம்... அட்வென்ஜர் பைக்குகளை மக்கள் ஏன் வாங்குகின்றனர் தெரியுமா? 5 முக்கிய காரணங்கள்

இந்தியாவில் தற்போது அட்வென்ஜர் ரக பைக்குகள் ஏன் பிரபலமாகி வருகின்றன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாதா கம்யூட்டர்லாம் அந்த காலம்... அட்வென்ஜர் பைக்குகளை மக்கள் ஏன் வாங்குகின்றனர் தெரியுமா? 5 முக்கிய காரணங்கள்!

இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தை மிக நீண்ட காலமாக எரிபொருள் சிக்கனம் மிகுந்த தினசரி கம்யூட்டர் ரக பைக்குகளையே தயாரித்து வந்தது. ஆனால் தற்போது அட்வென்ஜர் பைக்குகள் கூட இங்கு மிகவும் பிரபலமாக மாறி விட்டன. இந்திய சந்தையில் அட்வென்ஜர் பைக்குகளுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதை போலவே தெரிகிறது.

சாதா கம்யூட்டர்லாம் அந்த காலம்... அட்வென்ஜர் பைக்குகளை மக்கள் ஏன் வாங்குகின்றனர் தெரியுமா? 5 முக்கிய காரணங்கள்!

ஆனால் திடீரென அட்வென்ஜர் பைக்குகளுக்கு ஏன் இப்படி தேவை ஏற்பட்டது? எதன் காரணமாக அட்வென்ஜர் பைக்குகள் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக மாறின? என்ற கேள்விகளுக்கு விடை காண்பது மிகவும் அவசியமாக உள்ளது. எனவே அட்வென்ஜர் பைக்குள் மிகவும் பிரபலமாக மாறியதற்கு பின்னால் உள்ள சாத்தியமான காரணங்களை இந்த செய்தி தொகுப்பு அலசுகிறது.

சாதா கம்யூட்டர்லாம் அந்த காலம்... அட்வென்ஜர் பைக்குகளை மக்கள் ஏன் வாங்குகின்றனர் தெரியுமா? 5 முக்கிய காரணங்கள்!

எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்!

அட்வென்ஜர் பைக்குகள் கூடுதலான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் உடன் வருகின்றன. எனவே ரைடரால் கடினமான மேற்பரப்புகளை கூட எளிதாக எதிர்கொள்ள முடிகிறது. மேலும் சாதாரண சாலைகளில் மற்ற பைக்குகளை போலவே இந்த பைக்குகளையும் பயன்படுத்த முடியும். எனவே ஆஃப் ரோடு அல்லது சாதாரண சாலை என எதுவாயினும் இந்த பைக்குகளை பயன்படுத்தும் அனுபவம் சிறப்பானதாக உள்ளது.

சாதா கம்யூட்டர்லாம் அந்த காலம்... அட்வென்ஜர் பைக்குகளை மக்கள் ஏன் வாங்குகின்றனர் தெரியுமா? 5 முக்கிய காரணங்கள்!

டிசைன்!

தற்போது சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான அட்வென்ஜர் பைக்குகள் ரேலி மாடல்களை மனதில் வைத்து டிசைன் செய்யப்பட்டுள்ளன. ஆனால் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலும், நடைமுறை பயன்பாட்டிற்கு உகந்த வகையிலும் அவை வடிவமைக்கப்படுகின்றன. அதாவது இரண்டு பயன்பாடுகளுக்கும் ஏற்ற கலவையாக அவை திகழ்கின்றன.

சாதா கம்யூட்டர்லாம் அந்த காலம்... அட்வென்ஜர் பைக்குகளை மக்கள் ஏன் வாங்குகின்றனர் தெரியுமா? 5 முக்கிய காரணங்கள்!

இன்றைய இளம் தலைமுறை ரைடர்கள் தொலைதூர பயணங்களை மேற்கொள்ளும் அனுபவத்துடன், தினசரி பயன்பாட்டிற்கும் ஏற்ற பைக்குகளை எதிர்பார்க்கின்றனர். எனவே ரேலி பைக்கின் டிசைனும், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்களும் அவர்களுக்கு ஏற்ற தேர்வாக அட்வென்ஜர் ரக பைக்குகளை மாற்றுகின்றன.

சாதா கம்யூட்டர்லாம் அந்த காலம்... அட்வென்ஜர் பைக்குகளை மக்கள் ஏன் வாங்குகின்றனர் தெரியுமா? 5 முக்கிய காரணங்கள்!

டூரிங் திறன்கள்!

இன்றைய நவீன அட்வென்ஜர் டூரர் பைக்குகள் தொலைதூர பயணங்களின்போதும் உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும். ஸ்போர்ட்ஸ் அல்லது கஃபே ரேஸர் பைக்குகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கலாம். ஆனால் தொலைதூர பயணங்களின்போது அவற்றின் திறன் சந்தேகத்திற்கு உட்படுகிறது. ஆனால் அட்வென்ஜர் பைக்குகள் இந்த பாக்ஸை 'டிக்' அடிக்கின்றன.

சாதா கம்யூட்டர்லாம் அந்த காலம்... அட்வென்ஜர் பைக்குகளை மக்கள் ஏன் வாங்குகின்றனர் தெரியுமா? 5 முக்கிய காரணங்கள்!

மாறிய வாடிக்கையாளர்களின் ரசனை!

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதைபோல் அட்வென்ஜர் பைக்குகள் ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெரிய அளவில் பெறவில்லை. ஆனால் தங்கள் பைக்கிடம் இருந்து ரைடர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்? என்பது நாளடைவில் மாற தொடங்கியது. தினசரி பயன்பாடு மட்டுமின்றி, சௌகரியமான தொலைதூர பயணங்களும் வாடிக்கையாளர்களின் விருப்பமாக மாறின. அட்வென்ஜர் பைக்குகள் நல்ல ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும்.

சாதா கம்யூட்டர்லாம் அந்த காலம்... அட்வென்ஜர் பைக்குகளை மக்கள் ஏன் வாங்குகின்றனர் தெரியுமா? 5 முக்கிய காரணங்கள்!

மேலும் சற்று சிறிய இன்ஜின் பொருத்தப்பட்ட அட்வென்ஜர் பைக்குகள் விலை குறைவாக கிடைக்கும் அதே நேரத்தில் ஓரளவிற்கு நல்ல மைலேஜையும் வழங்குகிறது என்பதால், 'பாக்கெட் ஃப்ரெண்ட்லி'-ஆக இருக்கும். அத்துடன் ஆரம்பத்தில் ஒன்றிரண்டு தேர்வுகள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது இந்திய சந்தையில் நிறைய அட்வென்ஜர் பைக்குகள் கிடைக்கின்றன. எனவே வாடிக்கையாளர்களுக்கான தேர்வுகளும் அதிகரித்துள்ளன.

சாதா கம்யூட்டர்லாம் அந்த காலம்... அட்வென்ஜர் பைக்குகளை மக்கள் ஏன் வாங்குகின்றனர் தெரியுமா? 5 முக்கிய காரணங்கள்!

வாங்கும் திறன் உயர்வு!

தற்போதைய நாட்களில் ரைடர்கள் தங்கள் பைக்கிற்கு சற்று அதிக பணத்தை செலவிட தயாராக இருக்கின்றனர். அதாவது வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. மேலும் வங்கிகளில் கடன் பெறுவதற்கான நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டுள்ளன. எனவே தங்களின் தேவைகளை பூர்த்தி செய்தால், ரைடர்கள் தாங்கள் விரும்பும் பைக்கை சற்று அதிக விலை கொடுத்தாவது வாங்குவதற்கு தயாராக உள்ளனர்.

சாதா கம்யூட்டர்லாம் அந்த காலம்... அட்வென்ஜர் பைக்குகளை மக்கள் ஏன் வாங்குகின்றனர் தெரியுமா? 5 முக்கிய காரணங்கள்!

பிரபலமான அட்வென்ஜர் பைக்குகள்!

இந்திய சந்தையில் கிடைக்கும் பிரபலமான அட்வென்ஜர் பைக்குகள் பின்வருமாறு:

  • ராயல் என்பீல்டு ஹிமாலயன்
  • ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200
  • யெஸ்டி அட்வென்ஜர்
  • கேடிஎம் 390 அட்வென்ஜர்
  • கேடிஎம் 250 அட்வென்ஜர்
  • சாதா கம்யூட்டர்லாம் அந்த காலம்... அட்வென்ஜர் பைக்குகளை மக்கள் ஏன் வாங்குகின்றனர் தெரியுமா? 5 முக்கிய காரணங்கள்!

    இதில், ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை சமீப காலமாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அட்வென்ஜர் பைக்குகள் பிரபலமாகி வருவதும் இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் யெஸ்டி அட்வென்ஜர் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    சாதா கம்யூட்டர்லாம் அந்த காலம்... அட்வென்ஜர் பைக்குகளை மக்கள் ஏன் வாங்குகின்றனர் தெரியுமா? 5 முக்கிய காரணங்கள்!

    யெஸ்டி பிராண்டு மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய சந்தையில் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளது. தற்போது 3 யெஸ்டி பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், யெஸ்டி அட்வென்ஜர் பைக்கும் ஒன்றாகும். நீங்கள் புதிதாக அட்வென்ஜர் பைக்குகளை வாங்குவதாக இருந்தால், இதில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, January 31, 2022, 22:22 [IST]
English summary
Why people buy adventure bikes
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+