சில ரயில்வே ஸ்டேஷன்ல மட்டும் தண்டவாளத்தை சுற்றி ஜல்லி கற்கள் போடமாட்டாங்க... ஏன் தெரியுமா?

ரயில்வே ஸ்டேஷன்களில் சில ரயில் நிலையங்களில் மட்டும் தண்டவாளத்தை சுற்றி ஜல்லி கற்கள் போடப்படுவதில்லை ஏன் என தெரியுமா? முழு விபரங்களை காணலாம் வாருங்கள்

சில ரயில்வே ஸ்டேஷன்ல மட்டும் தண்டவாளத்தை சுற்றி ஜல்லி கற்கள் போடமாட்டாங்க . . . ஏன் தெரியுமா ?

இந்தியாவில் ரயில்வே என்பது மிகவும் முக்கியமான போக்குவரத்து, குறைந்த விலையில் நீண்ட தூரம் பயணம் செய்யும் ஒரே வாய்ப்பை இந்த ரயில்வே தான் நமக்கு வழங்குகிறது. இந்நிலையில் ரயில்வேயில் பல தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்ஜின் முதல் சிக்னல் வரை ஏாளமான வியக்க வைக்கும் தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. இப்படியாக ரயில்வேயில் பயன்படுத்தப்படும் பல விஷயங்களுக்குப் பின்னால் என்ன காரணம் என்று கூட நமக்குத் தெரியாமல் இருக்கும்.

சில ரயில்வே ஸ்டேஷன்ல மட்டும் தண்டவாளத்தை சுற்றி ஜல்லி கற்கள் போடமாட்டாங்க . . . ஏன் தெரியுமா ?

இப்படியாக நாம் பார்த்த விஷயம் இந்தியா முழுவதும் ரயில் தண்டவாளங்களசுற்றி ஜல்லி கற்கள் கிடப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் சில பெரிய ரயில் நிலையங்களில் ரயில்வே நடைமேடை அருகே இருக்கும் தண்டவாளத்தில்மட்டுமே ஜல்லிக்கற்கள் இருக்காது கவனித்துள்ளீர்கள்? இது ஏன் இந்த இடத்தில் மட்டும் இல்லை மற்ற இடத்தில் இருக்கிறது என்பத்தைதான் இங்கே தெரிந்துகொள்ளப்போகிறோம்.

சில ரயில்வே ஸ்டேஷன்ல மட்டும் தண்டவாளத்தை சுற்றி ஜல்லி கற்கள் போடமாட்டாங்க . . . ஏன் தெரியுமா ?

இதற்கு முன்னர் ரயில்வே தண்டவாளங்களில் ஏன் ஜல்லி கற்கள் கொட்டப்படுகிறது எனப் பார்க்கலாம். இதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ரயில் தண்டவாளங்கள் கட்டமைக்கப்படம் அமைப்பைத் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக ரயில்வே தண்டவாளங்கள் எல்லாம் இருப்பால் செய்யப்படுபவை இந்த இரும்புகளுக்குக் கீழே குறுக்காக அமைக்கப்பட்ட சிமெண்ட் பில்லர்கள் மீது இந்த இரும்புகள் நிலை நிறுத்தப்பட்டிருக்கும்.

சில ரயில்வே ஸ்டேஷன்ல மட்டும் தண்டவாளத்தை சுற்றி ஜல்லி கற்கள் போடமாட்டாங்க . . . ஏன் தெரியுமா ?

இந்த சிமெண்ட் பில்லர்கள் எல்லாம் அசையாதவாறு அமைக்கப்பட்டிருக்கும். அதற்காக அதைச் சுற்றி ஜல்லி கற்கள் போடப்பட்டிருக்கும். பொதுவாக தண்டவாளங்களைச் சுற்றி ஜல்லி கற்கள் போடுவது தண்டவாளங்களுக்கு ஒருசப்போர்ட் கொடுப்பதற்காகத் தான். ரயில்கள் வேகமாகத் தண்டவாளங்களில் செல்லும் போது இந்த ஜல்லி கற்கள் அதன் அதிர்வுகளை உள்ளவாங்கிக்கொள்ளும்,

சில ரயில்வே ஸ்டேஷன்ல மட்டும் தண்டவாளத்தை சுற்றி ஜல்லி கற்கள் போடமாட்டாங்க . . . ஏன் தெரியுமா ?

தண்டவாளத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் என்பதற்காக ஜல்லி கற்கள் போடப்படுகிறது. ஆனால் சில பெரிய அல்லது முக்கியமான ரயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்களில் ரயில் தண்டவாளம் மட்டுமே இருக்கும் அதைச் சுற்றி ஜல்லி கற்கள் இருக்காது. இதற்கு முக்கியமான காரணம் ரயில் தண்டவாளத்தை சுத்தப்படுவதற்காக தான் இவ்வாறாக தண்டவாளங்களில் உள்ள ஜல்லி கற்கள் அகற்றப்பட்டுள்ளன.

சில ரயில்வே ஸ்டேஷன்ல மட்டும் தண்டவாளத்தை சுற்றி ஜல்லி கற்கள் போடமாட்டாங்க . . . ஏன் தெரியுமா ?

இப்படியாகத் தண்டவாளங்களில் உள்ள ஜல்லி கற்கள் அகற்றப்பட்ட இடத்தில் பார்த்தால் நீங்கள் சிமெண்ட் கான்கிரீட்டில் தளம் அமைக்கப்பட்டிருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஓடிய ரயில் பெட்டிகளில் பயோ டாய்லெட் முறைகள் இல்லை. இதனால் டாய்லெட் கழிவுகள் எல்லாம் ரயில் டிராக்களில் தான் கொட்டப்படும். ஊருக்கு வெளியே உள்ள ரயில் தண்டவாளங்களில் கழிவுகள் கொட்டப்பட்டால் மழை மற்றும் வெளியில் நாளடைவில் மக்கிப்போகும். ஆனால் ரயில் நிலைய தண்டவாளங்கள் அப்படி அல்ல அதிகமான மக்கள் அந்த இடத்தை பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும்.

சில ரயில்வே ஸ்டேஷன்ல மட்டும் தண்டவாளத்தை சுற்றி ஜல்லி கற்கள் போடமாட்டாங்க . . . ஏன் தெரியுமா ?

பெரிய ரயில் நிலையங்களைப் பொருத்தவரை ரயில்கள் 10 முதல் 20 நிமிடங்கள் கூட நிற்க வேண்டிய நிலை வரும். அப்படிப்பட்ட நேரத்தில் மக்கள் டாய்லெட்டை அதிகம் பயன்படுத்துவதால் அப்பகுதி அதிகமாகக் கழிவுகள் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு ரயில் வந்து நின்று கடந்து செல்லும் போது ரயில் தண்டவாளங்களைச் சுத்தம் செய்ய ரயில் வே நிர்வாகம் பணியாளர்களை நியமித்துள்ளது. அவர்கள் வந்து ஒவ்வொரு ரயில் சென்ற பின்பும் சுத்தம் செய்வார்கள்.

சில ரயில்வே ஸ்டேஷன்ல மட்டும் தண்டவாளத்தை சுற்றி ஜல்லி கற்கள் போடமாட்டாங்க . . . ஏன் தெரியுமா ?

அதனால் அங்கு ஜல்லி கற்கள் இருந்ததால் சுத்தம் செய்யும் பணி செய்யச் சிரமமாக இருக்கும் என்பதால் ஜல்லி கற்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்த ஜல்லி கற்கள் அதிர்வுகளை உள்வாங்கும் என்பதால் அதை ஈடுசெய்ய இப்படியாக ஜல்லி கற்கள் எடுக்கப்பட்ட இடங்களில் கட்டாயம் கான்கிரிட் தளம் இருக்க வேண்டும் என ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இது எல்லா ரயில் நிலையங்களிலும் இருக்காது. ஆனால் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் இருக்கும். எந்த ரயில் நிலையில் ரயில்கள் அதிக நேரம் நிற்குமோ அந்த ரயில் நிலையங்களில் இந்த வசதி இருக்கும்

More from DriveSpark

Article Published On: Friday, July 8, 2022, 18:57 [IST]
English summary
Why some railway station does not have gravel ballast near platform
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+