இந்த விஷயம் தெரியாம விமானத்துல பாத்ரூம் போயிராதீங்க! இதுக்கு பின்னால இவ்ளோ பிரச்னை இருக்கா! நல்லவேள சொன்னீங்க
விமானம் டேக்-ஆஃப் (Take-off) ஆகும்போதும், லேண்டிங் (Landing) ஆகும்போதும், கழிவறையை பயன்படுத்தலாமா? பயன்படுத்த கூடாதா? என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது. இந்த சந்தேகம் இருக்க கூடியவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. வாருங்கள். இனி நேரடியாக செய்திக்குள் செல்லலாம்.
விமானம் டேக்-ஆஃப் ஆகும்போதும், லேண்டிங் ஆகும்போதும், பயணிகள் அனைவரும் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகிய இரண்டும்தான் விமான பயணத்தின் மிக முக்கியமான மற்றும் ஆபத்தான கட்டங்கள் ஆகும். எனவே இந்த சமயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானம் டேக்-ஆஃப் ஆகும்போதும், லேண்டிங் ஆகும்போதும், சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதை குறிக்கும் விளக்கு எரியும். இந்த எச்சரிக்கை குறியீடு உங்கள் தலைக்கு மேலே இருக்கும். இந்த விளக்கு எரிகிறது என்றால், நீங்கள் இருக்கையில்தான் அமர்ந்திருக்க வேண்டும். இருக்கையை விட்டு எழுந்து நடமாட கூடாது.
எனவே சீட் பெல்ட் எச்சரிக்கை விளக்கு எரியும் நேரத்தில் கழிவறையையும் பயன்படுத்த கூடாது. கழிவறையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த குறியீடு குறிக்கிறது. எனவே விமானம் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகும் சமயங்களில் கழிவறையை பயன்படுத்துவதை தவிர்ப்பது அனைவருக்கும் நல்லது.

இதை மீறி, விமானம் டேக்-ஆஃப் ஆகும்போதும், லேண்டிங் ஆகும்போதும் நீங்கள் கழிவறையை பயன்படுத்த முயற்சி செய்தால், கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடலாம். மிகவும் முக்கியமான நேரத்தில் ஒரு பயணி, இருக்கையில் இருந்து எழுவது என்பது, டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் போன்ற தருணங்களில் கேபின் செயல்பாடுகளை சீர்குலைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதுதான் இதற்கு காரணம்.
அதாவது அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக அமர்ந்திருப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் விமான பணிப்பெண்களுக்கு உள்ளது. அப்படி இருக்கும்போது முக்கியமான நேரத்தில் ஒரு பயணியின் தேவையற்ற இயக்கம், விமான பணிப்பெண்கள், அவர்களது கடமைகளை திறம்பட செய்வதற்கான திறனை தடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அத்துடன் டேக்-ஆஃப் ஆகும்போதும், லேண்டிங் ஆகும்போதும் கழிவறையை பயன்படுத்துவது மற்ற பயணிகளுக்கு பாதுகாப்பு தொடர்பான கவலைகளை ஏற்படுத்தலாம். மேலும் எதிர்பாராத விதமாக அவசரநிலை ஏற்பட்டால், உங்கள் இருக்கையில் அமராமல் இருப்பது, அதாவது எழுந்து நடமாடி கொண்டிருப்பது காயத்தின் அபாயத்தை அதிகரிக்கும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
சரி, இந்த பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என நீங்கள் கேட்பது புரிகிறது. விமானத்தில் ஏறுவதற்கு முன்பே கழிவறையை உபயோகித்து விட்டு வருவது நல்லது. அல்லது நீங்கள் பயணம் செய்யும் விமானம் பாதுகாப்பான உயரத்தை எட்டும் வரை காத்திருப்பது சிறந்தது.
அதாவது விமானம் டேக்-ஆஃப் ஆவதற்கு முன்பாகவும், லேண்டிங் செய்யப்படுவதற்கு முன்பாகவும், முக்கியமான பாதுகாப்பு அறிவுறுத்தல்களை விமான பணிப்பெண்கள் பயணிகளுக்கு வழங்குவார்கள். அதன்பின் பாதுகாப்பான உயரத்தை அடைந்த பின் அல்லது முழுவதுமாக தரையிறங்கி பின், இனி நீங்கள் எழுந்து நடமாடலாம் என அறிவிப்பார்கள். இந்த அறிவிப்பு வெளியான பின்பு, கழிவறைக்கு செல்வது நன்மை பயக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானத்தில் ஏறுவதற்கு முன்பே கழிவறையை பயன்படுத்தி விட்டு வருவதுதான் சிறந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால், விமானம் டேக்-ஆஃப் ஆகும்போதும், லேண்டிங் ஆகும்போதும் கழிவறையை பயன்படுத்தியாக வேண்டிய சூழல் ஏற்பட்டால், நீங்கள் விமான பணிப்பெண்களின் உதவியை தைரியமாக நாடலாம். கூச்சப்பட வேண்டாம்.
பாதுகாப்பை ஆராய்ந்து விட்டு, வாய்ப்பு இருந்தால், அப்போதே அவர்கள் உங்களை கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கலாம். அல்லது சரியான நேரம் வரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொறுப்பு, விமான பணிப்பெண்களுக்கு உள்ளது என்பதால், அவர்களின் அறிவுறுத்தல்களை மதிக்கவும்.


Click it and Unblock the Notifications









