புது வண்டி வாங்கும் போது ஏன் பெரிய சாவியை கொடுத்து போட்டோவிற்கு போஸ் கொடுக்குறாங்க?

புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஷோரூம் உரிமையாளர்கள் பெரிய சாவி போன்ற ஒரு அட்டையை கையில் கொடுத்து போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார்களே ஏன் தெரியுமா? இதை விரிவாக காணலாம் வாருங்கள்.

எந்த கார் தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும் சரி புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களை கார் ஷோரூம் இல் வைத்து கார் வாங்கும் போது அவர்களுக்கு பெரிய சாவி போன்ற அட்டையாலான ஒரு பொருளை கையில் கொடுத்து போட்டோவிற்கு போஸ் கொடுப்பார்கள். இந்த போட்டோவை நாம் புதிதாக கார் டெலிவரியை பெறும் பலர் சமூக வலைதளங்களில் பகிர்வதை பார்த்திருப்போம்.

big key in showroom

இந்த சாவியை நாம் கார்களில் நிச்சயம் பயன்படுத்த முடியாது. காரின் உண்மையான சாவி சிறியதாக தான் இருக்கும். இந்த சாவியை வாடிக்கையாளர்களுக்கும் ஷோரூம் உரிமையாளர்கள் தர மாட்டார்கள். இது வெறும் போட்டோவிற்கு போஸ் கொடுக்கலாம் அப்படி இருக்கும்போது இந்த சாவியை ஏன் பயன்படுத்துகிறார்கள்? இதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன? பலருக்கும் இந்த விஷயம் தெரியாது.

பலர் இப்படியாக பெரிய சாவியை ஷோரூம் உரிமையாளர்கள் பயன்படுத்துவதற்கு காரணம், சிறிய சாவியாக கொடுத்தால் போட்டோவில் சரியாக தெரியாது என்பதால் பெரிய சாவியாக போட்டோவிற்கு போஸ் கொடுக்க கொடுக்கிறார்கள் என சொல்லுவார்கள். ஆனால் அதற்கு பின்னால் மிகப்பெரிய மார்க்கெட்டிங் தந்திரம் இருக்கிறது. இப்படியாக பெரிய சாவியை கொடுத்து போட்டோ எடுப்பதன் மூலம் அந்த கார் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெயர் கிடைக்கிறது. அதேபோல வாடிக்கையாளர்களுக்கும் மனதளவில் ஒரு திருப்தியான மனநிலை ஏற்படுகிறது.

புதிதாக கார் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு இப்படியாக பெரிய சாவியை கொடுத்து அவர்களை காரின் முன்னே நிற்கவைத்து புகைப்படம் எடுப்பதன் மூலம் அந்த வாடிக்கையாளருக்கு தான் புதுகார் வாங்குவது குறித்து எடுத்த முடிவு மிக சரியான முடிவு என்றும், இதை நிச்சயம் கொண்டாட வேண்டும், ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு அவரை கொண்டு போவதற்காக ஒரு முயற்சியாகும். இதனால் வாடிக்கையாளர் மனதில் கார் வாங்குவதற்காக அதிகம் பணம் செலவான வருத்தம் இல்லாமல் போகும்.

கார் வாங்கும் பல வாடிக்கையாளர்கள் தங்கள் வாழ்நாளில் சேகரித்த மிகப்பெரிய அளவிலான பணத்தை இதில் முதலீடு செய்வார்கள். இப்படியான தருணத்தை அவர்களது வாழ்வில் மறக்க முடியாத தருணமாக இருக்கும். இந்த மறக்க முடியாத தருணத்தை என்றும் நினைவில் வைத்துக்கொள்ள அவர்களுக்கு அந்த தருணத்தை புகைப்படம் எடுத்து வழங்குவது என்பது அவர்களது மனதை தொடும் ஒரு விஷயமாக இருக்கும். இப்படியாக அவர்களை காருடன் நிறுத்தி புகைப்படம் மூலம் வாடிக்கையாளர்கள் வாழ்நாளில் இந்த தருணத்தை மறக்க முடியாத தருணமாக கொள்வார்கள்.

இப்படியாக புகைப்படம் எடுக்கும் போது காரின் முன்னால் நிற்கும் பலர் காரின் பெரும்பான்மையான பகுதியை மறைத்து விடுவார்கள். இதனால் கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் கிடைக்காது. இந்நிலையில் காரின் சாவி போன்ற ஒரு பிளாஸ்டிகாலான சாவியை ஷோரூம் உரிமையாளர் வாடிக்கையாளருக்கு கொடுப்பது போல புகைப்படம் எடுத்துக் கொள்வதன் மூலம் அந்த சாவியில் கார் தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ பெரிதாக இடம்பெறும் வகையில் டிசைன் செய்திருப்பார்கள்.

இதன் மூலம் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது எல்லாம் அந்த காரை வாங்கிய வாடிக்கையாளருக்கும் அவரது நண்பர்கள் உறவினர்களுக்கும் அந்த கார் நிறுவனத்தின் பெயர் என்றும் மனதில் நிற்கும். இதனால் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது எல்லாம் அந்த கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு இலவசமாக விளம்பரம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

இப்படியாக எடுக்கப்படும் புகைப்படத்தை வாடிக்கையாளர்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் நிச்சயம் பகிர்வார்கள். மக்கள் பலரிடம் தன் வாழ்வில் முக்கியமான தருணத்தை இப்படியாக சமூக வலைதளங்களில் பகிர்வது ஒரு பழக்கமாக இருக்கிறது. இந்த தருணத்தின் போது இந்த கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்த புகைப்படம் மூலம் இலவசமாக விளம்பரம் கிடைக்கிறது. மக்கள் பலருக்கு குறிப்பிட்ட கார் மற்றும் கார் தயாரிப்பு நிறுவனம் குறித்து அதிகம் தெரிய வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலருக்கும் இப்படியாக கார் வாங்கும் போது ஏன் இப்படி பெரிய போலியான சாவியை கொடுத்து போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார்கள் என்ற தகவல் தெரியாமல் இருந்தது. தெரிந்தாலும் பலர் இதை ஒரு சம்பிரதாயமாக மட்டுமே நினைத்து இருப்பார்கள். ஆனால் இதற்குப் பின்னால் மிகப்பெரிய மார்க்கெட்டிங் தந்திரம் இருக்கிறது கார் தயாரிப்பு நிறுவனம் தனது விளம்பரத்திற்காக இப்படி ஒரு மார்க்கெட்டிங் தந்திரத்தை செய்து வாடிக்கையாளர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, October 22, 2023, 13:51 [IST]
English summary
Why take a photo with a big key when buying a car company benefits explained
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+