இந்த கதையை கேட்டா கார்ல போகும் போது இனி ஜீன்ஸ் பேன்ட் போட்டே போகமாட்டீங்க...

நீண்ட தூரம் பயணம் செய்யும் போது நாம் அணிந்து செல்லும் ஆடை மிகவும் முக்கியம். ஆடைசரியில்லை என்றால் அது நம் உயிரைக்கூட எடுத்து விடும். இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.

இந்த கதையை கேட்டா கார்ல போகும் போது இனி ஜீன்ஸ் பேன்ட் போட்டே போகமாட்டீங்க . . .

நீண்ட தூரப் பயணம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது? அதுவும் சொந்த காரில் நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டும் என்றால் குஷியாகிவிடுவோம். ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை நமக்குத் தரும். அப்படியாக ஒவ்வொரு அனுபவமும் நம்மைச் சந்தோஷப்படுத்தும். நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்றால் நாம் அதற்காக முன்னரே தயாராகி விடுவோம். கொண்டு செல்வதற்கான ஸ்நாக்ஸ், பயணத்தின் போது நாம் கேட்க வேண்டிய பாடல்கள் அடங்கிய ப்ளே லிஸ்ட், எடுத்துச் செல்ல தேவையான லக்கேஜ் என எல்லாவற்றையும் தயார் செய்து விடுவோம்.

இந்த கதையை கேட்டா கார்ல போகும் போது இனி ஜீன்ஸ் பேன்ட் போட்டே போகமாட்டீங்க . . .

ஆனால் பலர் பெரும்பாலும் இந்த நீண்ட நேரப் பயணத்தின் போது அவர்கள் கவனிக்காதது உடையைத் தான். தான் கிளம்பும் போது அழகாகக் கிளம்ப வேண்டும் என நினைத்துக்கொண்டு டைட்டான ஆடைகளை அணிந்து கொண்டு கிளம்புவார்கள். ஆனால் பயணத்தின் போது பயணத்திற்கு ஏற்ற ஆடையை அணிவதுதான் சிறந்தது. பயணத்தின் போது ஆடைகள் எவ்வளவு முக்கியமான என்பதை இந்த பதிவில் முழுமையான ஒரு உதாரண சம்பவத்துடன் காணப்போகிறோம்.

இந்த கதையை கேட்டா கார்ல போகும் போது இனி ஜீன்ஸ் பேன்ட் போட்டே போகமாட்டீங்க . . .

சமீபத்தில் ஒரு 30 வயது இளைஞர் சவ்ரப் சர்மா, இவர் தொழிலதிபராக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது சொந்த காரில் டில்லியிலிருந்து ரிஷிகேஷிற்கு சென்று வர முடிவு செய்தார். இந்த பயணத்தையும் அவருக்கு பிடித்த மாறி எல்லாவற்றையும் முன்னேற்பாடாகச் சென்று சென்று திருப்பினார். அவர் திருப்பிய பிறகு தான் அவர் செய்த பயணத்திலிருந்த ஆபத்தே தெரியத் துவங்கியது. அவர் பயணத்தை முடித்துவிட்டு வந்த பின்பு அவரது காலில் சிறிய கட்டி அல்லது வீக்கம் போல வந்துள்ளது.

இந்த கதையை கேட்டா கார்ல போகும் போது இனி ஜீன்ஸ் பேன்ட் போட்டே போகமாட்டீங்க . . .

இதையடுத்து அவர் டாக்டரை அணுகினார். தனக்கு என்ன ஆனது எனத் தெரிந்து கொள்ள விரும்பினார். டாக்டர்கள் இது குறித்து ஆய்வு செய்த பின் இது டீப் வெயின் டிரம்போஸிஸ் எனக் கூறினர். அப்படி என்றால் இந்த வீக்கம் நேரடியாக நுரையீரலைப் பாதித்து ரத்த ஓட்டத்தைத் தடுத்தது. இதனால் அவருக்கு உடலுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் ஆர்டரீஸில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் பாதிப்பில் விளைவாக ரத்த ஓட்டம் பாதித்தது. இதனால் இவர் மூளை, இதயம் எல்லாம் பாதிக்கப்படத் துவங்கியது.

இந்த கதையை கேட்டா கார்ல போகும் போது இனி ஜீன்ஸ் பேன்ட் போட்டே போகமாட்டீங்க . . .

சவ்ரப் சர்மாவிற்கு இது குறித்து முதலில் குறித்துத் தெரியவில்லை. பின்னர் இவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம் ஏற்படும் போது தான் அவர் மருத்துவமனையை நோக்கி ஓடினார்.

இந்த கதையை கேட்டா கார்ல போகும் போது இனி ஜீன்ஸ் பேன்ட் போட்டே போகமாட்டீங்க . . .

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது முதலில் இவருக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டுள்ளது என்று நம்பினர். அதற்காக இவருக்கு 45 நிமிடங்கள் சிபிஆர் கொடுத்தனர். இருந்தாலும் இவர் மீண்டு வரவில்லை. சிபிஆர் நடக்கும் போதே இவருக்கு இதயத் துடிப்பை வைத்து எக்கோ டயகிராம் சோதனையைச் செய்தனர்.

இந்த கதையை கேட்டா கார்ல போகும் போது இனி ஜீன்ஸ் பேன்ட் போட்டே போகமாட்டீங்க . . .

சவ்ரப்பிற்கு இதற்கு முன்னர் இதயம் சம்மந்தப்பட்ட எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. பின்னர் இவர் உடலை முழுமையாகச் சோதனை செ்த போது தான் பிரச்சனை இவரது இதயத்தில் இல்லை காலில் இருக்கிறது என்பது தெரியவந்தது. காலில் சவ்ரப்பிற்கு டிவிடி என்ற பிரச்சனை இருந்தை கண்டுபிடித்து இதுதான் இதய பிரச்சனைக்குக் காரணம் என்பதை அறிந்தனர். அதனால் தான் சவ்ரப் மயக்கமடைந்துள்ளார். என்பதைக் கண்டறிந்தனர்.

இந்த கதையை கேட்டா கார்ல போகும் போது இனி ஜீன்ஸ் பேன்ட் போட்டே போகமாட்டீங்க . . .

பின்னர் அறுவை சிகிச்சை மூலம் காலிலிருந்த பிரச்சனையைக் கண்டறிந்து அதைச் சரி செய்தனர். அதன்பின்னர் தான் அவருக்கு இதயத் துடிப்பு சீராக மாறியது. பின்னர் உடல் முழுவதும் ஆக்ஸிஜனும் சீராக பரவியது.

இந்த கதையை கேட்டா கார்ல போகும் போது இனி ஜீன்ஸ் பேன்ட் போட்டே போகமாட்டீங்க . . .

அவருக்குக் காலில் டிவிடி எப்படி உருவானது என டாக்டர்கள் விசாரித்தனர். எந்த சம்பவத்திற்குப் பிறகு இப்படியானது என விசாரிக்கும் போது தான் மிகப்பெரிய அதிர்ச்சிகரமான விஷயமே வெளியில் வந்தது.

இந்த கதையை கேட்டா கார்ல போகும் போது இனி ஜீன்ஸ் பேன்ட் போட்டே போகமாட்டீங்க . . .

சவ்ரப் சர்மா ஒரு ஆட்டோமெட்டிக் காரை வைத்திருக்கிறார். அவர் அதில் தான் டில்லியிலிருந்து ரிஷிகேஷிற்கு தானே ஓட்டி சென்று வந்துள்ளார்.இந்த பயணத்தின் போது முழுவதுமாக அவர் ஒரு டைட்டான ஜீன்ஸ் பேன்ட் ஒன்றை அணிந்திருந்தார். அந்த டைட்டான ஜீன்ஸ் பேண்ட் உடனேயே நீண்ட நேரமாக ஒரே போசிஷனில் அமர்ந்து காரை ஓட்டிக்கொண்டிருந்தார்.

இந்த கதையை கேட்டா கார்ல போகும் போது இனி ஜீன்ஸ் பேன்ட் போட்டே போகமாட்டீங்க . . .

சாதாரணமாக நீண்ட நேரம் ஒரே போசிஷனில் அமர்ந்திருந்தாலே ரத்த ஓட்டம் தடைப் படும். இதனால் தான் நீண்ட நேரப் பயணத்தின் போது குறைந்தது ஒவ்வொரு 100 கி.மீ பயணத்திற்கு ஒரு முறை காரை ஓரமாக பார்க் செய்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். அதே போலப் பயணத்தின் போது நீர்ச்சத்தும் குறையும் என்பதால் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

இந்த கதையை கேட்டா கார்ல போகும் போது இனி ஜீன்ஸ் பேன்ட் போட்டே போகமாட்டீங்க . . .

ஆனால் சவ்ரப் இதையும் மீறி நீண்ட நேரம் டைட்டான ஜீன்ஸ் பேன்ட் உடன் ஒரே போஷினல் போக 270 திருப்ப வர 270 என மொத்தம் 540 கி.மீ மீட்டர் பயணம் செய்துள்ளார்.

இந்த கதையை கேட்டா கார்ல போகும் போது இனி ஜீன்ஸ் பேன்ட் போட்டே போகமாட்டீங்க . . .

அப்பொழுது அவரது காரில் அழுத்தம் ஏற்பட்டு அந்த அழுத்தம் நரம்பில் பாதிக்கப்பட்டு அந்த பாதிப்பு, ரத்த ஓட்டத்தைப் பாதித்து இதயம் வரை இந்த பிரச்சனையைக் கொண்டு சென்று அவரது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கதையை கேட்டா கார்ல போகும் போது இனி ஜீன்ஸ் பேன்ட் போட்டே போகமாட்டீங்க . . .

அதனால் நீங்கள் நீண்ட தூரம் காரில் பயணிக்கும் நீங்கள் லூசான உங்களுக்கு வசதியான ஆடையை அணிந்து கொள்ளுங்கள் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குப் போட்டுச் செல்ல வேண்டிய ஆடைகளை கார் பயணத்திலேயே போட வேண்டாம்.

இந்த கதையை கேட்டா கார்ல போகும் போது இனி ஜீன்ஸ் பேன்ட் போட்டே போகமாட்டீங்க . . .

அதே போல நீண்ட நேரப் பயணம் என்றால் குறைந்தது 100 கி.மீ அல்லது 1.30 மணி நேரப் பயணத்திற்கு ஒரு முறை ஒரு சிறிய பிரேக் எடுத்துக்கொள்ளுங்கள் அது தான் உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்காமல் பாதுகாக்கும். அடுத்த முறை நீண்ட தூரம் பயணம் செய்யும் போது கவனமாக இருங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 5, 2022, 18:12 [IST]
English summary
Why you dont want to wear tight jeans for long travel
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+