இதை யாரும் கவனிச்சிருக்க மாட்டீங்க! ஆண்கள் சைக்கிளுக்கும், பெண்கள் சைக்கிளுக்கும் இப்படி ஒரு வித்தியாசமா?

சைக்கிள்களில் ஆண்கள் சைக்களிலுக்கும் பெண்கள் சைக்கிளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த வித்தியாசம் ஏன் கொண்டு வரப்பட்டது? இதன் வரலாறு என்ன? முழுமையாகக் காணலாம் வாருங்கள்.

இதை யாரும் கவனிச்சிருக்க மாட்டீங்க . . .ஆண்கள் சைக்கிளுக்கும், பெண்கள் சைக்கிளுக்கும் இப்படி ஒரு வித்தியாசமா . . .

ஒரு மனிதனின் வாழ்வில் வாகனம் என்ற விஷயத்தை அவன் பிறந்தது முதல் இறப்பது வரை பயன்படுத்தும் விஷயமாக மாறிவிட்டது. குழந்தை பிறந்து நடை வண்டியில் பழகுவது முதல் பின்னர் சைக்கிள், ஸ்கூட்டர், பைக், கார், ரயில், விமானம், கப்பல் என எல்லாவற்றிலும் முடிந்தளவுக்குப் பயணம் செய்துவிட்டு அவன் இறந்த பிறகு இறுதி பயணத்தையும் வாகனத்திலேயே சென்று முடிக்கிறான். அந்த அளவிற்கு வாகனம் மனிதர்களின் வாழ்வியலோடு கலந்த ஒரு விஷயமாகிவிட்டது.

இதை யாரும் கவனிச்சிருக்க மாட்டீங்க . . .ஆண்கள் சைக்கிளுக்கும், பெண்கள் சைக்கிளுக்கும் இப்படி ஒரு வித்தியாசமா . . .

ஒரு மனிதன் தனியாக ஓட்டத்துவங்கும் முதல் வாகனம் சைக்கிள், சிறு குழந்தையாக இருக்கும் போது இருந்தே இந்த சைக்கிள் அவனுடன் பயணிக்கத் துவங்கிவிடுகிறது. எந்த ஒரு மோட்டாரின் பயன்பாடும் இல்லாமல் மனிதன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சைக்கிளில் பயணிக்கத் துவங்கினான். இன்று வளர்ந்து பெரியவர்களாக இருக்கும் நாமும் சிறுவயதில் சைக்கிள் ஓட்டிய நினைவுகள் பல நம்மிடம் இருக்கும்.

இதை யாரும் கவனிச்சிருக்க மாட்டீங்க . . .ஆண்கள் சைக்கிளுக்கும், பெண்கள் சைக்கிளுக்கும் இப்படி ஒரு வித்தியாசமா . . .

அப்படியாகத் தமிழ்நாட்டில் உள்ள இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் முக்கியமான நினைவு வாடகை சைக்கிள் தான். பலரது வீட்டின் பொருளாதார சூழ்நிலை தன் குழந்தைகளுக்குச் சொந்தமாக ஒரு சைக்கிள் வாங்கி கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். அவர்களுக்காகவே அன்று சைக்கிளை வாடகைக்கு விடுவது என்பது ஒரு தொழிலாகவே நடந்து வந்தது. இன்று அப்படியான தொழிலே அழிந்துவிட்டது எனச் சொல்லிவிடலாம்.

இதை யாரும் கவனிச்சிருக்க மாட்டீங்க . . .ஆண்கள் சைக்கிளுக்கும், பெண்கள் சைக்கிளுக்கும் இப்படி ஒரு வித்தியாசமா . . .

சரி விஷயத்திற்கு வருவோம், சைக்கிள் ஓட்டி பலருக்குத் தெரியும் சைக்கிளில் இரண்டு வகையான சைக்கிள் இருந்தன. ஒன்று ஆண்களுக்கான சைக்கிள் மற்றொன்று பெண்களுக்கான சைக்கிள் இந்த இரண்டுமே மார்கெட்டில் விற்பனைக்கு இருந்தன. ஆண்களுக்கான சைக்கிளில் குறுக்கே ஒரு கம்பி இருக்கும். பெண்களுக்கான சைக்கிளில் இந்த கம்பி இருக்காது. இது தான் வித்தியாசம். இந்த பதிவில் இது குறித்துத் தான் விரிவாகக் காணப்போகிறோம்.

இதை யாரும் கவனிச்சிருக்க மாட்டீங்க . . .ஆண்கள் சைக்கிளுக்கும், பெண்கள் சைக்கிளுக்கும் இப்படி ஒரு வித்தியாசமா . . .

முதன் முதலில் சைக்கிளை அதிக அளவிலான விற்பனைக்காகத் தயாரிக்கப்பட்ட போது சைக்கிளின் பாகங்களை தனித்தனியாக வடிவமைத்து ஒன்றாகச் சேர்த்து விற்பனை செய்தனர். சைக்கிள் மெல்ல மெல்ல மக்கள் பயன்பாட்டிற்கு வந்த போது சைக்கிள்களை ஆண்கள் அதிகம் வாங்கி பயன்படுத்தத் துவங்கினர். அன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் பெரும்பான்மையான பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருந்தனர்.

இதை யாரும் கவனிச்சிருக்க மாட்டீங்க . . .ஆண்கள் சைக்கிளுக்கும், பெண்கள் சைக்கிளுக்கும் இப்படி ஒரு வித்தியாசமா . . .

பின்னர் மெது மெதுவாகப் பெண்களும் வேலைக்குச் செல்ல துவங்கினர். ஆனால் பெண்கள் சைக்கிளை வாங்கி பயன்படுத்தத் தயங்கினர். அதற்கு முக்கியமான காரணம் சைக்கிளில் குறுக்கே இருந்த கம்பி தான் ஆண்கள் சைக்கிளில் ஏறும் போது கால்களைத் தூக்கி அந்த கம்பியைத் தாண்டி தூக்கிப் போட்டு எளிதாக ஏறி அமர்ந்தனர். ஆனால் அன்றைய காலகட்டத்தில் பெண்கள் பயன்படுத்திய ஆடைகள் இதற்கு தோதுவாக இல்லை.

இதை யாரும் கவனிச்சிருக்க மாட்டீங்க . . .ஆண்கள் சைக்கிளுக்கும், பெண்கள் சைக்கிளுக்கும் இப்படி ஒரு வித்தியாசமா . . .

கால்களைத் தூக்கிப் போடும் போது பெண்களின் கால் பகுதி வெளியே தெரிந்தது. இது அவர்களுக்கு அசௌகரியத்தைக் கொடுத்தது. இதனால் பெண்கள் சைக்கிள் ஓட்ட தயங்கினர். இதைத் தெரிந்து கொண்ட சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள் பெண்களுக்கான தனி சைக்கிளை வடிவமைக்க முடிவு செய்தனர். அப்பொழுது அவர்கள் குறுக்கே இருந்த கம்பி இல்லாமல் வடிவமைத்தனர். சைக்கிள் ஃபிரேமில் குறுக்கே கம்பி இருந்தால் தான் ஸ்டிராங்காக இருக்கும்.

இதை யாரும் கவனிச்சிருக்க மாட்டீங்க . . .ஆண்கள் சைக்கிளுக்கும், பெண்கள் சைக்கிளுக்கும் இப்படி ஒரு வித்தியாசமா . . .

அன்று தயாரிக்கப்பட்ட சைக்கிள்களில் பயன்படுத்தப்பட்ட மெட்டிரியல்கள் அவ்வளவு ஸ்டிராங்காக இல்லாததால் பெண்களுக்கான சைக்கிளை வடிவமைப்பதில் பல சிக்கல் இருந்தது. இருந்தும் வடிவமைக்கப்பட்ட சைக்கிளும் முதலில் வடிவமைக்கப்பட்ட சைக்கிளில் அளவிற்கு ஸ்டிராங்காக இல்லை. இருந்தாலும் பெண்களுக்கான சைக்கிள் மார்கெட்டில் வெற்றி பெற்றது.

இதை யாரும் கவனிச்சிருக்க மாட்டீங்க . . .ஆண்கள் சைக்கிளுக்கும், பெண்கள் சைக்கிளுக்கும் இப்படி ஒரு வித்தியாசமா . . .

பெண்கள் சைக்கிளை ஆண்களைப் போல ரஃப்பாக பயன்படுத்துவதில்லை. அதனால் அவர்களுக்கு அந்த அளவிற்கு ஸ்டிராங்கான சைக்கிள் தேவைப்படவில்லை. இதனால் மார்கெட்டில் பெண்களுக்கான சைக்கிள் வெற்றி பெற்றது. இதனால் இன்றும் மார்கெட்டில் பெண்களுக்கான சைக்கிளில் நடுவே கம்பி இல்லாமலேயே செய்கின்றனர். ஆனால் இன்று பெண்களின் ஆடைகள் மாறிவிட்டது. இன்றைய சூழ்நிலையில் சைக்கிளின் நடுவே கம்பியிருந்தாலும் பெண்கள் பெரிய அளவில் கஷ்டப்படுவதில்லை.

இதை யாரும் கவனிச்சிருக்க மாட்டீங்க . . .ஆண்கள் சைக்கிளுக்கும், பெண்கள் சைக்கிளுக்கும் இப்படி ஒரு வித்தியாசமா . . .

இதற்கிடையில் சைக்கிள் தயாரிக்கும் ஃபிரேம்களின் தரமும் மாறிவிட்டது. இன்று கார்பன் ஃபைபரை கொண்டு சைக்கிள் தயாரிக்கப்படுகிறது. இதனால் நடுவில் சைக்கிளில் கம்பி வைக்க வேண்டிய அவசியமே இல்லை. இன்று முற்றிலும் வேறுபட்ட பல மாடல்களில் சைக்கிள்கள் வந்துவிட்டனர். நடுவில் கம்பியில்லாத பல சைக்கிள்கள் ஆண்களுக்காகவும் மார்கெட்டிற்கு வந்துவிட்டது.

இதை யாரும் கவனிச்சிருக்க மாட்டீங்க . . .ஆண்கள் சைக்கிளுக்கும், பெண்கள் சைக்கிளுக்கும் இப்படி ஒரு வித்தியாசமா . . .

இன்று பெண்களுக்கான சைக்கிளை வெறும் நடுவில் உள்ள கம்பியை வைத்து மட்டும் வேறுபடுத்துவதில்லை. மாறாகச் சைக்கிளின் மாடல், நிறம், சீட் மற்றும் ஹேண்டில் பாரின் வடிவமைப்பு அதன் உயரம், அம்சங்களை வைத்துப் பிரிக்கப்படுகிறது. இதுதான் பெண்களுக்கான சைக்கிளில் மட்டும் குறுக்கே கம்பி இல்லதாதற்கான வரலாறு.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why there is no cross bar in ladies cycle
Story first published: Tuesday, September 27, 2022, 11:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X