ஆம்புலன்ஸ் அவசர அழைப்பு எண்ணாக ஏன் 108 பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? பிரம்மிப்பில் உறைய வைக்கும் 4 காரணங்கள்!

ஆம்புலன்ஸ் அவசர அழைப்பு எண்ணாக ஏன் 108 பயன்படுத்தப்படுகிறது? என்பதற்கான 4 முக்கிய காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆம்புலன்ஸ் அவசர அழைப்பு எண்ணாக ஏன் 108 பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? பிரம்மிப்பில் உறைய வைக்கும் 4 காரணங்கள்!

இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கான அவசர அழைப்பு எண் 108 என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அவசர அழைப்பு எண்ணாக 108 வைக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம்? என்பது பலருக்கும் தெரியாது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஆம்புலன்ஸ் அவசர அழைப்பு எண்ணாக ஏன் 108 பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? பிரம்மிப்பில் உறைய வைக்கும் 4 காரணங்கள்!

சூரியன், நிலா, பூமி!

பூமத்திய ரேகையில் பூமியின் விட்டம் 7,926 மைல்கள். ஆனால் சூரியனின் விட்டம் இதை காட்டிலும் 108 மடங்கு அதிகம். சூரியனின் விட்டம் 8,56,008 மைல்கள் ஆகும். அதே நேரத்தில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவு சுமார் 9,24,48,864 மைல்கள். சூரியனின் விட்டத்தை விட இது 108 மடங்கு அதிகமென்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்புலன்ஸ் அவசர அழைப்பு எண்ணாக ஏன் 108 பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? பிரம்மிப்பில் உறைய வைக்கும் 4 காரணங்கள்!

அதே நேரத்தில் பூமியின் துணைக்கோளான நிலாவின் விட்டம் 2,180 மைல்கள் ஆகும். பூமிக்கும், நிலாவிற்கும் இடையேயான தொலைவு 2,35,440 மைல்கள் ஆகும். நிலாவின் விட்டத்தை காட்டிலும் இது 108 மடங்கு அதிகம் என்பது நிச்சயமாக உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக இருக்கும். இந்த கணக்கீடுகள் எல்லாம் சேர்ந்து 108-ஐ விசேஷம் வாய்ந்த எண்ணாக மாற்றியுள்ளன.

ஆம்புலன்ஸ் அவசர அழைப்பு எண்ணாக ஏன் 108 பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? பிரம்மிப்பில் உறைய வைக்கும் 4 காரணங்கள்!

நமது கேலக்ஸியில் சூரியன், நிலா மற்றும் பூமி ஆகியவையே வாழ்க்கையின் உண்மையான ஆதாரங்களாக கருதப்படுகின்றன. இதன் காரணமாகதான் இக்கட்டான நேரங்களில் நோயாளிகளின் உயிரை காப்பாற்றும் ஆம்புலன்ஸ்களுக்கான அவசர அழைப்பு எண்ணாக 108 தேர்வு செய்யப்பட்டதாக விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

ஆம்புலன்ஸ் அவசர அழைப்பு எண்ணாக ஏன் 108 பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? பிரம்மிப்பில் உறைய வைக்கும் 4 காரணங்கள்!

இந்து மத பாரம்பரியம்!

இந்து மதத்தில் பயன்படுத்தப்படும் ஜெப மாலையில் 108 மணிகள் இருக்கும். அத்துடன் இந்து மத வழக்கப்படி மந்திரங்களை 108 முறை உச்சரிப்பார்கள். மந்திரங்களை உச்சரிக்கும்போது, ஜெப மாலையில் இருக்கும் மணிகளை எண்ணி கொண்டே இருப்பார்கள். இதன் காரணமாகவும் ஆம்புலன்ஸ்களுக்கான அவசர அழைப்பு எண்ணாக 108-ஐ வைத்திருப்பதாக கூறுகின்றனர்.

ஆம்புலன்ஸ் அவசர அழைப்பு எண்ணாக ஏன் 108 பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? பிரம்மிப்பில் உறைய வைக்கும் 4 காரணங்கள்!

இங்கே மற்றொரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். இந்து மதத்தில் மட்டுமல்லாது இன்னும் ஏராளமான மதங்களிலும் ஜெப மாலைகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் 108 மட்டுமல்லாது, வேறு ஏதாவது ஒரு எண்ணிக்கையிலும் கூட ஜெப மாலைகளில் மணிகள் இருக்கலாம். ஆனால் 108 மணிகள்தான் பொதுவாக பயன்படுத்தப்படுவது ஆகும்.

ஆம்புலன்ஸ் அவசர அழைப்பு எண்ணாக ஏன் 108 பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? பிரம்மிப்பில் உறைய வைக்கும் 4 காரணங்கள்!

உளவியல்!

நெருக்கடியான சமயங்களின்போது ஒருவர் எளிதாக நினைவில் வைத்து கொள்ளக்கூடிய எண்ணாகவும் 108 உள்ளது. நாம் டயல்-பேடை பார்க்கும்போது நமது கண்கள் தானாகவே இடது பக்கம் உள்ள முதல் எண்ணுக்கு (1) செல்லும். இதன்பின் படிப்படியாக கீழே (0) செல்லும். அதன்பின்னர் சற்றே மேலே நகரும் (8). இந்த உளவியல் காரணமாகவும், அவசர அழைப்பு எண்ணாக 108 உள்ளது என தெரிவிக்கின்றனர்.

ஆம்புலன்ஸ் அவசர அழைப்பு எண்ணாக ஏன் 108 பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? பிரம்மிப்பில் உறைய வைக்கும் 4 காரணங்கள்!

இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்!

மொத்தம் 108 உணர்வுகள் இருப்பதாக ஒரு சிலர் தெரிவிக்கின்றனர். இதில், 36 உணர்வுகள் கடந்த காலத்துடன் தொடர்புடையது எனவும், 36 உணர்வுகள் நிகழ் காலத்துடன் தொடர்புடையது எனவும், 36 உணர்வுகள் எதிர் காலத்துடன் தொடர்புடையது எனவும் தெரிவிக்கின்றனர். ஆக மொத்தம் 108 உணர்வுகள் இருப்பதாகவும், இதன் காரணமாகவும் அவசர அழைப்பு எண்ணாக 108 பயன்படுத்தப்படுகிறது எனவும் கூறுகிறார்கள்.

ஆம்புலன்ஸ் அவசர அழைப்பு எண்ணாக ஏன் 108 பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? பிரம்மிப்பில் உறைய வைக்கும் 4 காரணங்கள்!

நாங்கள் இங்கே கூறியுள்ள கருத்துக்கள் விவாதத்திற்கு உரியவைதான். மேற்கண்ட காரணங்களால்தான், 108 அவசர அழைப்பு எண்ணாக ஆம்புலன்ஸ்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்று பொதுவாக நம்பப்படுகிறது. உங்களுக்கு மாற்று கருத்துக்கள் ஏதேனும் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why We Use 108 As Emergency Number For Ambulance? Important Reasons. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X