எவ்ளோதான் பணம் இருந்தாலும் ஒரு சிலர் ஸ்கூட்டர்தான் வாங்குவாங்க... பைக்கை தொடவே மாட்டாங்க... ஏன் தெரியுமா?

பைக்குகளை (Bikes) வாங்குவது சிறந்ததா? அல்லது ஸ்கூட்டர்களை (Scooters) வாங்குவது சிறந்ததா? என்ற விவாதம் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. புதிய டூவீலர்களை (Two Wheelers) வாங்கும்போது எதிர்காலத்திலும் இந்த விவாதங்கள் தொடரலாம்.

சரி, இரண்டில் எது சிறந்தது? என கேட்டால், இரண்டுமே ஒவ்வொரு வகையில் சிறந்தவைதான். ஒரு நாணயத்திற்கு 2 பக்கங்கள் என்பதை போல், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களில் ஒரு சில ப்ளஸ்களும், ஒரு சில மைனஸ்களும் இருக்கும்.

எவ்ளோதான் பணம் இருந்தாலும் ஒரு சிலர் ஸ்கூட்டர்தான் வாங்குவாங்க... பைக்கை தொடவே மாட்டாங்க... ஏன் தெரியுமா?

ஆனால் ஒரு சிலர் ஸ்கூட்டர்களை வாங்குவதைதான் பெரிதும் விரும்புகின்றனர். ஒரு சில விஷயங்களில் பைக்குகளை விட ஸ்கூட்டர்கள் சிறந்தவையாக இருப்பதுதான் இதற்கு காரணம். அந்த விஷயங்கள் என்னென்ன என்பதைதான் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். நீங்கள் புதிய டூவீலர் வாங்குவதாக இருந்தால், எதை தேர்ந்து எடுப்பது என்ற குழப்பத்தில் இருந்து தெளிவு அடைவதற்கு இந்த தகவல்கள் உதவும் என நம்புகிறோம்.

குறுகிய தூர பயணங்களுக்கு ஸ்கூட்டர்கள்தான் பெஸ்ட் ஆப்ஷன். அதிலும் குறிப்பாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர பகுதிகள் என்றால், பைக்குகளில் கியரை மாற்றி மாற்றி ஓட்டுவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். ஆனால் நகர பகுதிகளில் ஸ்கூட்டர்களை ஓட்டுவது மிகவும் எளிமையான விஷயம். எனவே போக்குவரத்து நெரிசலில் கியரையும், க்ளட்ச்சையும் பயன்படுத்தி பயன்படுத்தி அலுத்து போனவர்கள் ஸ்கூட்டர்கள் பக்கம் திரும்பி விட்டனர்.

மறுபக்கம் பைக்குகள் பொதுவாக தொலைதூர பயணங்களுக்கு ஏற்றவையாகதான் உள்ளன. அதிக இன்ஜின் செயல்திறன், பெரிய எரிபொருள் டேங்க் போன்ற அம்சங்கள் பைக்குகளை தொலைதூர பயணங்களுக்கு மிகவும் உகந்தவையாக மாற்றியுள்ளன. ஸ்கூட்டர்களில் கியர்கள் இருக்காது என்பது மற்றொரு வகையிலும் பயன் அளிக்க கூடியதாக உள்ளது. அதாவது பெண்கள் உள்பட கிட்டத்தட்ட குடும்பத்தில் உள்ள அனைவராலும் ஸ்கூட்டர்களை எளிமையாக ஓட்ட முடியும்.

ஆனால் பைக்குகளில் கியர் சிஸ்டம் இருப்பதால், அனைவராலும் அதை ஓட்ட முடிவதில்லை. அதேபோல் புதிதாக டூவீலர் ஓட்டி பழகுபவர்கள்/பழகியர்கள் பலரின் முதல் சாய்ஸ் ஆகவும் ஸ்கூட்டர்கள்தான் இருக்கின்றன. அதை ஓட்டுவது எளிது என்பதுதான் இதற்கு காரணம். ''எனக்கு பைக் ஓட்ட தெரியாது. ஸ்கூட்டர் மட்டுமே ஓட்ட தெரியும்'' என்று சொல்லக்கூடிய ஆண்கள் பலர் இங்கு இருக்கின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதை மிஸ் பண்ணீடாதீங்க: 34 கிமீ மைலேஜ்! இவ்ளோ கம்மியான விலைக்கு இப்படி ஒரு காரா! மாருதி ஷோரூம்களுக்கு சாரை சாரையா படையெடுக்கும் மக்கள்இதை மிஸ் பண்ணீடாதீங்க: 34 கிமீ மைலேஜ்! இவ்ளோ கம்மியான விலைக்கு இப்படி ஒரு காரா! மாருதி ஷோரூம்களுக்கு சாரை சாரையா படையெடுக்கும் மக்கள்

அதேபோல் பொருட்களை வைப்பதற்கான இடவசதி சற்று அதிகமாக இருக்க வேண்டும் என விரும்புபவர்களும் கூட ஸ்கூட்டர்களைதான் தேர்வு செய்கின்றனர். ஸ்கூட்டர்களில் இருக்கைக்கு அடியிலும், முன் பகுதியில் கால்களை வைக்க கூடிய இடத்திலும் நம்மால் பொருட்களை தாராளமாக வைத்து கொள்ள முடியும். அதேபோல் பாதுகாப்பு என்ற மிகவும் முக்கியமான ஒரு விஷயத்திலும், பைக்குகளை விட ஸ்கூட்டர்கள் சற்று சிறந்தவையாகதான் இருக்கின்றன.

ஏனெனில் ஸ்கூட்டர்களின் வேகம் குறைவு. அத்துடன் எளிமையாக கையாளக்கூடிய எடை மற்றும் உயரத்தை அவை கொண்டுள்ளன. அத்துடன் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது பைக்குகளின் பராமரிப்பு செலவு அதிகம். பைக்குகளின் மெக்கானிசமும், கட்டமைப்பும் சர்வீஸ் செய்வதை கடினமான ஒன்றாகவும், நேரம் எடுக்க கூடியதாகவும் மாற்றுகின்றன. ஆனால் ஸ்கூட்டர்கள் இதற்கு அப்படியே நேர் எதிரானவை. இதுபோன்ற காரணங்களால்தான் ஒரு சிலர் எந்தவொரு சூழலிலும் பைக்குகளை வாங்குவதில்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why scooters are cooler than bikes
Story first published: Sunday, November 20, 2022, 14:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X