கார் வாங்கும் இந்தியர்கள் இந்த நிறத்தை அதிகம் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

Written By:

கார் வாங்கும் பெரும்பாலான மக்கள் குறிப்பாக எந்த காரணத்திற்காக வெள்ளை நிறத்தை அதிகம் தேந்தெடுக்கின்றனர் என்பது குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

கார் வாங்குபவர்கள் இந்த நிறத்தை அதிகம் விரும்ப என்ன காரணம்?

சொகுசுக் காராக இருந்தாலும் சரி, சாதாரண காராக இருந்தாலும் சரி, எந்த வகையான கார் வாங்குபவர்களும் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது காரின் நிறத்திற்கு மட்டுமே.

கார் வாங்குபவர்கள் இந்த நிறத்தை அதிகம் விரும்ப என்ன காரணம்?

கார் வாங்கும்போது கலரை தேர்வு செய்வது மிக முக்கியமான விஷயம். பொதுவாக ராசி, பராமரிப்புக்கு எளிது என அனைத்து விஷயங்களையும் பார்த்துத்தான் காரின் கலரை தேர்வு செய்கின்றனர்.

கார் வாங்குபவர்கள் இந்த நிறத்தை அதிகம் விரும்ப என்ன காரணம்?

கார் வாங்க விரும்புபவர்கள் பலருக்கும் காரில் உள்ள சிறப்பு அம்சங்கள் உள்ளிட்டவற்றைக் காட்டிலும் காரின் நிறமே பிரதானமாகத் தோன்றும். சில சமயம் எந்த கார் வாங்கினாலும் பரவாயில்லை ஆனால் இந்த நிறத்தில் தான் கார் வாங்க வேண்டும் என குடும்பத்திற்குள் ஒரு கலவரமே வெடிக்கும் அளவுக்கு காரின் நிறம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

கார் வாங்குபவர்கள் இந்த நிறத்தை அதிகம் விரும்ப என்ன காரணம்?

ட்ரூம் ஆன்லைன் என்ற தனியார் நிறுவனத்தார் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கையின்படி கார் வாங்கும் இந்திய வாடிக்கையாளர்கள் அதிகம் தேர்ந்தெடுப்பது வெள்ளை நிறத்தை தான் என்பது தெரியவந்திருக்கிறது. ஹேட்ச்பேக், எஸ்யூவி, செடன், சொகுசுக் கார் என அது எந்த வகையாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் நிறம் வெள்ளை மட்டுமே.

கார் வாங்குபவர்கள் இந்த நிறத்தை அதிகம் விரும்ப என்ன காரணம்?

அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் விற்பனையாகும் ஆகும் கார்களில் வெள்ளை நிறம் 46 சதவீதமும், சில்வர் நிறம் 20 % மற்றும் சாம்பல் நிறம் 11 சதவீதமும் பங்களிப்பை அளித்து முதல் மூன்று கலர் தேர்வாக உள்ளது.

கார் வாங்குபவர்கள் இந்த நிறத்தை அதிகம் விரும்ப என்ன காரணம்?

வெள்ளை நிறத்தை இவ்வளவு அதிகமான வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க சில முக்கிய காரணங்கள் உள்ளது. அவை கீழ்க்கண்டவாறு...

 ஏசி வீணாகாது

ஏசி வீணாகாது

கோடைகாலங்களில் வெள்ளை நிற கார்களில் வெயில் ஓரளவு எதிரொலித்து விடும் என்பதால் ஏசி போட்டால் குளிர்ச்சி நன்றாக இருக்கும்.

நிறம் மங்காது

நிறம் மங்காது

இந்தியா போன்று அதிக வெயில் உள்ள நாட்டில் காரின் நிறம் விரைவிலேயே மங்கிவிடும், சிவப்பு, நீலம், போன்ற அடர் நிறங்கள் அதிகம் பாதிப்படைகின்றன. வெள்ளை நிறம் வெயிலினால் அதிகம் மங்குவதில்லை.

இரவில் பாதுகாப்பானது

இரவில் பாதுகாப்பானது

இரவுப் பயணங்கள் செல்லும்போது வெள்ளை நிற கார்கள் கூடுதல் பாதுகாப்பை வழங்கும். குறிப்பாக, சாலை ஓரத்தில் நிறுத்தினாலும் கூட தூரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிற கார்கள் நிற்பது நன்றாக தெரியும்.

ரீசேல் வேல்யூ

ரீசேல் வேல்யூ

இதுதவிர, பயன்படுத்தப்பட்ட கார் மார்க்கெட்டிலும் வெள்ளை நிற கார்களுக்கு கூடுதல் மதிப்பு இருப்பதாக சமீபத்திய புள்ளிவிபரமும் தெரிவிக்கிறது.

எளிதான பராமரிப்பு

எளிதான பராமரிப்பு

வெள்ளை நிற கார்களை பராமரிப்பது மற்ற நிறங்களைக் காட்டிலும் மிக எளிது என்பதும் இந்த நிறத்தை தேர்ந்தெடுக்க முக்கிய காரணங்களுள் ஒன்றாகும்.

கருப்பு நிறத்தை தவிர்க்கலாம்

கருப்பு நிறத்தை தவிர்க்கலாம்

சிலர் கருப்பு நிறத்தை விரும்பி வாங்குகின்றனர். அதில் தவறில்லை என்றாலும், வெள்ளை நிறம் மற்றும் வெளிர் நிற கார்களில் இருக்கும் இந்த பாதுகாப்பு வசதிகளை கருத்தில் கொள்வது அவசியம். கருப்பு நிற கார்களை தவிர்ப்பது நலம்.

உலக அளவில் ஹீரோ வெள்ளை கலர்

உலக அளவில் ஹீரோ வெள்ளை கலர்

முன்னதாக வெளிவந்த சர்வதேச ஆய்வறிக்கையின் அடிப்படையில் வெள்ளை நிற கார்கள் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளிலும் அதிகமானவர்களால் விரும்பப்படுகிறது என்பதும் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about Why indian's choose this car color.
Story first published: Saturday, May 27, 2017, 13:26 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark