கோடி ரூபாய் கொடுத்தாலும் வேற எந்த கலரும் கிடைக்காது! டயரில் உள்ள கருப்பு நிறத்திற்கு அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி

இன்று வாகனங்களில் பயன்படுத்தப்படும் டயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கிறது என்று யாராவது யோசித்திருக்கிறோமா? ஏன் காரின் நிறத்திற்கே டயரின் நிறத்தையும் வழங்கினால் என்ன ஆகும்? இதை ஒரு பிரிமியம் அம்சமாகவே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கொடுக்கலாமே பின்னர் ஏன் செய்யமாட்டேன் என்கிறார்கள் என் உங்களில் யாராவது யோசித்திருக்கிறீர்களா?

இன்று சாலையில் ஓடும் கார், பைக், பஸ், ஏன் சைக்கிள் விமானங்களில் கூட அதன் டயர்கள் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கிறது. டயர்களில் கலர் கலர் டயரை எல்லாம் பார்க்கவே முடியாது. இது எவ்வளவு விலை உயர்ந்த காராக இருந்தாலும், டயர் கருப்பு நிறத்தில் மட்டும் தான் இருக்கிறது. இதற்கான காரணத்தை இதற்கு முன்பு யோசித்துள்ளீர்கள்? இதற்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. டயர்கள் கருப்பு நிறத்தில் மட்டும் இருப்பதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணமும் இருக்கிறது.

சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் டயர் கண்டு பிடிக்கப்பட்டது. அப்பொழுது டயர்கள் கருப்பு நிறத்தில் எல்லாம் இல்லை. டயர்கள் ரப்பரால் செய்யப்பட்டது என்பதால் அது ரப்பரின் நிறமான பால் வெள்ளை நிறத்தில் தான் டயர்கள் இருந்தன. ஆனால் இன்று கருப்பாக டயர்கள் மாறியதற்கு முக்கியமான காரணம் அந்த ரப்பர் உடன் சேர்க்கப்பட்ட கார்பன் பொருட்கள் தான். வெறும் ரப்பரை வைத்து டயர்கள் தயாரித்த போது டயர்கள் அதிகமாக உழைக்கவில்லை. சாலையில் கற்கள் இருந்தாலும் குத்தி கழியும் அளவிற்கு இருந்தது.

இதனால் டயரை ஸ்டிராங்க் ஆக்க அதனுடன் சில வேதிப்பொருட்களைக் கலக்க முடிவு செய்தனர். அதன்படி இந்த ரப்பருடன் கார்பன் மூலக்கூறுகளைக் கலந்தனர். இந்த கார்பன் மூலக்கூறுகள் தான் டயருக்க கருப்பு நிறத்தைக் கொடுத்தது. கார்பன் மூலக்கூறுகள் கலந்த பின்பு டயர்கள் எல்லாம் ஸ்டிராங்க் ஆகியது. பெரிய பெரிய கற்களையும் எளிதாகச் சமாளித்தது. இதன் பின்பே டயர் தொழிலே வளர்ச்சியடையத் துவங்கியது. கார்பன் மூலக்கூறுகள் டயருக்கு தேவையான பலத்தையும், உழைப்பையும் கொடுத்தது.

இது மட்டுமல்ல இந்த கார்பன் மூலக்கூறுகள் டயர்கள் ரோட்டில் உருளும் போது தரைக்கும் டயருக்குமான உராய்வை இந்த கார்பன் மூலக்கூறுகள் தான் குறைக்கிறது. வெறும் ரப்பர் என்றால் அதிகமாக உராய்வு ஏற்படும். ஆனால் கார்பன் மூலக்கூறுகளைச் சேர்ப்பதால் உராய்வு குறைகிறது. இதனால் டயரின் உழைப்பு மற்றும் வாழ்நாள் அதிகமாகிறது. இது போக வெள்ள நிறத்தில் டயர்கள் இருந்தால் அது வெப்பத்தைத் தாங்காமல் போகும். இதனால் டயரின் உழைப்பு குறைவாக இருந்தது.

ஆனால் கார்பன் மூலக்கூறுகளைச் சேர்த்தது மூலம் டயர் கருப்பு நிறத்திற்கு மாறியதால் வெப்பத்தை அதிகமாகத் தாங்கும் திறனைக் கொண்டதாக மாறியது. இதனால் எந்த வெப்ப சூழ்நிலையாக இருந்தாலும் டயர்கள் நீடித்து உழைக்கும் என் நிலையை எட்டியது. நீடித்து உழைப்பதால் டயர்கள் காலாவதியாகும் காலமும் தள்ளிப் போனது, டயர்கள் ஒரு வாகனத்திற்கு மிகவும் முக்கியமான விஷயம், இது ரோட்டுடன் இருக்கும் ஒரே சப்போர்ட் இதுதான். இதன் தரத்தை நாம் குறைக்க முடியாது.

அரசும் குறைந்த தரத்தில் டயர்களை தயாரிக்க அனுமதிப்பதில்லை. கார்களின் டயரின் கலரை மாற்ற வேண்டும் என்றால் அதன் தரத்தைக் குறைக்க வேண்டும். அதனால் கலர் டயர்களும் மார்கெட்டிற்கு வரவில்லை. டயர்கள் கருப்பு நிறத்தில் மட்டும் இருப்பது சற்று சலிப்பான விஷயம் தான். கலர் கலராக டயர் இருந்தால் கார் டிசைனில் சுவாரஸ்யமாக இருக்கும்.ஆனால் கலர் டயர்கள் சாத்தியமில்லை என்பதால் கருப்பு நிற டயர்கள் மட்டுமே இருக்கிறது.

ஒரு வேளை எதிர்காலத்தில் தரமான டயர்களே கலர் கலராக வர ஏதாவது அறிவியல் வளர்ச்சி ஏற்படலாம். இது நடந்தால் மட்டுமே கலர் கலர் டயர்களை சாலையில் காண முடியும். இப்படியாக கலர் டயர்கள் வந்துவிட்டால் காரின்நிறத்திற்கு ஏற்ற டயர்கை தேர்வு செய்ய வேண்டும். டயரின் நிறம் பொருத்தும் அதன் விலை மாறுபடும். குறிப்பிட்ட நிற டயர்களுக்கு அதிகமான டிமாண்ட் இருக்கும் என ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. கலர் டயர்கள் வருவது விற்பனையாளர்களுக்கு லாபத்தைக் கூட்டுமே தவிரப் பயனாளர்களுக்குப் பெரிய லாபத்தைத் தராது என்பது மட்டுமே உண்மை

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why tyres are always black in color
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X