ரயில் சக்கரங்களில் இந்த சின்ன விஷயம் மட்டும் இல்லேன்னா நாமெல்லாம் பரலோகம் போக வேண்டியது தான்!
ரயில்களில் நாம் எல்லோரும் நிச்சயம் பயணித்திருப்போம். ரயில் பல ஆச்சரியமான அறிவியல் விஷயங்களை உள்ளடக்கிய ஒரு சாதனம். பொதுவாக ரயில்களில் நாம் எத்தனை முறை பயணித்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் சில புதிய தகவல்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
ரயில்களில் பலரை ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம் ரயில்கள் எவ்வளவு வேகத்தில் சென்றாலும் எவ்வளவு பெரிய வளைவுகளில் திரும்பினாலும் அதன் வீல்கள் தண்டவாளத்தை விட்டு நகருவதில்லை. சரியாகத் தண்டவாளத்தில் பதிந்தபடி தான் செல்கிறது. நாம் வெளியே இறங்கி ரயிலில் சக்கரங்களைப் பார்த்தால் எப்பொழுது வேண்டுமானாலும் வழுக்கிச் செல்வது போலத் தான் இருக்கிறது.

இப்படி ரயில்கள் எப்பொழுதும் தண்டவாளத்தை விட்டு நகராமல் இருக்கும் அதிசயம் என்ன? இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ரயில் தண்டவாளங்கள் மற்றும் சக்கரங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ரயிலில்களில் தண்டவாளங்கள் ஒரே இடைவெளியில் கட்டமைக்கப்பட்டிருக்கும். எங்குமே இடைவெளி மாறியிருக்காது.
அதே போலச் சக்கரங்களின் அடிப்பாகம் தட்டையாகவும், அதன் உள்பகுதி சற்று தண்டவாளத்தை உரசுவது போல நீட்டமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த இடத்தில் தான் விஞ்ஞானிகள் ரயில்கள் திருப்பங்களில் தண்டவாளத்திலிருந்து சரியாமல் இருப்பதற்காக ஒரு சிறிய அறிவியல் நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

அதாவது ரயில்களில் சக்கரங்களில் தண்டவாளத்தில் படும் பாகத்தை வெறும் உருளைபோல அல்லாமல் செமி கோன் வடிவில் உருவாக்கியுள்ளனர். அதாவது ரயில் சக்கரத்தில் வெளி பக்கம் உள்ள பகுதியின் விட்டம் உள்பக்கம் உள்ள பகுதியின் விட்டத்தை விட சிறியதாக இருக்கும்படி வடிவமைத்துள்ளனர்.
இது ஒரு சிறிய மாற்றம் தான். ஆனால் இந்த சின்ன மாற்றம் தான் ஒட்டு மொத்த ரயிலையும் திருப்பங்களில் தண்டாவளத்திலிருந்துதடம் புரளாமல் பார்த்துக்கொள்கிறது. அதாவது ரயில் திரும்பும் போது இரு சக்கரங்களில் ஒரு சக்கரம் அதிக விட்டம் உள்ள பகுதியைத் தண்டவாளத்தில் பதிக்கும் மற்றொரு பக்கம் குறைவான விட்டம் உள்ள பகுதியைத் தண்டவாளத்தில் பதிக்கும்.

உதாரணமாக ரயில் வலது பக்கம் திரும்புகிறது என்றால் ரயிலின் வலது பக்கம் உள்ள சக்கரங்கள் எல்லாம் குறைவான விட்டம் உள்ள பகுதியைப் பதித்து உருளத் துவங்கும். அதே நேரம் இடது பக்கம் அதிக விட்டம் உள்ள பகுதியைப் பதித்து உருளத் துவங்கும். இதனால் ரயில் பேலன்ஸாக திருப்பத்தைக் கடந்து விடும். இதனால் ரயிலின் தண்டவாளத்திலிருந்து தடம் புரளாமல் இருக்கும்.
மேலே சொன்ன உதாரணத்தின் படி இடது பக்க தண்டவாளத்தின் உட்புறமாக ஏதாவது விஷயம் தட்டுப்பட்டால் அதைத் தடுக்கவே ரயிலில் சக்கரங்களில் உட்புறம் தண்டவாளத்தை உரசுவது படி நீட்டப்பட்டுள்ளது. இது உரசும் போது தான் ரயிலில் திருப்பங்களில் தண்டவாளத்திலிருந்து சத்தம் வருகிறது.
இந்த ஒரு சின்ன விஷயம் இருந்தாலே போதும் ரயிலின் தண்டவாளம் U டர்ன் போட்டாலும் சரி தண்டவாளத்தை விட்டு நகராமல் ரயிலும் திரும்பும். பலருக்கு ரயில்களில் பயணிக்கும் போதும், ரயில்களைப் பார்க்கும் போது எல்லாம் இந்த சந்தேகம் வரும் இந்த குழப்பம் உங்களுக்குத் தீர்ந்துள்ளது என இப்பொழுது நினைக்கிறோம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்!


Click it and Unblock the Notifications