Just In
- 7 hrs ago
எதிர்பார்த்தப்படி சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் உயர்ந்தன!! முன்பதிவுகள் மீண்டும் நிறுத்தம்!
- 9 hrs ago
ஃபோக்ஸ்வேகன் போலோவில் புதிய டிஎஸ்ஐ வேரியண்ட்!! ரூ.7.41 லட்சத்தில் அறிமுகம்!
- 12 hrs ago
பார்த்துகுங்க மக்களே, நான் கார் வாங்கிட்டேன்... டிக் டாக் புகழ் ஜிபி முத்து நெகிழ்ச்சி!
- 12 hrs ago
டாடா கார் பக்கம் குவியும் பிரபலங்கள்! புதுசா சஃபாரி காரை வாங்கி இருக்கும் இவர் யாருனு தெரியுதா?.. நல்ல பாருங்க
Don't Miss!
- Finance
தபால் அலுவலக ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு.. யார் யார் தொடங்கலாம்.. ஆன்லைனில் எப்படி தொடங்குவது?
- Movies
ரசிகையிடம் இருந்து வந்த அந்த லெட்டர்.. பூரித்துப்போன வனிதா அக்கா.. வைரலாகும் டிவிட்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு செலவு மேல செலவு வருமாம்…
- News
கொரோனா அதிவேகம்.. மீதமுள்ள 4 கட்ட வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்.. கோரிக்கை வைக்கும் மம்தா!
- Sports
கண் இமைக்கும் நொடியில் நடந்த அந்த சம்பவம்.. வாய்ப்பிழக்க வைத்த இளம் வீரர்..ப்பா என்ன திறமை - வீடியோ
- Education
ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரபலங்கள் காரின் பின்சீட்டில் அமர்வதற்கு என்ன காரணம்? படித்தால் வியந்து போவீர்கள்
உலகில் விஐபிகள், பிரபலங்கள், நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் தங்கள் காரின் பின் சீட்டில் அமர்ந்து தான் பயணம் செய்கிறார்கள். அதற்கு பின் பல காரணங்கள் புதைந்துள்ளது. அதை பற்றி இந்த செய்தியில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்

கார் என்பது உலகில் ஒரு வாகனமாக மட்டும் இல்லை. இது ஒரு அந்தஸ்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஒருவனது காரையும் அதை அவர் பராமரிக்கும் விதத்தையும் வைத்தே சமூகத்தின் அவருக்கான இடம் தேர்வு செய்யப்படுகிறது.

ஒருவர் என்ன கார் வைத்திருக்கிறார்கள், எந்த நிறுவனத்தின் காரை வைத்திருக்கிறார்கள் என்பது எல்லாம் தான் அவரது சமூக அந்தஸ்தை காட்டும். அந்த வகையில் பெரிய பெரிய விஐபிகள், செலிபிரிட்டிகள் உயர் ரக கார்களை வாங்குகின்றனர்.

இந்தியாவை பொருத்தவரை பென்ஸ், ஆடி, ஜாக்குவார், ரோல்ஸ் ராய்ஸ், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் கார்கள்கள் சமூக அந்தஸ்து நிறைந்த கார்களாக பார்க்கப்படுகிறது. இந்த கார்களை பெரிய பெரிய ஆட்கள் வாங்கியிருந்தாலும் அவர்கள் அதை ஓட்டுவதில்லை.

இதை ஓட்டுவதற்கு என டிரைவர்களை நியமிக்கின்றனர். இவ்வளவு ஏன் காசு கொடுத்து காரை வாங்கி அவர்கள் முன் சீட்டில் உட்காந்து பயணிப்பதில்லை பின் சீட்டில் தான் பெரும்பாலான நேரங்களில் உட்காருகிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது. வாருங்கள் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

பாதுகாப்பு
விஐபிகள் பயன்படுத்தும் கார்கள் பெரும்பாலும் பாதுகாப்பு நிறைந்த காராகவே இருக்கும். அந்த கார்களில் பின்புறம் தான் பாதுகாப்பு நிறைந்த பகுதியாக இருக்கும். இதனால் கார் விபத்தில் சிக்கினாலும் பின்புறம் உள்ளவர்களுக்கு ஆபத்து குறைவாக இருக்கும். இதனால் விஐபிகள் காரின் பின்சீட்டிலேயே அமர்ந்து பயணிப்பார்கள்.

ரகசியம்
பெரும்பாலும் விஐபிகள் பல ரகசியமான பைல்களையோ போன்களையோ, பயன்படுத்துவது காரின் செல்லும் போது தான் முன் சீட்டில் அமர்ந்தால் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை டிரைவர் எளிதாக பார்க்கமுடியும் என்பதால் அவர்கள் பின் சீட்டையே அதிகம் பயன்படுத்துவார்கள்.

ஓய்வு
பெரும்பாலும் அரசியல்வாதிகள், பிரபலங்கள் எல்லாம் தங்கள் நேரத்தை திட்டமிட்டு செலவு செய்பவர்கள் அவர்களுக்கான ஓய்வு நேரம் குறைவு தான். பெரும்பாலும் விஐபிகள் பயணத்தின் போது சற்று ஓய்வு எடுக்க விரும்புவார்கள் அதற்கு பின்புற சீட் தான் வசதியாக இருக்கும். மேலும் முன் சீட்டை காட்டிலும் அதிக இட வசதியும் இருக்கும்.

டிரைவரின் கவன சிதறல்
விஐபிகள் முன் சீட்டில் இருந்தால் டிரைவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. டிரைவர் தங்கள் டிரைவிங்கில் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றால் விஐபிகள் பின் சீட்டில் தான் அமர வேண்டும். அது தான். டிரைவரை கவன சிதறலில் இருந்து பாதுகாத்து விபத்தை தவிர்க்க வைக்கும்.

இறங்கி செல்ல/ தப்பிக்க வசதி
விஐபிகள் மற்றும் பிரபலங்கள் செல்லும் இடங்கள் எவ்வாறு இருக்கும் என கணிக்க முடியாது, சினிமா , பிரபலங்களாவோ, அரசியல் பிரபலங்களாவோ இருந்தால் காரை சுற்றி கூட்டம் வந்துவிட வாய்ப்புள்ளது.

இதனால் ஒரு புறம் கூட்டம் வந்தால் மறுபுறம் வழியாக இறங்கி செல்லவோ, அல்லது காரின் செல்லும் இடத்தின் தன்மைக்கு ஏற்ப எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம் என்ற வசதி இருப்பதால் காரின் பின்புறம் தான் விஐபிகள் அமர்ந்திருப்பார்கள்.