மங்களகரமான மஞ்சள் நிறத்தை விமானத்தின் உள்ளே பயன்படுத்த மாட்டாங்க! இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா?
விமானங்களில் மஞ்சள் நிறத்தை அதன் உட்கட்டமைப்பு பகுதிகளில் பயன்படுத்தப்படுத்த மாட்டார்கள். இதற்குப் பின்னாடி மிகப்பெரிய அறிவியல் காரணம் ஒன்று இருக்கிறது. இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.

நாம் அனைவரும் வாழ்நாளில் ஒரு நாளாவது விமானத்தில் பயணித்திருப்போம். அல்லது பயணிக்கும் எண்ணத்தில் இருப்போம். இப்படியாக நாம் பயணம் செய்திருந்தாலும், செய்யாவிட்டாலும், விமானம் குறித்த ஆச்சரியமும் அதிசயமும் நாம் மனதில் எப்பொழுதும் இருந்த கொண்டே இருக்கும். விமானம் என்பது நாம் வழக்கமாகப் பார்க்கும் போது அதில் நடக்கும் பல விஷயங்கள் நமக்குத் தெரியாது. ஆனால் இந்த விஷயத்தை இதற்காகத் தான் செய்தார்கள் எனத் தெரிந்தால் நமக்கே ஆச்சரியமாக இருக்கும் அப்படியான ஒரு விஷயத்தைத் தான் இங்கே காணப்போகிறோம்.

நாம் விமானத்தில் பயணிக்கும் போது விமானத்திற்குள் சீட்கள், பொருட்கள் வைக்கும் இடம் என எல்லாம் ஒரே விதமான தீமில் உருவாக்கியிருப்பார்கள். அது எந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருப்பார்கள். இந்த நிறத்தைத் தேர்வு செய்யும் போது அதில் மஞ்சம் நிறம் கண்டிப்பாக இருக்காதவாறு பார்த்துக்கொள்வார்கள். இதற்குப் பின்னால் ஒரு முக்கியமான காரணம் ஒன்றும் இருக்கிறது.

அறிவியல் ரீதியாக மஞ்சள் நிறம் கண்ணைப் பறிக்கும் நிறம், இது மனிதர்கள் மனதிற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிறம். எங்கிருந்து பார்த்தாலும் மஞ்சள் நிறம் துண்டாகத் தெரியும். இந்த காரணத்திற்காகத் தான் இந்தியாவில் ஜேசிபி, லாரிகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் எல்லாம் மஞ்சள் நிறத்தில் கொடுக்கப்படுகிறது. இதனால் சாலையில் அந்த வாகனம் சென்றால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு குறிப்பிட்ட வாகனத்தை எளிதாக அடையாளம் காண முடியும். இதனால் மற்ற கவன ஓட்டிகள் கொஞ்சம் உஷாராக இருப்பார்கள்.

இப்படிப்பட்ட மஞ்சள் நிறத்தை விமானத்தின் உட்புறத்திலும் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு முக்கியமான காரணமும். என்னதான் கண்களைப் பறிக்கும்படி இருந்தாலும் விமானத்திற்குள் அது எதிர்மறையான விஷயங்களை ஏற்படுத்தி விடும். விமானம் என்பது நடு வானில் பறக்கும் போது எப்பொழுது வேண்டுமானாலும் எமர்ஜென்ஸி நிலை ஏற்படலாம்.

ஒரு வேளை விமானம் விபத்தில் சிக்கிவிட்டால் விமானத்தில் உள்ளே இருக்கும் பயணிகள் உள்ளே உள்ள சிலபொருட்கள்/ இடங்களைக் கண்டுபிடித்து அதை வைத்து அவர்கள் அங்கிருந்து தப்பிக்க வேண்டும். உதாரணமாக எமர்ஜென்ஸி எக்ஸிட் பகுதியைச் சொல்லலாம். அந்த பகுதி வழியாக மக்கள் விமானம் விபத்தில் அல்லது சிக்கலில் மாட்டினால் அதன் மூலம் தப்பிச் செல்ல முடியும்.

இதே போல விமானத்தின் அவசரக் காலத்தில் வரும் ஆக்ஸிஜன் மாஸ்கும் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும். அவசரக் காலத்தில் விமானிகள் பயணிகளுக்கு உதவ மஞ்சள் நிறத்தில் உள்ள மாஸ்கை மாட்டிக்கொள்ளுங்கள் என்று தான் உத்தரவிடுவார்கள். அப்பொழுதுதான் சரியாக கண்தெரியாதவர்களுக்கும் எளிதாக அதைக் கண்டுபிடித்து மாட்டிக்கொள்ள முடியும். ஆனால் விமானத்தின் உட்கட்டமைப்பு நிறமும் மஞ்சளில் இருந்தால் விஷன் ப்ரீச் ஏற்படும். இதனால் பயணிகள் திணறுவார்கள்.

இந்நிலையில் இப்படியாக அவசரக் கால பொருட்கள் மற்றும் இடங்கள் கண்களுக்கு பளிச் எனத் தெரிய வேண்டும் என்பதால் விமானத்தின் உட்புற கட்டமைப்பை வடிவமைக்கும் போது மஞ்சள் நிறம் அதில் இல்லாதவாறு பார்த்துக்கொள்வார்கள். மஞ்சள் நிறம் இருந்தால் மக்களுக்கு அவசரக் கால பொருட்கள்/ இடங்கள் இருக்கும் பகுதி எளிதாகக் கண்களுக்குத் தெரியாது. மக்கள் நிறமே அவர்களின் கண்களைப் பறிக்கும் விதத்தில் இருக்கும் என்பதால் அதைத் தவிர்க்கின்றனர்.

மஞ்சள் நிறத்திலிருந்தால் விமானம் ஆபத்தில் சிக்கும் போது பயணிகள் மத்தியில் ஏற்படும் குழப்பத்தால் சரியான வழியை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாமல் அவர்களின் உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் பெரும்பாலான விமான நிறுவனங்கள் மஞ்சள் நிறத்தை தங்கள் உட்கட்டமைப்பில் தவிர்த்து விடுவார்கள்.

ஆனால் இது எல்லா விமான நிறுவனங்களும் இல்லை. ரெயன் ஏர் என்ற விமான நிறுவனம் தங்கள் உட்கட்டமைப்பில் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தினர். ஆனால் தற்போது அந்நிறுவனமும் மஞ்சள் நிறத்தை மாற்றிவிட்டனர். அந்நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் பலர் இந்த கோரிக்கையை வைத்ததன் பெயரில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தற்போது போது உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்கில் உட்கட்டமைப்பில் பெரும்பான்மையான நிறம் மஞ்சள் நிறமாகத் தேர்வு செய்வதில்லை.

இந்த விதி விமானத்தின் உட்கட்டமைப்பு பகுதிக்கு மட்டுமே விமானத்தின் வெளிப்புறத்தில் மஞ்சள் நிறம் கொண்ட விமானங்கள் இருக்கிறது. இது முழுவதும் விமான நிறுவனங்கள் செய்யும் தேர்வு நிறம் தான். வெளிப்புறத்தில் மஞ்சள் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் இந்த தேர்வை சில விமான நிறுவனங்கள் செய்துள்ளன. இது குறித்த உங்கள் தகவல்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








