Just In
- 24 min ago
இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க
- 47 min ago
எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கான முன்பதிவுகள் துவக்கம்!! இந்தியாவின் முதல் செயல்திறன்மிக்க பிஎம்டபிள்யூ கார்..!
- 1 hr ago
பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... முக்கிய விபரங்கள் வெளியானது
- 2 hrs ago
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!
Don't Miss!
- Sports
900 விக்கெட்டுகளை பூர்த்தி செஞ்சிருக்காரு ஆண்டர்சன்... மெக்கிராத்,அக்ரம் வரிசையில் 3வது வீரராக சாதனை
- Movies
சட்டையைக் கழற்றி .. சும்மா தெறிக்க விட்ட ஷிவானி.. செம கெட்டப்!
- News
பாஜக பிரமுகர் "கோட்டைக்குள்" களமிறங்கும் மமதா பானர்ஜி.. நந்திகிராமில் போட்டி.. அதிரடி அறிவிப்பு
- Lifestyle
சிவனின் முழு அருளும் கிடைக்கணுமா? அப்ப உங்க ராசிக்கு ஏற்ற சிவ மந்திரத்தை சொல்லுங்க...
- Finance
மார்ச் 31க்கு முன் கட்டாயம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செடான் ரக கார்களில் பின்புற வைப்பர் கொடுக்கப்படுவதில்லை ஏன்?
பெரும்பாலான ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி கார்களின் பின்புற விண்ட்ஷீல்டு கண்ணாடியிலும் வைப்பர்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆனால், செடான் ரக கார்களின் பின்புறத்தில் வைப்பர் கொடுக்கப்படுவதில்லை. இதற்கு பின்னால் ஏதேனும் காரணம் இருக்கிறதா, என்ன?

மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை உயர்ந்த மாடலில் பின்புற வைப்பர் இருக்கிறது. ஆனால், மாருதி டிசையர் காரில் இருப்பதில்லை. அதேபோன்று, டாடா டியாகோ காரில் பின்புறத்தில் வைப்பர் இருக்கிறது. ஆனால், டீகோர் செடான் காரில் இருப்பதில்லை.

பின்புற வைப்பர் வசதி பிரிமியம் வசதியாகவே கார் நிறுவனங்களால் பாவிக்கப்படுகிறது. விலை உயர்ந்த மாடலில் மட்டும் இருப்பதற்கு விலையை கட்டுப்படுத்துவதற்கு கார் தயாரிப்பு நிறுவனங்கள் கொள்கை ரீதியிலான விஷயமாகவே இருக்கலாம். ஆனால், செடான் மாடலில் மட்டுமே கொடுக்கப்படாததற்கு காரணம் என்ன?

ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களின் வடிவமைப்புதான் முக்கிய காரணம். ஆம், ஹேட்ச்பேக் கார்களின் காற்றை கிழித்துச் செல்லும் விதத்திற்கும், செடான் கார்களின் காற்றை கிழித்துச் செல்லும் விதத்திற்கும் அதிக மாறுபாடு இருப்பது உங்களுக்கு தெரிந்த விஷயம்தான்.

இந்த விஷயமே, பின்புற வைப்பர் வசதியை கொடுப்பதற்கும் அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. ஆம், ஹேட்ச்பேக் கார்களில் முன்புறத்திலிருந்து பின்னோக்கி காற்று செல்லும்போது, பின்புறத்தின் தட்டையான அமைப்பு காரணமாக, அங்கு காற்று விரவல் இருப்பதில்லை. அதிக காற்று வெற்றிடம் ஏற்படுகிறது.

இதனால், ஹேட்ச்பேக், எஸ்யூவி கார்களில் பின்புற விண்ட்ஷீல்டு கண்ணாடியில் அதிக தூசி, தும்பட்டிகளும், அழுக்குகளும் படிவதற்கு ஏதுவாகிறது. இதனால், இதனை சுத்தம் செய்வதற்கு நிச்சயம் ஒரு வசதி வேண்டும் என்பதற்காகவே பின்புறத்தில் வைப்பர் கொடுக்கப்படுகிறது.

அதேநேரத்தில், செடான் ரக கார்களில் பின்னோக்கி செல்லும் காற்று வீச்சானது விண்ட்ஷீல்டு கண்ணாடியை தொட்டுக் கொண்டு பூட்ரூம் வரை செல்கிறது.

இதனால், அதிக அளவில் தூசியும், அழுக்கும் விண்ட்ஷீல்டில் படிவதற்கு வாய்ப்புகள் குறைவு. இதன் காரணமாகவே, செடான் ரக கார்களில் வைப்பர் விலக்கான விஷயமாக இருக்கிறது.

மேலும், ஹேட்ச்பேக் கார்களைவிட செடான் கார்களில் காற்று செல்லும் போக்கு மிக சீராக இருக்கும். இதனால், தூசி காற்று வீச்சுடன் சேர்ந்து அடித்துச் செல்லப்படும். ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி கார்களில் அவ்வாறு அடித்துச் செல்லப்படாத நிலை இருக்கிறது.

செடான் கார்களின் பின்புற விண்ட்ஷீல்டில் முற்றிலுமாக தூசி படியாது என்று சொல்ல முடியாது. ஆனால், ஹேட்ச்பேக், எஸ்யூவி கார்களைவிட மிக மிக குறைவாக இருக்கும்.

செடான் கார்கள் மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்படுவதால், ஹேட்ச்பேக், எஸ்யூவி கார்களைவிட சற்றே கூடுதல் மைலேஜ் தர வல்லதாக இருப்பதற்கும் காரணம்.

ஒருவேளை, செடான் கார்களின் பின்புற கண்ணாடியில் வைப்பர் பொருத்தினால், அது நிச்சயம் காற்று செல்லும் போக்கில் தடங்கலை ஏற்படுத்தும். இதனால், மைலேஜ் குறைவதற்கும் வாய்ப்பு இருப்பதே, செடான் கார்களில் கொடுக்கப்படாததற்கு மற்றொரு காரணம்.

மேலும், செடான் கார்களின் விண்ட்ஷீல்டில் ரியர் வைப்பர் அமைப்பையும், அதற்கான மோட்டாரையும் பொருத்துவதால், தேவையற்ற வடிவமைப்பு பிரச்னைகள் ஏற்படுவதையும் தவிர்க்கும் வகையில் கொடுக்கப்படுவதில்லை.

அதேநேரத்தில், செடான் கார்களில் பின்புற வைப்பர் இருந்தால் மழை நேரத்திலும், தூசி படிவதை எளிதாக அகற்ற முடியும் என்று வாடிக்கையாளர்கள் கருதுவதுண்டு.

ஆனால், அதற்கான செலவீனம், வடிமைப்பு பிரச்னை, மைலேஜ் விவகாரம் மற்றும் காற்று செல்லும் போக்கில் ஏற்படும் மாறுதல்களை மனதில் வைத்தே கார் நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றன.

ஆனால், சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் செடான் கார்களில் ரியர் வைப்பரை கொடுத்து விற்பனை செய்ததையும் மறுக்க இயலாது. இருப்பினும், மேற்கண்ட பொதுவான காரணங்களால்தான் செடான் கார்களில் பின்புற வைப்பர் தவிர்க்கப்பட்டு வருகின்றன.