Flight Ticket-ல் Waiting List என்ற ஆப்ஷனே இல்லாததுக்குப் பின்னாடி இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?

நம்மில் பலருக்கு விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பலர் விமானத்தில் பறந்திருப்பார்கள். சிலர் அதற்கான கனவுகளுடன் வாய்ப்பிற்காகக் காத்திருப்பார்கள். விமானத்தில் பயணிப்பது என்பது தனி உணர்வைத் தரக்கூடியது. இப்படியான விமான பயணத்தில் நம்மை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்கள் இருக்கிறது.

நாம் விமான பயணத்திற்காக சீட்டு எடுக்கும் போது எப்பொழுதுமே நமக்கு விமானத்தின் கன்ஃபார்ம் டிக்கெட் மட்டுமே கிடைக்கும். அல்லது விமானம் முழுவதுமாக நிறைந்துவிட்டது என்று கூறப்பட்டு டிக்கெட் கிடைக்காமல் போகும். ஆனால் காத்திருப்பு பட்டியல் என்ற ஒரு விமான டிக்கெட்களில் இருக்காது.

Flight Ticket- Waiting List

நாம் ஐஆர்சிடிசியில் டிக்கெட்களை புக் செய்யும் போது காத்திருப்பு பட்டியலிலும் டிக்கெட்களை புக்கிங் செய்யலாம். அப்படியாக டிக்கெட்களை புக்கிங் செய்தால் ஏற்கனவே கன்ஃபார்ம் டிக்கெட்டை பெற்றவர்கள் தங்கள் டிக்கெட்டை ரத்து செய்யும் பட்சத்தில் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு அந்த டிக்கெட் கிடைக்கும். இது ஒரு சாதாரண நடைமுறை தான்.

ஆனால் விமானங்களில் அப்படியில்லை கன்ஃபார்ம் டிக்கெட் மட்டுமே வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் கன்ஃபார்ம் டிக்கெட் எடுத்தவர்கள் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்யும் வாய்ப்பும் இருக்கிறது. இப்படி என்றால் காத்திருப்பு பட்டியல் ஏன் இல்லை என்ற கேள்வி பலருக்கு வரும். இதற்குத் தான் விமான நிறுவனங்கள் வேறு விதமான டெக்னிக்களை கையாளுகின்றனர்.

Flight Ticket- Waiting List

விமான நிறுவனங்கள் ஓவர் புக்கிங் என்ற முறையில் டிக்கெட்களை புக்கிங் செய்கின்றனர். அதாவது ஒரு விமானத்தில் 180 பேர் பயணிக்க முடியும் என வைத்துக்கொள்வோம். அந்த விமானத்தில் சராசரியாக எத்தனை நபர்கள் புக்கிங்கை கேன்சல் செய்கிறார்கள் எனக் கணக்கிட்டு அத்தனை டிக்கெட்களை அதிகமாக புக்கிங் செய்வார்கள்.

உதாரணமாக ஒவ்வொரு முறையும் 20 டிக்கெட் கேன்சல் என்ற டிரெண்டை விமான நிறுவனங்கள் கண்டு வந்தால் அந்த விமானத்திற்கு 20 நபர்களைச் சேர்த்து மொத்தம் 200 உறுதி செய்யப்பட்ட டிக்கெட்களை விற்பனை செய்து விடுவார்கள். இதனால் எப்படியும் 20 பேர் கேன்சல் செய்தால் மீதம் உள்ள நபர்களுக்கு அந்த டிக்கெட்டை வழங்க முடியும். இதற்காகவே பல விமான நிறுவனங்கள் டிக்கெட் புக் செய்யும் போது சீட்களை தேர்வு செய்யும் ஆப்ஷனை வழங்குவதில்லை.

Flight Ticket- Waiting List

இப்பொழுது நமக்கு ஒரு சந்தேகம் வரலாம் ஒரு வேளை ஓவர் புக் செய்த அளவிற்கு டிக்கெட் கேன்சல் ஆகாமல் விமானத்தின் சீட்டை விட அதிகமான நபர்கள் அதாவது நாம் எடுத்துக்கொண்ட உதாரணத்தின்படி 180க்கும் அதிகமான நபர்கள் வந்துவிட்டால் என்ன செய்வார்கள் எனத் தோன்றலாம். அதற்கு அவர்கள் நேரடியாக சில பயணிகளைத் தேர்வு செய்து அவர்களிடம் பேசி குறிப்பிட்ட பயணத்தை அவர்களைத் தவிர்க்க வைப்பார்கள்.

இந்த பணத்திற்குப் பதிலாக அவர்களுக்கு வேறு விமானத்தில் சிறப்பு டிக்கெட், அல்லது அடுத்த விமான பயண டிக்கெட்/ ரிட்டர்ன் டிக்கெட் இலவசம் உள்ளிட்ட பல ஆஃபர்களை வழங்குவார்கள். எத்தனை நபர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அவர்களிடம் பேசி யார் ஒத்து வருகிறார்களோ அவர்களுக்கு இந்த ஆஃபரை வழங்குவார்கள். அவர்களும் அந்த ஆஃபர் கிடைப்பதால் இந்த பணத்தை ரத்து செய்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இப்படி நடப்பதற்கு வாய்ப்பு 0.0001 சதவீதம் தான் வாய்ப்பு உள்ளது.

ஏன் என்றால் விமானச் சேவையில் டிக்கெட் டிரெண்ட் குறித்த மிகப்பெரிய டேட்டா ஆய்விற்கு பிறகே எத்தனை டிக்கெட்களை அதிகமாக புக் செய்யலாம் என முடிவு செய்வார்கள். இந்த டேட்டா ஆய்வு இப்படியான அதிகமான டிக்கெட் புக் ஆகும் சூழ்நிலைக்கு 99.9 சதவீதம் வழி கொடுக்காது. அதையும் மீறி மிக அரிதாக இந்த சம்பவங்கள் நடக்கும். அப்பொழுது மட்டும் பயணிக்கு ஆஃபர்களை அள்ளி வழங்கி விடுவார்கள்.

இந்த டெக்னிக்கை விமான நிறுவனங்கள் பயன்படுத்த தங்கள் வாடிக்கையாளர்களின் திருப்தியடைய வேண்டும் ஏமாறக்கூடாது என்ற ஒரு காரணமே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. விமான டிக்கெட் புக் செய்யும் போது காத்திருப்பு பட்டியல் என்றால் அவர்கள் அந்த பயணத்திற்குப் பயணிகள் வேறு வழியைத் தேட துவங்கிவிடுவார்கள். இதனால் அந்த பயணி விமான பயணத்தை ரத்து செய்ய முடிவு செய்வார். அதனால் அவர்களுக்கு கன்ஃபார்ம் டிக்கெட்டையே வழங்கிவிட்டு பின்னர் மற்றவர்கள் டிக்கெட் கேன்சல் ஆகும் போது இந்த டிக்கெட்டை அவர்களுக்கு வழங்கி விடுகின்றனர். இதனால் தான் விமான டிக்கெட்டில் காத்திருப்பு பட்டியல் இல்லை! கன்ஃபார்ம் டிக்கெட் மட்டுமே இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் விமான பயணம் என்பது ஒரு பிரிமியம் அம்சமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் பிரிமியம் என்ற விஷயத்தில் காத்திருப்பு பட்டியல் என்றால் பயணிகள் கடுப்பாகி விடுவார்கள் என்பதால் இதை வேறு விதமாக கையாளுகின்றனர். மற்றபடி இதில் ஒருவர் டிக்கெட்டை கேன்சல் செய்தால் அது மற்றவர்களுக்கு மாற்றப்படும் நடைமுறை விமானத்திலும் இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, April 17, 2023, 9:20 [IST]
English summary
Why there is no waiting list for flight tickets
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X