கண்ட்ரோல் பண்ண முடியாது... விமானங்களில் நம்மை அறியாமலேயே இந்த விஷயத்தை செய்து விடுவோம்... ஏன் தெரியுமா?
விமானங்களில் நம்மை அறியாமலேயே கண்களில் இருந்து ஏன் கண்ணீர் வருகிறது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானத்தில் பறக்கும்போது நம்மில் பலரும் 'எமோஷனல்' ஆகி விடுவார்கள். ஆண், பெண் வித்தியாசம் இன்றி இரு பாலினத்தை சேர்ந்த பலருக்கும் விமான பயணத்தின்போது திடீரென கண்ணீர் வந்து விடும். நீங்கள் விமானத்தில் பயணம் செய்திருந்தால், ஒரு சில பயணிகளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதை பார்த்திருக்கலாம்.

அல்லது உங்களுக்கே கூட உங்களை அறியாமல் கண்ணீர் வந்திருக்கலாம். விமான பயணத்தின்போது ஏன் இப்படி நடக்கிறது? என்ற சந்தேகம் நம்மில் அனைவருக்குமே இருக்கிறது. எனவே விமானத்தில் பயணம் செய்யும்போது நம் கண்களில் இருந்து ஏன் கண்ணீர் வடிகிறது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

விமான பயணத்துடன் தொடர்புடைய பல்வேறு காரணிகள் உளவியல் ரீதியாக நம்மை பாதித்து விடுகின்றன. எனவேதான் நம்மை அறியாமலேயே நம் கண்களில் இருந்து கண்ணீர் வடிகிறது. விமானம் அதிக உயரத்தில் பறக்கும்போது கேபினில் ஆக்ஸிஜனின் (Oxygen) அளவு குறைந்து விடும். இது நம் உடலில் நீரிழப்பு (Dehydration) ஏற்பட காரணமாகிறது.

உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் நாம் சோர்வடைந்து விடுவோம். இதனால் சோகமான உணர்வு ஏற்படுவதுடன், நம் கண்களில் இருந்து கண்ணீரும் வரலாம். ஆனால் விமான பயணத்தின்போது நாம் கண்ணீர் சிந்துவதற்கு பின்னால் இன்னும் பல்வேறு காரணங்கள் உள்ளன. விமான பயணத்திற்கும், கண்ணீருக்கும் இடையே இருக்கக்கூடிய தொடர்பிற்கு மற்றொரு முக்கியமான காரணம் இடம் மற்றும் சௌகரியம்.

விமான பயணத்தின்போது உடல் ரீதியாக நமக்கு அசௌகரியங்கள் ஏற்படும். நெருக்கடியான இருக்கைகளில் அமர்ந்துதான் நாம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். குறிப்பாக எகானமி வகுப்பில் நடு இருக்கையில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் மிகவும் அசௌகரியமாக உணரக்கூடும். ஏனென்றால் பயணிகளுக்கு இடையில் போதுமான அளவிற்கு இடவசதி இருக்காது.

அத்துடன் சுதந்திரமும் பாதிக்கப்படும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து உளவியல் ரீதியாக நம் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகின்றன. ஆனால் விமானத்தின் முதல் வகுப்பில் அமர்ந்து பயணம் செய்யக்கூடியவர்கள் அழுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனெனில் அவர்களுக்கு போதுமான இடவசதியும், சுதந்திரமும் கிடைக்கும்.

அதேபோன்று விமானத்தில் பயணம் செய்யும்போது ஒரு சிலருக்கு படபடப்பு ஏற்படும். இதுவும் அழுகை வர காரணமாகிறது. அத்துடன் விமானத்தில் ஏறியதும் நீங்கள் கேட்கும் வழக்கத்திற்கு மாறான சத்தங்களும் அழுகையை ஏற்படுத்துகின்றன. இன்ஜின் சத்தம், பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகள் ஆகியவற்றை இதற்கு உதாரணங்களாக கூற முடியும்.

இந்த வித்தியாசமான சத்தங்கள் நம் மனதில் அச்ச உணர்வை தூண்டி, அழுகைக்கு காரணமாகின்றன. அதுவும் இல்லாமல் பைலட் யார்? என்பதே நமக்கு தெரியாது. முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவரின் கையில்தான் நம் வாழ்க்கை அடங்கியுள்து என்ற உணர்வும் அழுகையை ஏற்படுத்தி விடும். அத்துடன் வேறொரு வகையிலான மன அழுத்தமும் நம் அழுகைக்கு காரணமாகிறது.

விமான பயணத்திற்கு முன்னதாக தேவையான அனைத்து பொருட்களையும் நீங்கள் கவனமாக 'பேக்' செய்ய வேண்டும். இதன்பிறகு போதுமான நேரத்தை ஒதுக்கி, சரியான சமயத்தில் விமானத்தை பிடிக்க விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். இதற்கு இடையில் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்னைகளை சமாளிக்க வேண்டியிருக்கலாம்.

இதற்கு பிறகு விமான நிலையத்தில் பாதுகாப்பு கெடுபிடிகளை கடக்க வேண்டியிருக்கும். இதற்கு பிறகு இறுதியாகதான் விமானத்தில் ஏற முடியும். நீங்கள் இருக்கையில் அமரும்போது மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பீர்கள். அதற்கு பிறகு நாங்கள் மேலே கூறியுள்ள பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே விமானத்தில் பயணம் செய்யும் நாள் ஒட்டுமொத்தத்தில் நமக்கு மிகுந்த மன உளைச்சலை உருவாக்க கூடியது. இந்த மன அழுத்தமும் கண்ணீருக்கு காரணமாகிறது. மன அழுத்தத்தில் இருக்கும்போது ஒரு சிலர் அதிகமாக சாப்பிடுவார்கள். ஒரு சிலர் அதிகமாக குடிப்பார்கள். இன்னும் ஒரு சிலரே அழுது விடுவார்கள். விமானத்தில் நாம் கண்ணீர் சிந்துவதற்கு இவையே மிகவும் முக்கியமான காரணங்கள்.


Click it and Unblock the Notifications








