ரகசியமா வெச்சிருப்பாங்க... பைலட்களிடம் எப்பவும் ஒரு பாட்டில் இருக்கும்! இதுல இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா!
பைலட்கள் எப்போதும் ஒரு பாட்டிலை ரகசியமாக வைத்திருப்பார்கள். அது ஏன்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் விமானத்தில் சென்று வந்திருக்கலாம். ஆனால் ஒரு முறை கூட பைலட்கள் கழிவறையை பயன்படுத்துவதை நீங்கள் பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அப்படியானால் பைலட்களுக்கு தனியாக கழிவறை இருக்குமா? அல்லது அவர்கள் கழிவறையையே பயன்படுத்த மாட்டார்களா? என்பது போன்ற சந்தேகங்கள் எல்லாம் உங்களுக்கு வந்திருக்கும்.

உங்களின் இந்த சந்தேகங்கள் அனைத்தையும் நாங்கள் நிவர்த்தி செய்கிறோம். விமானத்தின் உருவத்தை பொறுத்து, பைலட்களுக்கு என தனியாக கழிவறை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதாவது பெரிய விமானங்களில் பைலட்களுக்கு என தனியாக கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கும். விமானத்தின் காக்பிட்டிற்கு அருகே இந்த கழிவறை அமைந்திருக்கும்.

பயணிகளால் இந்த கழிவறையை பயன்படுத்தவோ அல்லது காணவோ முடியாது. பைலட் இந்த கழிவறையை பயன்படுத்தும் சமயத்தில், கோ-பைலட் விமானத்தை கட்டுப்படுத்துவார். பெரிய விமானங்கள் மற்றும் நீண்ட தூரம் பயணிக்கும் விமானங்களில் மட்டும்தான் பைலட்கள் பயன்படுத்துவதற்கு என தனியாக கழிவறை வசதி இருக்கும்.

ஆனால் சிறிய விமானங்கள் மற்றும் குறுகிய தூரம் மட்டுமே பயணிக்க கூடிய விமானங்களில் எல்லாம் பைலட்களுக்கு என தனியாக கழிவறை இருக்காது. பயணிகள் பயன்படுத்த கூடிய கழிவறையைதான் அவர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பாலும் இந்த வழக்கமான கழிவறையை பைலட்கள் பயன்படுத்த மாட்டார்கள்.

ஏனெனில் குறுகிய தூரம் மட்டுமே பயணிக்க கூடிய விமானம் என்பதால், முடிந்த வரைக்கும் கழிவறையை பயன்படுத்தியாக வேண்டிய சூழல் ஏற்படாத வகையில், பைலட்கள் முன்கூட்டியே தயாராகி இருப்பார்கள். அத்துடன் கழிவறையை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் கூட, அவர்களால் அதை தவிர்த்து விட முடியும். அந்த அளவிற்கு அவர்கள் தங்களை பழக்கப்படுத்தி கொண்டிருப்பார்கள்.

அத்துடன் பயணிகளின் கழிவறையை பயன்படுத்துவதற்கு பைலட்கள் பரிந்துரைக்கப்படுவதும் இல்லை. ஏனெனில் இது பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில் கோ-பைலட்டையோ அல்லது காக்பிட்டையோ பயணிகள் பார்த்திருக்க மாட்டார்கள். எனவே பைலட் கழிவறைக்கு செல்வதை பார்த்தால், பயணிகள் அச்சமடையலாம்.

விமானத்தை யார் இயக்கி கொண்டிருக்கிறார்? காக்பிட்டிற்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என இனம் புரியாத அச்ச உணர்வு பயணிகளின் மனதை சூழ்ந்து கொண்டு விடும். எனவே முடிந்த வரை பயணிகளின் கழிவறையை பைலட்கள் பயன்படுத்த மாட்டார்கள். இதையெல்லாம் தாண்டி கழிவறையை கண்டிப்பாக பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற சூழல் வந்தால், பைலட்களுக்கு மற்றொரு வழி உள்ளது.

பைலட்கள் பணிக்கு வரும்போது பாட்டில் வடிவில் தங்களுக்கென சொந்தமாக ஒரு கழிவறையை கொண்டு வந்து விடுவார்கள். ஒரு சில சமயங்களில் இதனை பயன்படுத்த வேண்டிய சூழலும் கூட பைலட்களுக்கு ஏற்படலாம். இந்த விஷயம் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் நம்மில் யாரும் இந்த விஷயத்தை கேள்விபட்டிருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் இது உண்மைதான்.

கழிவறையை பயன்படுத்த முடியாத நேரத்தில், இயற்கை உபாதையை கழிப்பதற்கு பாட்டில் பைலட்களுக்கு வசதியான ஒன்றாக இருக்கும். எனவேதான் பைலட்கள் எதற்கும் முன்னெச்சரிக்கையாக ஒரு பாட்டிலையும் கையில் வைத்து கொண்டிருப்பார்கள். பணியின்போது கழிவறையை பயன்படுத்துவதில் கூட பல்வேறு சிரமங்களை பைலட்கள் எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








