கார் ஐட்லிங்கில் இருக்கப்ப ஏசி ஏன் வேலை செய்வதில்லை தெரியுமா? இந்த மேட்டரை எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க

கார் ஐட்லிங்கில் இருக்கும்போது குளிர்ச்சியான காற்றை ஏசி வழங்காமல் போவதற்கு பின்னால் உள்ள காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் ஐட்லிங்கில் இருக்கப்ப ஏசி ஏன் வேலை செய்வதில்லை தெரியுமா? இந்த மேட்டரை எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க

சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் கார் வாங்கியிருக்கலாம். பெரிய அளவில் எந்த பிரச்னையும் இல்லாமல் 1 லட்சம் கிலோ மீட்டர்களை கார் கடந்து விட்டால், உங்கள் மனதில் நிச்சயமாக மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் கார் ஐட்லிங்கில் இருக்கும்போது குளிர்ச்சியான காற்றை வழங்கால் ஏசி செய்யும் பிரச்னையை நீங்கள் திடீரென சந்திக்க நேரிடலாம்.

கார் ஐட்லிங்கில் இருக்கப்ப ஏசி ஏன் வேலை செய்வதில்லை தெரியுமா? இந்த மேட்டரை எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க

இதனை நீங்கள் சாதாரணமான பிரச்னையாக எடுத்து கொள்ளலாம். ஆனால் அது தவறு. கோடை காலத்தில் கார் ஐட்லிங்கில் இருக்கும்போது நீங்கள் உள்ளே அமர்ந்திருந்தால் எவ்வளவு வெப்பம் கொதிக்கும்? என்பதை யோசித்து பாருங்கள். யோசிக்கும்போதே பயமாக இருக்கிறது அல்லவா? சரி, கவலைப்பட வேண்டாம். இந்த பிரச்னைக்கு காரணங்கள் என்ன? எப்படி சரி செய்வது? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

கார் ஐட்லிங்கில் இருக்கப்ப ஏசி ஏன் வேலை செய்வதில்லை தெரியுமா? இந்த மேட்டரை எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க

கன்டென்சர் ஃபேன் குறைபாடு

கார் ஐட்லிங்கில் இருக்கும்போது குளிர்ச்சியான காற்றை ஏசி வழங்காவிட்டால், கன்டென்சரில் உள்ள கூலிங் ஃபேனைதான் நீங்கள் முதலில் பார்க்க வேண்டும். ஃபேன் சேதம் அடைந்திருந்தாலோ அல்லது தனது முழு சக்தியின் அளவிற்கு இயங்க முடியாமல் இருந்தாலோ, கன்டென்சர் வழியாக ஃப்ரீயானில் இருந்து வரும் வெப்பத்தை அதனால் குளிர்ச்சியாக்க முடியாது.

கார் ஐட்லிங்கில் இருக்கப்ப ஏசி ஏன் வேலை செய்வதில்லை தெரியுமா? இந்த மேட்டரை எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க

கார் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, ஃப்ரீயானை குளிர்ச்சியாக்க கன்டென்சருக்கு ஃபேன் தேவை இல்லை. ஏனெனில் போதுமான காற்று 'பாஸ்' ஆகி கொண்டிருக்கும். ஆனால் கார் நகராமல் ஐட்லிங்கில் இருக்கும்போது ஃப்ரீயானை குளிர்ச்சியாக்க இருக்கும் ஒரே ஆயுதம் ஃபேன் மட்டும்தான். எனவே கார் ஐட்லிங்கில் இருக்கும்போது குளிர்ந்த காற்றை ஏசி வழங்காவிட்டால், முதலில் ஃபேனை சோதியுங்கள்.

கார் ஐட்லிங்கில் இருக்கப்ப ஏசி ஏன் வேலை செய்வதில்லை தெரியுமா? இந்த மேட்டரை எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க

ஃப்ரீயானின் அளவு குறைதல்

ஃப்ரீயானின் அளவு குறைந்தாலும், கார் ஐட்லிங்கில் இருக்கும்போது ஏசி குளிர்ச்சியான காற்றை வழங்காத பிரச்னையை நீங்கள் சந்திக்க நேரிடலாம். கார் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது, கம்ப்ரசர் ஃப்ரீயானை எளிதாக பம்ப் செய்து கொள்ளும். ஆனால் கார் ஐட்லிங்கில் இருந்தால் இந்த வேலை நடைபெறுவது கடினம்தான்.

கார் ஐட்லிங்கில் இருக்கப்ப ஏசி ஏன் வேலை செய்வதில்லை தெரியுமா? இந்த மேட்டரை எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க

இதன் காரணமாகவும் கார் ஐட்லிங்கில் இருக்கும்போது ஏசி குளிர்ச்சியான காற்றை வழங்க தவறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது நமது பட்டியலில் உள்ள இரண்டாவது காரணம் ஆகும். ஆனால் உங்களுக்கு இந்த நடைமுறை தெரியும்பட்சத்தில், நீங்களாகவே ரீஃபில் செய்து கொள்ள முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கார் ஐட்லிங்கில் இருக்கப்ப ஏசி ஏன் வேலை செய்வதில்லை தெரியுமா? இந்த மேட்டரை எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க

குப்பைகள்

ஏதேனும் குப்பைகள் கன்டென்சருக்குள் நுழைந்து, ஃபின்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால், கூலிங் வேலை சரியாக நடக்காது. குறிப்பாக கார் ஐட்லிங்கில் இருக்கும்போது, கூலிங் வேலை சரிவர நடைபெறாது. இந்த பிரச்னையை சரி செய்ய வேண்டுமென்றால், கன்டென்சர் ஃபின்கள் மற்றும் இதர பகுதிகளை சுத்தம் செய்வது அவசியம்.

கார் ஐட்லிங்கில் இருக்கப்ப ஏசி ஏன் வேலை செய்வதில்லை தெரியுமா? இந்த மேட்டரை எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க

கார் ஐட்லிங்கில் இருக்கும்போது குளிர்ச்சியான காற்றை ஏசி வழங்காமல் போவதற்கு இவை மூன்றும் மிக முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன. இந்த நேரத்தில் உங்களுக்கு மற்றொரு விஷயத்தை கூறுவதும் நன்றாக இருக்கும் என நினைக்கிறோம். அதாவது கார் ஐட்லிங்கில் இருக்கும்போது ஏசி-யை போடுவதால் ஏதேனும் தீமைகள் ஏற்படுமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.

கார் ஐட்லிங்கில் இருக்கப்ப ஏசி ஏன் வேலை செய்வதில்லை தெரியுமா? இந்த மேட்டரை எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க

இந்த கேள்விக்கு தீமைகள் ஏற்படும் என்பதுதான் பதில். கார் ஐட்லிங்கில் இருக்கும்போது நீண்ட நேரம் ஏசி இயங்கினால், இன்ஜினில் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் நினைக்கிறோம். ஏனெனில் உங்களுடைய காரில் திறன்மிக்க ரேடியேட்டர் அமைப்பு இல்லாதபட்சத்தில் மட்டுமே இன்ஜினில் பாதிப்பு ஏற்படும்.

கார் ஐட்லிங்கில் இருக்கப்ப ஏசி ஏன் வேலை செய்வதில்லை தெரியுமா? இந்த மேட்டரை எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், பழைய மாடல் கார்களில் திறன்மிக்க ரேடியேட்டர் அமைப்பு இருக்காது. எனவே ஐட்லிங்கில் இருக்கும்போது ஏசி-யை இயக்கினால், இன்ஜினில் பிரச்னைகள் ஏற்படும். ஆனால் இன்றைய நவீன கார்களில் அந்த பிரச்னை இல்லை. நெடுஞ்சாலையில் வேகமாக சென்றாலும் அல்லது கார் ஐட்லிங்கில் இருந்தாலும் ஏசி-யை இயக்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why The Car AC Not Blowing Cold Air When Idle: Important Reasons. Read in Tamil
Story first published: Monday, July 5, 2021, 22:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X