விமானங்களில் பயணிகளை ஏன் சீட் பெல்ட் அணியச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்கள்?

விமானங்களில் சீட்பெல்ட்கள் கார்களில் உள்ள சீட் பெல்ட் போலப் பயணிகளின் உயிரைப் பாதுகாக்குமா?

Recommended Video

Kia Carens: Driving Safe Cars | 10 Standard Safety Features For A Stress-free Journey

பல ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானம் விபத்தில் சிக்கினால் சீட்பெல்ட் பயணிகளின் உயிரைக் காக்கும் எனச் சொல்வது நம்பும் படியாகவா இருக்கிறது? இப்படியான பல கேள்விகளுக்கான பதில்களைக் காணலாம் வாருங்கள்.

விமானங்களில் பயணி களை ஏன் சீட் பெல்ட் அணியச் சொல்லிக் கட்டாய ப்படுத்து கிறார்கள் . . .

நீங்கள் காரில் பயணிக்கும் போது கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். சீட்பெல்ட் அணிந்திருந்தால் தான் காரில் உள்ள ஏர்பேக்கள் எல்லாம் வேலை செய்யும் என்பது எல்லாம் நமக்குத் தெரியும். சீட் பெல்ட் அணிந்தால் தான். கார் விபத்தில் சிக்கினாலும் பயணிகள் உயிர் பிழைக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கிறது. இது எல்லாம் காரில் ஆனால் விமானங்களில் பயணித்திருக்கிறீர்களா?

விமானங்களில் பயணி களை ஏன் சீட் பெல்ட் அணியச் சொல்லிக் கட்டாய ப்படுத்து கிறார்கள் . . .

விமான பயணத்தில் ஒவ்வொரு விமானியின் சீட்டிற்கும் சீட்பெல்ட் இருக்கும். விமானத்தின் பயணத்தைத் துவங்கும் முன்பு பயணிகள் எல்லோரும் கட்டாயம் சீட் பெல்ட் அணியும்படி கேட்டுக் கொள்வார்கள். அதே போல விமானம் தரையிறங்கும் போதும் பயணிகள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இடையிடையே விமான பயணத்தின் நடுவில் விமானிகள் சீட் பெல்ட் அணியச் சொல்லி பயணிகளுக்கு அறிவுறுத்துவார்கள். இது எல்லாம் பயணிகளின் பாதுகாப்பிற்குத் தான் என்று வேறு சொல்லப்படும்.

விமானங்களில் பயணி களை ஏன் சீட் பெல்ட் அணியச் சொல்லிக் கட்டாய ப்படுத்து கிறார்கள் . . .

கார் விபத்தில் சிக்கினால் அதில் பயணிகள் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது எனச் சொன்னால் நம்ப முடிகிறது ஆனால் பல்லாயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானம் விபத்தில் சிக்கினால் அதில் உயிர் பிழைக்கத் தான் சீட் பெல்ட் அணியச் சொல்கிறார்கள் எனச் சொன்னால் கேட்கவே காமெடியாக இல்லையா? விமானம் அவ்வளவு உயரத்தில் விபத்தில் சிக்கினால் உயிர் பிழைக்க முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும் இருந்தும் ஏன் சீட் பெல்ட் அணியச் சொல்கிறார்கள்? விவரமாகக் காணலாம் வாருங்கள்

விமானங்களில் பயணி களை ஏன் சீட் பெல்ட் அணியச் சொல்லிக் கட்டாய ப்படுத்து கிறார்கள் . . .

பொதுவாக விமானங்களில் இரண்டு தருணங்களில் சீட்பெல்ட் அணிய வலியுறுத்துவார்கள் ஒன்று விமானம் கிளம்பும் போது மற்றொன்று விமானம் தரையிறங்கும் போது. இதற்கு முக்கியமான காரணம் விமானம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து ஓடு பாதைவரை செல்லும் இடத்தை டாக்ஸி வே எனக் குறிப்பிடுவார்கள். இந்த டேக்ஸி வேயில் பயணிப்பது என்பது சற்று சிரமமான விஷயம் தான்.

விமானங்களில் பயணி களை ஏன் சீட் பெல்ட் அணியச் சொல்லிக் கட்டாய ப்படுத்து கிறார்கள் . . .

இந்த நேரத்தில் விமானத்தின் றெக்கை வேறு விமானத்தில் மோத வாய்ப்பு இருக்கிறது. அப்படி மோதினால் இருண்டு விமானத்திற்குள்ளும் இருக்கும் பயணிகளுக்குப் பாதிப்பு இருக்கும் இந்த பாதிப்பின்போது பெரிய அளவில் காயம் அல்லது அடிபடாமல் இருக்க வேண்டும் என்றால் கட்டாயம் விமானத்தில் சீட் பெல்ட் போட்டிருக்க வேண்டும். விமானம் தரையிறங்கிய பின்பும் டேக்ஸி வேயில் தான் பயணிகளை இறக்கி விடும் இடத்திற்குக் கொண்டு செல்லப்படும். அப்பொழுதும் இந்த விபத்து நடக்க வாய்ப்புள்ளது. அப்பொழுது சேதாரம் அதிகம் ஆகாமல் இந்த சீட்பெல்ட் தடுக்கும்.

விமானங்களில் பயணி களை ஏன் சீட் பெல்ட் அணியச் சொல்லிக் கட்டாய ப்படுத்து கிறார்கள் . . .

இது மட்டுமல்ல விமானம் நடுவானில் பறக்கும் எதிர்பாராத விதமாக மேகக்கூட்டம் அசாதாரண வானியல் சூழ்நிலைகளுக்கும் விமானம் சிக்கம் போது விமானத்தில் டர்புலன்ஸ் ஏற்படும். இப்படி விமானம் டர்புலன்ஸ் ஏற்படும் அளவிற்குச் செல்லும் முன்பு விமானிகளுக்கு இது குறித்துத் தெரியவரும். அவர்கள் உடனடியாக பயணிகளை சீட்பெல்ட் அணியும் படி எச்சரிப்பார்கள். விமானம் டர்புலன்ஸில் சிக்கும் போது அதனால் ஏற்படும் அதிர்வுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்தும் தப்பிக்க இந்த சீட் பெல்ட் உதவுகிறது.

விமானங்களில் பயணி களை ஏன் சீட் பெல்ட் அணியச் சொல்லிக் கட்டாய ப்படுத்து கிறார்கள் . . .

டர்புலன்ஸ் என்பத சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் தன்மை கொண்டது. இதனால் விமானத்திற்குப் பாதிப்பு இருக்காது. ஆனால் இந்த நேரங்களில் நாம் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் சில நேரம் நமக்கு விமானத்தின் அதிர்வுகளால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் அந்த நேரத்தில் விமானத்தில் சீட் பெல்ட் அணிய வேண்டும். விமானத்தில் சீட்பெல்ட் அணிவது குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

விமானங்களில் பயணி களை ஏன் சீட் பெல்ட் அணியச் சொல்லிக் கட்டாய ப்படுத்து கிறார்கள் . . .

அதில் விமானத்தில் மக்களிடம் பல விதமாக சீட் பெல்ட் அணியும் பழக்கம் இருக்கிறது. சிலர் விமானம் கிளம்பும் போது சீட் பெல்ட் அணிந்துவிட்டு விமானம் மேலே டேக் ஆஃப் ஆன உடன் சீட் பெல்டை கழட்டி விடுகிறார்கள். அதன் பின்பு அறிவிப்பு வரும் போது போடுகிறார்கள். சிலர் விமானத்தில் ஏறியது முதல் விமானம் தரையிறங்கி அவர்கள் இறங்கும் வரை சீட் பெல்ட் அணிந்திருக்கிறார்கள்.

விமானங்களில் பயணி களை ஏன் சீட் பெல்ட் அணியச் சொல்லிக் கட்டாய ப்படுத்து கிறார்கள் . . .

ஆனால் பெரும்பாலான மக்கள் விமானம் ஏறியதும் அறிவிப்பு வந்த பின்பு சீட்பெல்டை மாட்டுகிறார்கள். பின்னர் அவர்கள் எழுந்து நடக்கவோ அல்லது கழிவறைகளைப் பயன்படுத்தவோ செல்லும் போது சீட் பெல்டை கழட்டுகிறார்கள். பின்னர் அவர்கள் சீட்டிற்கு வந்த பின்பு சீட் பெல்ட்களை போடுவதில்லை. மறுபடியும் அறிவிப்பு வந்த பின்பே போடுகிறார்கள் என அந்த ஆய்வு சொல்கிறது.

விமானங்களில் பயணி களை ஏன் சீட் பெல்ட் அணியச் சொல்லிக் கட்டாய ப்படுத்து கிறார்கள் . . .

இது மட்டுமல்ல விமானத்தின் சீட் பெல்ட் டிசைன் என்பது தனித்துவமானது. இதை விமானத்தில் மட்டுமே பெரும்பாலும் பார்க்க முடியும். அதனால் முதன் முறை விமானத்தில் பயணிப்பவர்களுக்கு இந்த சீட் பெல்ட் பற்றி பெரியதாகத் தெரியாது. அதனால் அவர்கள் முதன் முறை சீட் பெல்டை பயன்படுத்தும் போது திணறுகிறார்கள் எனவும் இந்த ஆய்வு சொல்கிறது. அதே போல விமானத்தில் சீட் பெல்ட் பயன்படுத்தக் கட்டாயப்படுத்துவதற்குப் பின்னால் ஒரு காரணங்கள் ஒழிந்துள்ளதாகப் புரளிகள் கிளம்பி வருகிறது.

விமானங்களில் பயணி களை ஏன் சீட் பெல்ட் அணியச் சொல்லிக் கட்டாய ப்படுத்து கிறார்கள் . . .

அதன்படி விமானத்தில் பயணிகளுக்கு சீட்பெல்டை கட்டாயப்படுத்த முக்கியமான காரணம் விமானம் விபத்தில் சிக்கினால் இறந்தவர்களை அடையாளம் கண்டுபிடிக்க அதாவது குறிப்பிட்ட சீட் இந்த பயணிக்கு ஒதுக்கப்பட்டது என அவர்களிடம் இருக்கும் பட்டியலை வைத்து விபத்து நடந்த பின்பு உடல்களை அடையாளம் காண வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எனச் சொல்கிறார்கள் இது முற்றிலும் தவறு.

விமானங்களில் பயணி களை ஏன் சீட் பெல்ட் அணியச் சொல்லிக் கட்டாய ப்படுத்து கிறார்கள் . . .

விமானங்களில் குறிப்பிட்ட சீட்கள் குறிப்பிட்ட நபர்களுக்காக ஒதுக்கப்பட்டாலும் விமானத்தின் போர்டிங்கின் போது பயணிகள் விருப்பப்பட்டு சீட்களை மாற்றிக்கொள்கிறார்கள். இதற்கு விமானப்பணியாளர்கள் உதவி செய்கிறார். இரு பயணிகளுக்கும் அதில் ஆட்சேபனை இல்லாத சமயத்தில் இந்த மாற்றம் தாராளமாக நடக்கிறது.

விமானங்களில் பயணி களை ஏன் சீட் பெல்ட் அணியச் சொல்லிக் கட்டாய ப்படுத்து கிறார்கள் . . .

அதே போலச் சிலர் விமானத்திற்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்டுவிட்டால் சீட் பெல்ட் போட்டிருந்தால் அவர்களை வெளியேற்றுவது என்பது கடினம் அதனால் பலர் சீட் பெல்டை அணிய மாட்டோம் என மறுக்கிறார்கள். ஆனால் விமான பயணத்தில் இப்படி விபத்து ஏற்பட்டால் சீட்பெல்டை கழட்டுவது என்பது ஒன்றும் சிரமம் கிடையாது. எளிதாகக் கழட்டிவிடலாம் என்பதால் இது ஒரு பெரிய பிரச்சனையில்லை.

விமானங்களில் பயணி களை ஏன் சீட் பெல்ட் அணியச் சொல்லிக் கட்டாய ப்படுத்து கிறார்கள் . . .

இதனால் நீங்கள் விமானத்தில் பயணிக்கும் போது சீட்டில் அமர்ந்திருந்தால் எப்பொழுதும் சீட் பெல்ட் அணிந்த படியே அமர்ந்திருப்பது தான் பாதுகாப்பானது.

விமானங்களில் பயணி களை ஏன் சீட் பெல்ட் அணியச் சொல்லிக் கட்டாய ப்படுத்து கிறார்கள் . . .

சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் திடீரென ஏற்படும் சிறு விபத்து அல்ல டர்புலன்ஸ் காரணமாக உங்களுக்குக் காயம் அல்லது படுகாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தான் விமானத்தில் பயணிகளைக் கட்டாயம் சீட் பெல்ட் அணியச் சொல்கிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, August 19, 2022, 13:42 [IST]
English summary
Why you should always wear a seat belt on flights know full details
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+