சூப்பர் ஐடியாவா இருக்கே! டிராக்டரின் முன் வீல் சிறியதாகவும், பின் வீல் பெரியதாகவும் இருப்பதற்கு காரணம் இதுதான்

டிராக்டரின் முன் சக்கரங்கள் சிறியதாகவும், பின் சக்கரங்கள் பெரியதாகவும் இருப்பதற்கு என்ன காரணம்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர் ஐடியாவா இருக்கே! டிராக்டரின் முன் வீல் சிறியதாகவும், பின் வீல் பெரியதாகவும் இருப்பதற்கு காரணம் இதுதான்

டிராக்டர்கள் மிகவும் வலுவான வாகனங்கள். விவசாயத்திற்கும், அதிக எடை கொண்ட பொருட்களை இழுப்பதற்கும் டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை எளிதாக செய்வதற்காக சக்தி வாய்ந்த இன்ஜின்கள் டிராக்டர்களில் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகதான் அதிக எடை கொண்ட பொருட்களையும் டிராக்டர்களால் எளிதாக இழுக்க முடிகிறது.

சூப்பர் ஐடியாவா இருக்கே! டிராக்டரின் முன் வீல் சிறியதாகவும், பின் வீல் பெரியதாகவும் இருப்பதற்கு காரணம் இதுதான்

டிராக்டர்களை பற்றி பல்வேறு விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் மற்ற வாகனங்களுடன் ஒப்பிடும்போது டிராக்டர்களில் சற்று வித்தியாசமாக பின் சக்கரங்கள் பெரிதாகவும், முன் சக்கரங்கள் சிறிதாகவும் இருக்கும். டிராக்டர்களில் ஏன் சக்கரங்கள் இப்படி வித்தியாசமாக வழங்கப்படுகின்றன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர் ஐடியாவா இருக்கே! டிராக்டரின் முன் வீல் சிறியதாகவும், பின் வீல் பெரியதாகவும் இருப்பதற்கு காரணம் இதுதான்

ஸ்லிப் ஆகாது!

சேறும், சகதியுமான நிலப்பரப்பில் 'ஸ்லிப்' ஆவதை தடுப்பதற்காக டிராக்டர்களின் பின் சக்கரங்கள் பெரிதாக வழங்கப்படுகின்றன. கார்களில் சக்கரங்கள் சிறியதாக இருப்பதால், சேறும், சகதியுமான நிலத்தில் அவை எப்போதும் 'ஸ்லிப்' ஆகும். ஆனால் டிராக்டர்களில் அந்த பிரச்னை இல்லாமல் இருப்பதற்கு பின் பக்கத்தில் உள்ள பெரிய டயர்கள்தான் காரணம்.

சூப்பர் ஐடியாவா இருக்கே! டிராக்டரின் முன் வீல் சிறியதாகவும், பின் வீல் பெரியதாகவும் இருப்பதற்கு காரணம் இதுதான்

அத்துடன் டயர்கள் அகலமாக இருந்தால் எடையை பேலன்ஸ் செய்வதும் எளிமையாக இருக்கும். அதிக எடை கொண்ட பொருட்களை இழுக்கும்போது, டிராக்டர்களின் பின் சக்கரங்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படும். எனவே பெரிய டயர்களை உற்பத்தி நிறுவனங்கள் வழங்குகின்றன. அத்துடன் தரையுடன் க்ரிப் அல்லது டிராக்ஸனை அதிகரிப்பதும் முக்கியமானது. இந்த பணியை பெரிய பின் டயர்கள் குறையின்றி செய்யும்.

சூப்பர் ஐடியாவா இருக்கே! டிராக்டரின் முன் வீல் சிறியதாகவும், பின் வீல் பெரியதாகவும் இருப்பதற்கு காரணம் இதுதான்

நல்ல விஸிபிலிட்டி!

அதே நேரத்தில் முன் பகுதியில் சிறிய சக்கரங்களை வழங்குவதன் மூலம், டிரைவர் முன் பகுதியை எளிதாக பார்க்க முடியும். இதனுடன் டிராக்டர்களின் பின் சக்கரங்கள் பெரிதாக இருப்பதால், டிரைவர் இருக்கையை சற்று உயரமாக வழங்க முடிகிறது. டிரைவர் இருக்கையை உயரமாக வழங்குவதன் மூலம், விவசாய பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஐடியாவா இருக்கே! டிராக்டரின் முன் வீல் சிறியதாகவும், பின் வீல் பெரியதாகவும் இருப்பதற்கு காரணம் இதுதான்

ஏனெனில் இதன் மூலம் டிராக்டர் டிரைவர்கள் கார்னர்களையும் எளிதாக பார்க்க முடியும். குறிப்பாக விவசாய நிலத்தை உழும் பணிகளின்போது, டிராக்டர்களின் இந்த பண்புகள் ஓட்டுனர்களின் வேலையை எளிதாக்குகின்றன. இதன் காரணமாகவும் டிராக்டர்களின் முன் பகுதியில் சிறிய சக்கரங்களும், பின் பகுதியில் பெரிய சக்கரங்களும் வழங்கப்படுகின்றன.

சூப்பர் ஐடியாவா இருக்கே! டிராக்டரின் முன் வீல் சிறியதாகவும், பின் வீல் பெரியதாகவும் இருப்பதற்கு காரணம் இதுதான்

சூப்பரான ஹேண்ட்லிங்!

டிராக்டர்களின் முன் பகுதியில் சக்கரங்கள் சிறியதாக இருப்பதன் காரணமாக, கையாளுமை சிறப்பாக இருக்கும். முன் பக்க சக்கரங்கள் சிறியதாக இருப்பதால், டிராக்டர் ஓட்டுனர்களால் ஷார்ப்பான கார்னர்களிலும் எளிதாக டர்ன் செய்ய முடியும். சிறிய சக்கரங்கள் இருப்பதன் காரணமாக நகர சாலைகளில் ஓட்டும்போது கூட, எளிதாக டர்ன் செய்யலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

சூப்பர் ஐடியாவா இருக்கே! டிராக்டரின் முன் வீல் சிறியதாகவும், பின் வீல் பெரியதாகவும் இருப்பதற்கு காரணம் இதுதான்

செலவு மிச்சம்!

பெரிய டயர்களுடன் ஒப்பிடும்போது சிறிய டயர்களின் விலை குறைவு. எனவே முன் பகுதியில் உள்ள சக்கரங்களை மாற்ற வேண்டியதாக இருந்தாலும் டிராக்டர் உரிமையாளர்களுக்கு குறைவாகவே செலவு ஆகும். அதே நேரத்தில் முன் சக்கரங்களை போல் பின் சக்கரங்களை அடிக்கடி மாற்ற வேண்டிய தேவையிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அவற்றின் த்ரட் தடிமனாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why Tractors Have Smaller Front Wheels And Bigger Rear Wheels? Important Reasons, Benefits. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X